New Novel_S.Jovitha_காற்று வரும் ஜன்னலில் ஓர் காதல் Chp 101-125
101
இறுதி சந்திப்பில் உன்னை பார்த்து
நான் பேச்சிழந்து நிற்கும் பொழுது கூட,
ஓர் காதல் முழுமை பெறாமலேயே என்னை மூர்ச்சையாக்கும்
என்று நினைத்துப்பார்த்ததில்லை!
முண்டியடித்துக்கொண்டு மண்டியிடத் துடிக்கும் மனதை
எதைப்பிடித்து கட்டிவைக்க? எனத் தெரியாது
முழுபௌர்ணமியே தோற்றுவிடும் உன்னிடம்,
நான் மட்டும் வென்றுவிடும் முயற்சியில்!
துடித்துக்கொண்டிருக்கும் இதயத்திடம் துவண்டு போய் கேட்குறேன்,
நீ துளிர வைத்த காதலை மிளிர வைக்க வழியில்லை !
மங்கி துருப்பிடித்து இருப்பிடம் தெரியாது போகுமா?
இல்லை என்னை உருக்குலைத்தே பார்க்குமா?
பதிலேதும் சொல்லாது கனமாய் இதயமும், மௌனமாய் நானும்,
ஊமையாய் என் காதலும், என்றும் நீ காற்று வாங்கும்
ஜன்னலின் காவல் இருக்கும் ஓர் சாபம் யார் இட்டதோ?
சஸ்விஹா இந்தியாவின் மண்ணில் காலடி வைத்ததும் வந்துவிட்டேன். என ஒரு தகவல் நண்பர்களுக்கும், அக்ஷ்ரனுக்கும் அனுப்பியதோடு சரி. அதன் பின் அவளைப்பற்றிய எந்த தகவலும் இல்லை. அக்ஷ்ரனுக்கும் அவள் விமானநிலையத்தில் பேசிய பேச்சும், அவளது அந்த முகமும் தான் கண்ணுக்குள் நிறைந்திருந்தது.
அந்தப்பேச்சு பேசிவிட்டு போனவளை நினைக்கவே கூடாது என முடிவு எடுத்தான். அவனிடம் வந்து வேலை செய்துவிட்டு நாடு திரும்பினாலும், அது அவர்களுக்கும், அவனுக்கும் இனிய பயணமாகவே அமைந்திருக்கும். அதிலும் பெண்கள். ஆசிய நாட்டுப்பெண்களோ ஆப்பிரிக்கா பெண்களோ, எந்த நாடு திரும்பினாலும், ஏதாவது ஒரு பண்டிகை வைபவத்துக்கு வாழ்த்துகள் அனுப்புவதும், பேசுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்குறது.
பலருக்கு அவனே அவர்களின் நாட்டில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுத்தும் இருக்கிறான். அதே போலவே சஸ்விஹாவிடம் அணுகி, நல்லா மூக்கு நுனி சிவந்தது இது தான் முதல் முறை என உணர்ந்தும் கொண்டான். அவள் மட்டுமே எல்லாவிதத்திலும் விதிவிலக்காக இருப்பதை எண்ணி அவன் மனது பாராட்டவும் செய்தது.
இருந்தாலும் அந்த வார்த்தையை எதுக்காக தன்னிடம் பேசிவிட்டு போனாள்? எனும் கேள்வி அவனைக் குடையாமல் இல்லை. அதே நேரம் அவளது வாழ்க்கை எந்தவிதத்திலும் பாழாகக்கூடாது, கேள்விக்குறியாய், மீண்டும் அவள் துன்பப்படக்கூடாது என அவன் கடவுளிடமும் வேண்டாத நாள் இல்லை.
அவளிடமிருந்து திருமண அழைப்பு வரும் எனக்காத்திருந்தான். செரீனாவிடமும் விசாரித்தும் கொண்டான். அவளும் தமக்கு அதன் பின் ஒரு தகவலும் வரவில்லை என கவலையுடன் சொன்னதும்,
“ஒருவேளை கல்யாண வேலையில் பிசியாக இருப்பாங்க” என அவளை சமாதானம் செய்வது போல தன்னையும் சமாதானம் செய்துகொண்டான்.
இந்தியா.
புதுவீட்டின் அழகைப்பார்த்தவள் சஸ்விஹா மனது தனது உழைப்பில் உருவான வீடு என ஒரு பெருமிதம் தோன்றியது. மீனாட்சியின் குடும்பமும், தனது பெற்றவர்களும் ஒன்றாக குடிகொண்டிருப்பதை பார்த்தாள். விமான நிலையத்திலிருந்து அவள் நேராக அங்கேயே அழைத்து வரப்பட்டாள்.
அப்பாவின் கடனும் அடைத்து, அவரின் கனவும் நிறைவேறியதை நினைத்து கண்கள் பனிக்க அந்த வீட்டினையும், அவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
நன்றாக தூங்கி எழுந்த பின்புதான மற்றது எல்லாம் என நினைத்தவள், அப்பொழுது தான் கவனித்தாள் வைதேகியை தவிர்த்து, தந்தை தன் முகமே பார்க்கவில்லை, மற்றவர்கள் எவரும் அவள் முகத்தை ஏறிட்ட விதம் புதிதாக இருப்பதை .
சத்தியனைக் காணவில்லை. அவள் அவன் எங்கே? என சம்பிரதாயத்துக்காகத் தன்னும் கேட்கவில்லை. அவள் வந்து மேலும் இரு நாட்கள் கழிந்தது. வித்தியாவுக்கு தகவல் அனுப்பி இருந்தாள் “கொஞ்சம் மனதும், உடலும் நார்மலாகட்டும் வருகிறேன்” என.
தாயின் மடியில் தலை வைத்து ஹாலில் இருந்த சோபாவில் படுத்திருந்தாள். மேல் மாடியில் இருக்கும் மூவரும் மறந்தும் கீழே வராமல் இருப்பதை கவனித்தாள். ஏனோ என அவளுக்குள் கேள்வி எழாமல் இல்லை. தந்தை மட்டும் மூச்சு வாங்க மாடி போவதும், வருவதுமாக இருப்பதையும் கவனித்தாள்.
அன்னையிடம் கேட்ட போது பதில் திருப்தியாக இல்லை. என்னவோ விஷயம் இருக்கு என மட்டும் புரியவும், அவளும் தொடர்ந்த நாட்களில் அதை கணக்கில் எடுக்காது விட்டும் விட்டாள்.
அவளின் மனமோ எவ்வளவும் முயன்றும் அக்ஷ்ரனை மறப்பேனா? என சண்டித்தனம் செய்தது. போதாததற்கு தனது மொபைலில் இருந்த படங்களை தட்டி, தட்டிப் பார்த்துப், பார்த்து ஒரு கட்டத்தில் அதுவே தனக்கு மன உளைச்சலை தருவது போல உணர ஆரம்பித்தாள்.
‘வேண்டாம்’ என வீறுகொண்டு ஒரே மூச்சாக அத்தனையையும் அழித்தவள், அதன் பின் உண்டான மன அழுத்தத்தில் புழுங்கி, இரவில் தூக்கம் தொலைக்கவும்,
“ஈஸ்வரா இங்கேயிருந்து ஒரு பிரஷரை குறைக்க அங்கே போய், இப்போ காலத்துக்கும் மருந்து இல்லாத ஒரு உணர்வுக்குள் விழுந்து உழன்று கொண்டு இருக்கிறேனே..என் ஆயுட்காலம் முழுதும் நிம்மதியிழந்து தவிக்கத்தான் சபிக்கப்பட்டு இருக்கேனா?” என கேட்டு அழுது தீர்த்தவள்,
“எழுந்திருடி! இப்படியே வீட்டுக்குள் இருந்தா அவனோட நினைவு வந்து கொல்லத்தான் பார்க்கும். போ! அடுத்தது என்ன? ஒரு வேலை தேடணும்ன்னு சொன்னியே.. தேடு! முதல்லே வித்தியைப்பார்த்து பேசு!” என தனக்குள் சொல்லி முகத்தை அடித்துக் கழுவினாள். கூடவே அக்ஷ்ரனின் நினைப்பையும்.
“கொஞ்சம் கொஞ்சமாக உன்னை கழுவி என் மனச சுத்தமாக்கிடணும்! ஆக்கிடுவேன்டா!” என இல்லாத அவனைப்பார்த்து சீறியவாறு தன்னறை விட்டு வெளியே வந்தாள் .
எப்பொழுதும் ஏதாவது ஒரு புரொஜெக்ட். தோழிகள் அரட்டை கூட இந்த இரண்டு வருடம் வாழ்ந்துவிட்டிருந்தவளுக்கு, இந்தியா வந்து ஒரு வாரத்தில் தன்னால் ஒரு நொடி கூட சும்மா இருக்க முடியாது என தோன்றியது. இருந்தால் மூளையும், மனதும் அக்ஷ்ரனின் நினைவுகளால் உழன்று தன்னை உருக்குலைக்க கங்கணம் கட்டுகின்றன என புரிந்தது. அதற்கு அவள் இடம் கொடுக்கவும் தயாராக இல்லை.
***
தந்தை ஹாலில் அமர்ந்திருக்கவும்,
“அப்பா எனக்கு என்னவோ போலிருக்குப்பா.. வெளியே வித்யா வீட்டுக்கு போயிட்டு, அப்படியே வழக்கமாக போகும் கோயிலுக்கும் போயிட்டு வந்திடுறேன்” என சொல்லவும், விநயாகமூர்த்தி சொன்னதைக்கேட்டு அதிர்ந்தாள்.
“சத்தியன் திரும்பி வரும் வரை நீ வெளியே எங்கேயும் போகவேண்டாம்” என்றார் மகளைப்பாராது, வேறு எங்கோ பார்த்துக்கொண்டு. அவளுக்கு அந்த தந்தையும் புதிது, அவரது தோரணையும் புதிதாக இருக்க,
“என்னப்பா?” என அவர் அருகே வரவும், அவர் சட்டென்று எழுந்து, சரியான சால்வாயை சரிபார்ப்பது போல பார்த்து,
“அவன் வரட்டுமே” என சொல்லியவாறே வெளியே கிளம்பிப்போனார். அவள் குழப்பமான பார்வையுடன் பின்னால் தவிப்புடன் நின்றிருந்த அன்னையிடம்,
“என்னம்மா?” என கேட்டகவும் அவர் என்னவென்று சொல்லி தன்மானம் உள்ள மகளின் மனசை சாகடிப்பது? என கலங்கியவாறு,
“ஒண்ணுமில்லம்மா! அவன் வரட்டுமேன்னு அப்பா சொல்றாரே.. நீ ரெஸ்ட் எடுத்துக்கோ” என்றார்.
“அம்மா இந்த ஒரு வாரமா அதைத்தான் செஞ்சு முடிச்சு இருக்கேன். இனி நான் அடுத்த ஸ்டெப்புக்கு போகணும்.. இல்லைன்னா உங்க பொண்ணை இழந்துடுவீங்க” என்றாள் அவளுக்குள்ளே உருவாக்கிக்கொண்டிருக்கும் மன அழுத்தத்தின் வீரியத்தை உணர்ந்து. அவரோ,
“அம்மாடி என்ன பேச்சு பேசிகிட்டு இருக்கே?” என கடிந்து கொள்ளவும், வெளியே வாசலில் பைக் உறுமும் சத்தம் வர திரும்பினாள். வைதேகி கண்களில் ஏகத்துக்கும் கலக்கம் தென்பட்டது. சத்தியன் வந்து கொண்டிருந்தான். அவனது தோற்றத்தை பார்த்து சஸ்விஹா முகம் எட்டு, ஒன்பது, பத்து கோணல்களுக்கு போய் திரும்பி தன்னிடத்துக்கு வந்தது.
´பீர் நிறைத்து வயிறு, பானை போல உருவம் எடுத்ததா? இல்லை பானை வடிவ பீர் பாட்டிலை முழுங்கி ஏப்பம் விட்டுகிட்டே இருந்திருக்கிறானா?´ என அவள் தனக்குள் கேட்டு முகம் திருப்பினாள்.
உடல் பருத்து, முகம் எங்கே என தேடவேண்டும் போல இருந்தான். காட்டுத்தனமான தாடியும் மீசையுமாக. அவளுக்கு வாந்தி வந்தாலும் வந்துடும் போல தோன்றியது.
´ஒரு பிஸினஸ் தொடங்கியதும் ஆளே மாறி இருப்பான்னு நினைச்சா இந்த மாதிரி மாறி இருக்கானே..குடியும், கும்மாளமும் நல்லாத்தான் வேலையைக்காட்டி இருக்கு’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டாள். அவனோ அவளை பார்த்த பார்வையில் பல ஆயிரம் சந்தேகப்பேய்களின் சாத்தான் தெரிய, அவளை ஒரு சுற்று சுற்றி வந்தான்.
“ரெண்டு வருஷ பாரின் வெண்ணெய் உன் பாடியில நல்லாவே விளையாடி இருக்குடி!” என சொல்லி அவளது கன்னத்தை தட்டவும், அவளுக்குள் அருவருப்பு உண்டானது. அருகே அன்னை முகம் திருப்பியதையும் கவனித்தவள், அவன் மீண்டும் கன்னத்தை தொட வர, தன்னிச்சையாக அவள் விலகி நின்று கொண்டாள்.
“பார்றா மாமன் தொட்டதும் வெட்கம் வரும்ன்னு பார்த்தா.. மூஞ்சில என்னடி இந்த ரியாக்ஷன்?” என்றான் ஒரு சீறலுடன்.
‘போதுமடா பிரம்மா! நான் வந்த பிளைட் தீப்பிடிச்சு இருந்தா நான் சாம்பலாகியிருப்பனே’ என அவள் மனது சொல்ல, ‘நீ சாம்பலாகுறதுக்கு கூடவே அறுநூறு பேரும் வேணுமா?´ என மனசாட்சி உலுக்கியது.
´மனசு பூரா அங்கே இருப்பவனை சுமந்துக்கிட்டு இவன் மூஞ்சியைப்பார்த்து வெட்கம் காட்டி, வேஷம் போட்டு, மோசம் போகச் சொல்றியா?’ என அதையும் அடக்கினாள். சத்யனோ,
“வா வெளியே போயிட்டு வரலாம்” என அவன் அவளின் கரம் பற்றவும், அவளுக்கு அருவருக்கத்தக்க ஒன்றை தொட்ட உணர்வு. சட்டென்று கரத்தை இழுத்து துப்பட்டாவில் துடைத்துக்கொண்டு,
“எங்கே?” என்றாள். அவன் அவளது செயலில் அவமான கூடையை தலையில் கொட்டிய உணர்வில்,
“சொன்னாத்தான் வருவியளோ ? வாடின்னா… வரணும்!” என கர்ஜித்தான். அவளின் கரங்கள் அவளையும் அறியாது, இரு காதுகளையும் மூடிக்கொண்டு கண்களையும் மூடியது.
கண்ணியமான குரலை, மனதின் உணர்வுகளை வருடும் குரலை, கேட்டு பழகியவள். அதிகாரம் செய்தாலும், ஒரு அன்பான ஆண்மை கலந்து, அடுத்தவர்களை ஈர்க்கும் குரல் கொண்டவனோடு இரு வருடங்கள் கழித்தவளுக்கு, தன் மனதினை வென்றவன் குரல் வளத்தை முன் நிற்பவனின் குரல் வளம் வெட்டி, வெட்டி புதைப்பது போல ஓர் உணர்வு.
’தென்றல் வந்து தீண்டி கவிபாடத்தூண்டும் அருகாமை உன் அருகாமை.. உன் கூட வாழ்நாளை கழித்தவளுக்கு. அதை அடித்து கழுவி, கொலை வெறி தூண்டும் அருகாமை இவனோடது.. எப்படி நான் ஏற்றுக்கொள்வேன்?’ என அவள் தனக்கு எண்ணிக்கொண்டவள்,
“சத்தியா! உங்களுக்கு பொண்ணுங்ககிட்டே எப்படி பிகேவ் பண்ணனும்ன்னு மேனஸ் தெரியாதா?” என அவள் கடுமையான குரலில் கேட்கவும், அதுவரை வெளியே இருந்த விநாயகமூர்த்தி, அங்கே இருந்தவாறே,
“சஸ்வி! சத்தியன் கூட போம்மா! அவன் சொல்றபடி கேள்!” எனவும் அவளுக்கு ஆத்திரம் பொங்க, விடுவிடுவென வெளியே வந்தவள்,
“நீங்க இங்கே தான் இருக்கீங்களா? ஏம்பா போ! போன்னு சொல்றீங்களே.. எங்கே? எதுக்குன்னு ஒருத்தி தெரிஞ்சுக்க கூடாதா? சொன்ன நான் வரமாட்டேனா? அப்படி வர மறுக்கிற இடமா?” என அவள் இயலாமை, கோபம், ஆத்திரம், அழுகை எட்டிப்பார்க்க கேட்டாள்.
‘பெண்கள் அழுவது எனக்கு பிடிக்காது’ என வந்து நின்று சொன்னான் அக்ஷ்ரன் அவளது மனதில்.
‘இவன் ஒருத்தன் என் உயிரை எடுத்துக்கிட்டு.. போடா!’ என அவனை மனதில் இருந்து விரட்டிவிட்டு, தந்தையை விழிநீரை சுண்டிவிட்டவாறு ஏறிட்டாள்.
அவர் மகளைப் பாராமலேயே, “போயிட்டு வாம்மா!” என்றார் ஒரு நொந்து போன குரலில். அவளுக்கு எதுவோ சரியில்லை என புரிந்ததது. மனமோ,
´போடி! போ’ போயிட்டு வா! என்ன பண்ணிடப்போறான்? எங்கே கூட்டிப்போறான்? உன்னை மீறி என்ன செய்துட முடியும்? போய்த்தான் பாரேன்!’ என்றது. அவளும் ´பார்த்துடலாம்’ என தனக்குள் சொல்லிக்கொண்டவள், சத்தியன் பக்கம் திரும்பி,
“போலாம்” என்றாள் ஒரு முடிவோடு.
அவளது குரலும், அவள் சொன்ன தோரணையும், மாடியில் இருந்த பார்த்த மூவருக்கும் தலைவலி கொடுத்தது. சத்தியன் அவளை எரித்தவாறு பார்த்து, வண்டியில் ஏறினான். அவளும் தனது மனதையும் உணர்வுகளையும் பார்த்து,
‘கண்ட்ரோல் பண்ணிக்கோங்க! விதி வலியது’ என சொல்லிவிட்டு பட்டும் படாமல் ஏறிக்கொண்டாள். அதன் பின் என்ன? எங்கே? எதுக்கு? என ஒரு வார்த்தை தன்னும் அவள் வாய் திறந்து பேசவில்லை.
102
அவன் வண்டி நின்ற இடம் பார்த்து நிமிர்ந்தாள். ஒரு நர்ஸிங் ஹோம் முன் நின்று இருந்தது.
‘இங்கே கூட்டி வந்து…யாருக்கு என்னாச்சு? ஒருவேளை அப்பாவுக்கு ஆபரேஷன் பண்ற விஷயமா பேச கூட்டி வந்து இருக்கானோ? இதை சொல்லி இருந்தா நான் ஏண்டா வீம்பு பண்ணிக்கிட்டு இருந்திருக்கப்போறேன்?’ என கேள்விகளும் கேட்டு, பதிலும் சொல்லியவாறு அவனை பின் தொடர்ந்தாள்.
அவன் முன்கூட்டியே பதிவு செய்திருப்பவன் போல நேராக அவளை அழைத்துக்கொண்டு ஒரு பெண் டாக்டரின் முன் வந்து நின்றான்.
“டாக்டர் நான் சொன்னேன்ல.. அது இவ தான்” என அவரிடம் சொல்லிவிட்டு, இவள் பக்கம் திரும்பி,
“ம்ம் போ! நான் வெளியில வெயிட் பண்றேன்” என அவன் நகரவும், அவள் புரியாது,
“சத்தியா! எதுக்கு?” என கேட்க தொடங்க முன், அவனோ சினத்துடன்,
“மூடிக்கிட்டு போடி! அவங்க பார்த்துப்பாங்க” என அடுத்தவர் முன் மரியாதை இல்லாமல் பேசிவிட்டு போனான். சஸ்விஹாவுக்கு முகம் கன்றியது.
டாக்டர் அவளை வாஞ்சையுடன் பார்த்து “கொஞ்ச நேரம் தான் வாம்மா!” என அவர் படுக்கையை காட்டவும், அவள்,
“டாக்டர் ப்ளீஸ்! நீங்களும் ஒரு பெண்.. என்னைப் புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்குறேன்.. என்ன செக்கப்? எதுக்கு?” என வினவவும் அவரும் நெற்றியை தடவிவிட்டு,
“உனக்கு எல்லாம் சொல்லி கூட்டி வருவதாக சொன்னார். ஏன் நீ இப்படி குழம்பிப் போய்?” என அவர் எதிர்கேள்வி கேட்டார். அவள் மறுப்பாக தலையாட்டி
“அய்யோ டாக்டர்! அவன் ஒரு சைக்கோ! எதுவும் சொல்லாம என்னை கூட்டி வந்திருக்கான். ப்ளீஸ் உங்க கையை காலா பிடிச்சுக்கேட்கவா? இல்லை காலிலேயே விழணுமா? சொல்லுங்க!” என அவள் மன்றாட்டத்துடன் கலங்கவும்,
“இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான்” என திட்டியவர் அவளைப் பார்த்து ஒரு மூச்சு இழுத்து விட்டு,
“நீ வெர்ஜினான்னு செக்கப் பண்ணி சொல்ல சொன்னார்” அவர் சங்கடத்துடன் சொல்லியதும், சஸ்விஹா,
“நோ!” என அலறிவிட்டாள். அதைப்பார்த்து அவர் கலங்கிப்போனார். மானம், ரோஷம், பண்புள்ள எந்தப் பெண் என்றாலும் அதிர்ந்து தான் போவாள். சஸ்விஹாவுக்கு அதிர்ச்சி அல்ல, பேரதிர்வு! பூகம்ப அதிர்வு!.
“நீ பீல் பண்ணுவதுக்கு, நானோ என்னோட நர்ஸிங் ஹோமோ, எந்தவிதத்திலும் காரணம் இல்லை. நீ ரெண்டு வருஷம் பாரினில் இருந்ததாகவும், உன்னை அவர் கல்யாணம் பண்ணப்போறதாகவும், அதுக்கு முன்னாடி அவருக்கு..” என அவர் விளக்கம் கொடுக்க முனையவும், சஸ்விஹா காதுகளை பொத்தியவாறு,
“போதும் டாக்டர்! எத்தனை நூற்றாண்டு போனாலும் மாற்ற முடியாத மெண்டாலிட்டி. டாக்டர் ப்ளீஸ் இனி எந்தப்பெண்ணையும் எவனாச்சும் ஆம்பிளை இழுத்துகிட்டு வந்தா, செக்கப் எனும் பேரில இப்படி உயிரோடு புதைக்குற தண்டனையை கொடுத்திடாதீங்க!” என கண்கள் நிறைத்த நீரோடு கெஞ்சவும்,
“நாங்களா இது செய்வதில்லைம்மா.. அநேகமான ஆண்கள் அதுவும், பாரின்ல இருந்து பொண்ணு வந்தா இந்தக்கொடுமைக்குட்படுத்தப்படுறாங்க..”
“…”
“அதை விட கொடுமை பாரினுக்கு படிக்கப்போன மகளை, அவ பேரன்ட்ஸே அழைச்சுட்டு வராங்க. கேட்டா…அலையன்ஸ் பார்க்கிறோம்ன்னு சொல்றது, மாப்பிளை வீட்டுக்காரங்க கேட்க முதல், சர்டிபிகேட் எடுத்தா நல்லதுன்னு ஒரு விவரம் கெட்ட பதில்” டாக்டர் சொல்லவும்,
“ச்சே.. நான் வர்றேன் டாக்டர்” என அவள் வெளியே ஓடிவரவும், சத்தியன் சிகரெட் வளையத்துக்குள் எதையோ தேடிக்கொண்டிருந்தான். இவள் ஓடி வருவதை பார்த்து,
“அதுக்குள்ளே முடிஞ்சுதா?” என யோசித்தவாறு சிகரெட்டை காலுக்கு அடியில் நசுக்கிவிட்டு, அவளைப்பார்த்து,
“ஏய் என்ன அதுக்குள்ளே?” என அவன் கேட்க முன், ஆவேசமாக வந்தவள், ஓங்கி ஓர் அறை அறைந்தாள். அத்தனை பேரும் திரும்பிப்பார்க்க, சத்தியன் கன்னத்தைப் பிடிக்க, அவளோ அதே சீற்றத்துடன்,
“முதல்லே நீ வெர்ஜினான்னு ப்ரூவ் பண்ணுவியா? ஒருத்தி மேலேயும் பாயலைன்னு ப்ரூவ் பண்ணுடா! ..த்தூ!” என அவன் முகத்தில் துப்ப வந்து, தரையில் துப்பிவிட்டு, அவனது பதிலுக்கு கூட காத்திராது, ஆட்டோவில் ஏறி பறந்தும் விட்டாள். அவனோ, அடிபட்ட நாகமாக மாறி வண்டியை உதைத்தான்.
103
சஸ்விஹா ஆட்டோவில் இருந்து இறங்கி, வேகமாக நுழையவும், பின் தொடர்ந்த சத்தியன், வண்டியை அப்படியே போட்டுவிட்டு, எட்டி முன் சென்றவள் கரம் பிடித்து, அவள் எதிர்பாராத போதே கன்னத்தில் பல பளார்கள் கொடுக்கவும், சஸ்விஹாவினை பெற்றவர்களோ விக்கித்துப்போனார்கள். விநாயகமூர்த்தி ஓடிவந்து,
“சத்தியா! என் கண் முன்னாடி.. என் பொண்ணை” என அவர் அவனை தடுத்து நிறுத்தவும்,
“மாமா! நடு ரோட்டில எல்லார் முன்னாடியும், உங்க பொண்ணு என்னை அறைஞ்சுட்டு வந்து இருக்கா.. இவளுக்கு ஆரத்தி எடுக்க சொல்றீங்களா?” என அவரிடமும் பாய்ந்தான். மகள் செய்திருப்பாள் தான் என அறிந்தவர் அவளை நிமிர்ந்து பார்க்க திராணியற்று நின்று இருந்தார்.
அவளுக்கோ அடி வாங்கிய வலிகளை விட, தந்தையின் தலைகுனிவும், தன்னைப் பார்க்கவே விருப்பமில்லாமல் வேறு எங்கோ பார்க்கும் தோரணையும், கண்டு கண்கள் குளமாக, அவர் முன்னால் வந்து, அவரது முகத்தை தொட்டு தன் முகம் பார்க்க நிமிர்த்தினாள். அவள் விழிகள் ஆயிரம், ஆயிரம் கேள்விகளோடு அவரை ஏறிட்டது. பின் உதடு திறந்து,
“என்னப்பா நடக்குது? ஏம்பா என்னை உயிரோடு புதைக்குற சோதனை?” அவள் விழிகள் நிறைந்ததால் தந்தை மங்கலாக தெரிய கேட்டாள். அவரோ தொப்பென்று சோபாவில் அமர்ந்துவிட்டார். அவர் முன் முழங்காலிட்டு அமர்ந்தவள், குனிந்திருந்த தந்தையின் தலையை பிடித்து, தன்னைப்பார்க்க வைத்தவள்,.
“என்னைப்பார்த்து சொல்லுங்க! இந்த சந்தேகம் இதோ இந்த காட்டுமிராண்டிக்கா? இல்லை உங்களுக்குமா?” என அவள் கேட்டதும் சத்தியன்,
“என்னடி காட்டுமிராண்டின்னு மரியாதை இல்லாம பேசிகிட்டு?” எதையாச்சும் உதைப்பதே உருப்படியான ஆம்பிளைக்கு அழகு எனும் நினைப்பில் காலைதூக்கினான் அவளை உதைப்பதற்கு. பெற்றவர்கள் அதிர, அவளோ அசையாது,
“தூக்குற காலை வெட்ட நான் யோசிக்க போவதில்லை. நான் என் அப்பாகிட்டே பேசிகிட்டு இருக்கேன். குறுக்கே நீ யாரு?” என அவனைப்பார்த்தது சீறினாள். மாடியில் இருந்து பார்த்த மீனாட்சி தொப், தொப்பென ஓடிவந்து,
“அய்யோ! அய்யோ! பார்த்தீங்களா அண்ணா எப்படி மாறிப்போய் வந்திருக்கான்னு? என் புள்ள சொன்னது எல்லாம் உண்மைன்னு இப்பவாச்சும் புரியுதா?” என தமையனை உலுக்க, சஸ்விஹா புரியாது, தவிப்புடன் இருக்கும் தாயையும், எப்பொழுதும் தன்னைப்பார்க்கும் சசிரேகாவின் கடு கடுவென முகத்தில் ஏகத்துக்கும் அருவருப்பு பூத்திருப்பதையும் பார்த்தாள்.
பின் மீனாட்சியைப் பார்த்து,
“உங்க புள்ள என்ன சொன்னார்? எது உண்மைன்னு நீங்க அரங்கேற்றம் போடுறீங்க?” அவரிடம் அவளின் சீற்றம் திரும்பியது. அதைக்கண்டு உள்ளுக்குள் மீனாட்சி பயந்தாலும், மகன்களும், அண்ணனும் இருக்கும் தைரியத்தில்,
“என்னடி சீறுறே? உன்னை பாரினுக்கு வேலை பார்க்கத்தான் அனுப்பினோம். அந்த முதலாளி கூட *** என அவர் ஒரு வார்த்தையை அத்தனை பேர் முன் துப்பவும், விநாயகமூர்த்தி நெஞ்சைப்பிடித்தார். வைதேகி சேலைத்தலைப்பால் அழுகையை அடக்கினார். சஸ்விஹா, அவள் ஒட்டு மொத்த தீப்பிழம்பு நெஞ்சில் கொட்டியது போல துடித்துப்போய்,
“அத்தே!” என அதட்டவும்,
“என் அம்மாவை எதுக்குடி அதட்டுறே? உன் மேல எவ்ளோ நம்பிக்கை வைச்சு அனுப்பினேன். இப்ப சோரம் போய் வந்து இருக்கியேடி! த்தூ!” என அவன் துப்பவும், சஸ்விஹா கொதித்துப்போய் இருந்தவள்,
“சத்தியா! வேண்டாம்” என் விரல் நீட்டி எச்சரித்தாள்.
“ஏய்” என அதை தட்டிவிட்டு, தனது மொபைலை எடுத்தான். வாட்சப் திறந்து,
“இதப்பாருடி உன் லீலைகளை! எல்லாம் புரியும்டி..! என்னால நையா, பைசா லோன் எடுக்க முடியாதுன்னு அந்த குதி, குதிச்சவளுக்கு, அடுத்த செகண்டே அள்ளி, அள்ளி, கொடுத்து, வீடு ஒழுங்கா கட்டுப்படுதான்னு செக்கிங் பண்றதுக்கு ஆளை வைச்சு, பணமா தந்துகிட்டு இருந்திருக்கிறான் அந்த பொம்பளை பொறுக்கி அச்சரன் ! அவன் உன் உடம்பு மேல எவ்ளோ தரம் மேஞ்சு இருந்தா இப்படி ஒரு வீடு, அதுவும் போன மூணு மாசத்துல முடிஞ்சுது?” என அவன் நாக்கில் நரம்பை அறுத்தவன் போல பேசவும், சஸ்விஹா மறுப்பாக தலையாட்டியவாறே, காதுகளை பொத்திக்கொண்டு,
“சத்தியா தப்பு.. தப்பா பேசுறீங்க!” என அலறினாள். பெற்றவர்கள் முகம் பேயறைந்தது போலிருக்க, அவனோ,
“தவறிப்போனவ நீ! என்னை தப்பா பேசுதுன்னு சொல்றியா?” என உறுமியவன்,
“பாருடி!” என அவனது வாட்சப்பை திறந்து காட்டவும், சஸ்விஹா வாய்பொத்தினாள். கண்களோ அதிர்ச்சியில் வெளியே விழுந்து விடும் போலிருந்தது. அவளும், அக்ஷ்ரனும் கண்கொண்டு பார்க்க கூசும் படுக்கை அறை காட்சிகளின் படங்களும், அவனது வீட்டில் கொண்டாடிய நத்தார் படங்களும் என அது நிறைந்து வழிந்தது.
“நோ!” என அவள் பெரும் சத்ததுதுடன் அலறி, அதை தட்டியும் விட்டாள். உடல் வெட, வெடக்க விழுந்துவிடுவாள் போலிருந்தது. நெஞ்சுப்பகுதியில் குத்திய வலியினை பற்களால் கடித்து அடக்கி, ஒரு மூச்சினை இழுத்து விட்டு, ஆவேசமாக அவனது சட்டையை கொத்தாக பற்றியவள்,
“டேய் இந்த அருவருப்பான வேலை பார்த்தவன் ஒரு தகப்பனுக்கு பிறந்திருக்கவே மாட்டாண்டா!” என அவனைப் பார்த்து சீற, அவன் அவளை எரித்துவிடுவது போல பார்க்க,
“இதப்பாரு! இந்த பாழாய்ப்போன டெக்னாலஜியை கொஞ்சம் கத்துக்கோ! அதைப்பத்தி தெரிஞ்சுக்கோ! எவனோ எவ கூடவோ இருந்ததையெல்லாம் எடுத்து, யாரை பழிவாங்க, யாரோ பண்ண வேலைக்கு நான் பலியா?”அவள் சீற்றத்தின் உக்கிரம் தாங்க முடியாது மீனாட்சி மிரளவும், அதைப்பார்த்து சத்தியன்,
“ஏய்”
“சீ பேசாதே! உனக்கு சேர்ந்த கூட்டமோ, இல்லை உன்னை பார்த்து பொறாமைப்படும் கூட்டமோ, உனக்கு மூளை சலவை செய்து இருக்கு. ஏண்டான்னு அவங்ககிட்டேயே கேட்டுக்கோ! எனக்கு கவலையில்லை.. ஆனா என் மேலயும், அக்ஷ்ரன் மீதும் அபாண்டமா பழி சுமத்த நான் அனுமதிக்கமாட்டேன்” என அவள் எச்சரித்து சொல்லிவிட்டு, தந்தை பக்கம் திரும்பியவள்,
“புரியுதுப்பா ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் சந்தேகம் எதன் மீதுன்னு? ரொம்ப நன்றிப்பா..”
“….”
“இந்த ஜெனரேஷனிலே தப்பி பிறந்திருக்கேன்னு என் பிரண்ட்ஸ் என்னை பாராட்டி புகழும் போதெலலாம் பெருமையாக இருந்திச்சு.. ஆனா இப்போ வேதனையா இருக்கு. ஏண்டா இப்படியொரு பிறப்போடு உங்களுக்கு மகளா வந்து பிறந்தேனோன்னு…?” மூச்சு விடாது சொல்லிக்கொண்டு வந்தவள் வெடிக்கப்பார்த்த அழுகையை, உதட்டைக்கடித்து அடக்கிவிட்டு தொடர்ந்தாள். அங்கே யாரும் வாய் திறக்க அறுகதையற்று நின்று இருந்தனர்.
“உங்க எல்லோருக்காகவும், என் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்காது, என ஆசைகள், கனவுகளுக்கு நீர் ஊற்றாது, உங்க நினைவே ஒன்றே என் மனதிலும், மூளையிலும் பதித்து, உங்களுக்காக, அந்த அந்நிய நாட்டில், அரை நொடி தன்னும் நிம்மதியாக கண் மூடாது, போனது எப்படியோ அப்படியே திரும்பி வந்த என்னை..”
“….”
“நிற்க வைச்சு, உயிரோடு சமாதி கட்டி, சாகடிச்சுட்டீங்க! என்னோட மனசை, உடலை, உணர்வுகளை, அத்தனையும் நடைபிணத்துக்கு தாரை வார்த்து கொடுத்துட்டீங்க..! சந்தோஷம்! ரொம்ப, ரொம்ப சந்தோஷம்! சுயநலமே என்னவென்று தெரியாம, குடும்பத்தின் நலம் பார்க்குற என்னைப்போல பொண்ணுங்க இனி பிறக்கவே வேண்டாம் ”
“….”
“நான் என்னமோ நினைச்சு நாடு திரும்பினேன். ஆனா ஏண்டா விமானத்தின் கதவை திறந்து அங்கேயே கடலில் குதிக்கலைன்னு பீல் பண்றேன்” அவள் சொல்லிவிட்டு மடங்கி உட்கார்ந்து முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழவும், விநாயகமூர்த்தி இடிந்து போய் பேச்சிழந்து அமர்ந்திருந்தார். அவர் கண்களில் இருந்து ஆறாக வழிந்து கொண்டிருந்தது.
104
வைதேகி வயிற்றில் அடித்து,
“பாவிகளா! போதும் உங்க சந்தேகத்துக்கு அளவே இல்லாம என் பொண்ணை அழவைச்சுட்டீங்களே.. நல்லா இருங்கடா!” என வைதேகி கத்தவும், சஸ்விஹா முகத்தை துடைத்துவிட்டு, எழுந்து கடுப்பில் இருந்த மீனாட்சியின் பக்கம் திரும்பி,
“அத்தே! பிள்ளைங்களை பெத்தா மட்டும் போதும்ன்னு தண்ணி தெளிச்சு நீங்க விட்டதால் அது இப்போ என் மேல சேறை வாரி இறைக்குது” என சினத்துடன் சொல்லிவிட்டு, தந்தை பக்கம் திரும்பி,
“அப்பா நான் இப்போ எந்த ஹாஸ்ப்பிட்டல் போகணும்?” என அவள் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு கேட்க, அவர் குற்ற உணர்வுடன் நெஞ்சை பிடித்துக்கொண்டு பார்த்தார்.
“என்ன பார்க்குறீங்க? எனக்கும் தான் இதயம் வெளியே வரப்போகுது..?”
“…”
“இதோ இவன் கூட வாழ இல்லை.. உங்க பொண்ணு நான்னு நிரூப்பிக்கணும்! நிரூபிச்சதுக்கு அப்புறம் என்னோட முடிவு வேற மாதிரி இருக்கும்.. அதுக்கு இப்பவே தயாராகிக்கோங்க” என சொல்லிவிட்டு அவர் பதிலுக்கு காத்திராது, வெளியே விரைந்தாள். வந்தவள் பணம் கொடுக்காமல் வந்த ஆட்டோ நிற்கவும்,
“சாரிப்பா என் பிரச்சனையில் உன்னை கவனிக்க மறந்துட்டேன்.. நீ என்னை ஏற்றிய இடத்துல கொண்டு போய் விடு! உனக்கு வெயிட்டிங் சார்ஜும் சேர்த்து தரேன்” என சொல்லியவாறு ஏறி அமர்ந்தும் கொண்டாள். ஆட்டோ கிளம்பியது.
சத்தியன் அவசரமாக வந்து விழுந்து இருந்த தனது வண்டியை நிமிர்த்தினான். விநாயக மூர்த்தி குரல்,
“சத்தியா ஒரு நிமிஷம்!” என்றது. அவன் என்ன என்பது போல எரிச்சலாக பார்த்தான்.
“நீ சந்தேகப்பட்டு, சந்தேகப்பட்டு, உன் பிரண்டு, நீலகண்டனை வேவு பார்க்க வைச்சு, அவன் மூலம் நீ சொன்ன தகவலும், காட்டிய படங்களும் பார்த்தும், கேட்டுகிட்டும், எதுவும் சொல்லாது இருந்தேன்.”
“…”
“நீ என் பொண்ணுக்கு அந்த செக்கப்பு பண்ணணும்ன்னு ஒத்த கால்லே நின்னே.. அதுக்கும் நான் பேசாது சம்மதிச்சேன்.”
“…”
“என் பொண்ணு வந்து ஒரு வாரமாகியும், அவகிட்டே ஒரு வார்த்த கூட பேசாது, முகம் பாராது, அவளை மவுனமாகவே தண்டிக்குறேன்னு, என்னையும் சேர்த்து தண்டிச்சுக்கிட்டு இருந்தேன். காரணம் அவ நெருப்புன்னு நீ புரிஞ்சுக்கணும்ன்னு தான்”
“மாமா” சத்தியன் எரிச்சலுடன் கூவவும், அவரும் கை உயர்த்தி தடுத்துவிட்டு,
“தவறான தகவலாக இருந்தாலும், யாரோடதோ தப்பான படங்களுக்கு, மாத்தி என் பொண்ணையும், அந்த அருமையான பையனையும் ஜோடிச்சுருக்குன்னு தெரிஞ்சும், நான் மவுனம் காத்தேன்.”
“…”
“நான் எதிர்த்து இருந்தாலும், நீ கேட்டிருக்கப் போறதும் இல்லை. அடங்கி இருக்கப்போறதும் இல்லை” அவர் உண்மையை உரைக்கவும், அவன் சினத்துடன் ஏறிட்டான்.
“தடம் மாறும் வயசாக இருந்தாலும், நான் பெத்த தேவதை அவ புடம் மாறாத தங்கம்டா”
“….”
“என்னிக்கும் தவறிழைக்க மாட்டா.. நான் சொல்லி இருந்தா நீ கேட்டு இருப்பியா? அதான் அவ வரட்டும், அவ வாயால நீ பாடம் கத்துக்கணும்ன்னு எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு, அமைதியாக இருந்தேன்.” அவர் பேசப் பேச அவன் பற்களை கடிப்பது தெளிவாகவே கேட்டது.
“உனக்குள்ளே என்ன புகுந்து இருக்கோ? அவ சொன்னது போல எவர் உனக்கு மூளை சலவை செய்றாங்களோ? எனக்கு தேவையில்லாத விஷயம். இப்போ புயல் போல போயிருக்கா. வருவா பாரு! உன் சந்தேகத்துக்கு நெருப்பு வைக்க! ஆனா இதுக்கு மேல அவளை உனக்கு கட்டிவைப்பேன்னு நினைக்காதே” என அவர் தீர்க்கமாக பேசி முடிக்கவும், அவரிடமிருந்து இப்படி ஒரு பேச்சு வரும் என எதிர்பார்க்கவில்லை மீனாட்சியின் குடும்பம்.
தான் சொல்றதுக்கு எல்லாம் பூம், பூம் என தலையாட்டிக்கொண்டிருந்த மாமனாரின் மறுபக்கம் பார்த்த சத்தியனுக்கோ அதிர்ச்சி, ஏமாற்றம். அவரை இப்பொழுது பயமின்றி, மரியாதை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் துளியுமின்றி பார்த்து,
“அப்படியா சேதி? நீங்க முடிவு எடுத்துட்டா நாங்க அதுக்கு கட்டுப்பட்டுக்கிட்டு பொத்திகிட்டு போவோமா?” என எகத்தாளமாக கேட்டவன், அவர் சினம் மேலிட பார்க்கவும், அவனோ,
“அவ அவன்கிட்டே சோரம் போகலைன்னு ப்ரூவ் பண்ணட்டும் அப்புறம்..அவ கழுத்துல வேறு எவனும் தாலி கட்ட முடியாது! உங்க பொண்ணு வாழ்ந்தாலும் என்னோடு தான்! செத்தாலும் அவ என் பொண்டாட்டியானதுக்கு அப்புறம் தான் சாகவே விடுவேன்.”அவன் முகத்தில் ஒரு குரோதம், பேச்சில் ஒரு வன்மம் பார்த்து அவர் வாயடைத்துப்போனார்.
“இல்லையா? கலாம் பூரா உங்க மகளை பக்கத்துல வைச்சு, பார்த்துகிட்டு, நீங்க அழுது, புழுங்கி, கட்டிக்கொடுக்க முடியாம, வாழாவெட்டியாக வீட்டோடு வைச்சு இருக்கணும். கல்யாணம் பண்ணி புருஷன் துரத்தினால் தான் வாழ வெட்டியா? நிச்சயம் முடிஞ்சுது. நான் தள்ளி வைக்கிறேன்! வைச்சுக்கோங்க!” என அவன் இறுமாப்புடன் கூறவும், விநாயகமூர்த்தி தங்கையைப் பார்த்து,
“தண்டபாணி பெத்த பிள்ளையா இவன்?” என அவர் கேட்டதும் மீனாட்சி துடித்துபோனவராக,
“அண்ணா! அவன் நிலையில இருந்து பார்த்தா நியாயமானது தானே? எவன்கிட்டேயோ கெட்டுப்போன பொண்ணை, என் பையன் கட்டிக்க மாட்டான்” அவர் மகனுக்காகவே வக்காலத்து பேசவும், விநாயகமூர்த்தி கண்களை மூடி பொறுமை காத்தார்.
மீனாட்சியோ, “ரிசல்ட் வரட்டும். அதுக்கப்புறம் கல்யாண பேச்சை ஆரம்பிக்கலாம்” என சொல்லவும்,
“சீ வாயை மூடு! வயதுக்கு மரியாதை கொடுத்து உன்னை அடிக்காம விட்டு இருக்கேன். உன்கிட்டே பட்ட கடனுக்கு மேலாக என் பொண்ணு செஞ்சுட்டா. இதோ இந்த வீடு! இதுக்கு கணக்கு பார்த்தா நீ தான் தர வேண்டி வரும்” என்றும் கொந்தளிக்காத தமையன் கொந்தளிக்க ஆரம்பிக்கிறார் எனத்தெரிந்ததும் மீனாட்சி பம்மினார்.
“வேணாம்! எங்களுக்கு எதுவும் வேணாம். உனக்கும், உன் பிள்ளைகளுக்கும் என் பொண்ணோட உழைப்பை பரிசா தர்றேன். வைச்சுக்கோ! இனிமேல் நாங்க இந்த வீட்டில இருக்கப்போறது இல்லை. கிளம்புறோம். கூடப்பிறந்த பாவத்துக்காக, இவ்வளவு காலமும் என் குடும்பத்தை பார்த்த, நன்றிக்கடனுக்கு மேலதிகமாகவே என் பொண்ணு செஞ்சாச்சு. பிள்ளைகளை திருத்தப்பாரு!”
“…”
“ஆம்பிளை பிள்ளைகளை பெத்துட்டா மட்டும் குடும்பம் உருப்பட்டுடும்ன்னு இல்லை. பொம்பளை புள்ளையை பெத்தாலும், அதுங்க பின்னாடி நின்னாலே போதும். நாலு ஆம்புள பிள்ளை பெத்தவன், அடையுற பெருமையும், சந்தோஷத்தையும், விட ஒரு பெண்ணைப்பெத்தவன் பல மடங்கு அடைவான்.”
“….”
“அதுக்கு நான் பெத்தவ உதாரணம். எனக்கு உன் மேல வருத்தமோ, கோவமோ இல்லை. ஆதங்கம் தான்! நம்பி, நம்பி உன் பின்னாடியே இருந்தேன் பாரு அந்த ஆதங்கம் தான்” என அவர் சொல்லிவிட்டு, கொஞ்சம் நீரை எடுத்துப்பருகினார். பின் தன்னை கண்கள் கலங்க பாவமாக பார்த்த மனைவியைப்பார்த்து,
“என்னை மன்னிச்சுடு வைதேகி! நம்ம பெட்டியை எடுத்துக்கிட்டு எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ? வா!” எனவும், வைதேகி அவர்களின் அறைக்குள் விரைந்தார். பின் சசிரேகாவின் அருகே வந்தவர்,
“அம்மாடி! உன்னைபெத்ததும் இந்த அப்பன் தான், உன் தங்கச்சியைப் பெத்ததும் இவன் தான். ஆனா அவ எங்கே? நீ எங்கே? பார்த்து இனியாவது குடும்ப பொண்ணாக நடந்துக்கோ! நான் உன்னை எந்தவிதத்தில் ஒழுங்கா வளர்க்க தவறினேன்னு புரியுது..” என்றதும் சசிரேகா சின்னவளையே அவர் தூக்கி வைத்து பேசுவதை, பொறுக்க மாட்டாது, அந்த நேரத்திலும் பொருமலுடன்,
“என்னப்பா வசதியாக வாழணும்ன்னு நான் ஆசைப்பட்டது, என்னமோ உலக மாக குற்றம் போல சொல்றீங்க?” என வெடித்தாள்.
“வசதியாக வாழுறதுக்கு ஆசைப்படுறது தப்பில்லை. ஆனா அவரவர், அவரவர் சொந்த உழைப்பில், சொந்த முயற்சியில், எதையோ உறிஞ்சுமாம் ஏதோ ஒண்ணு, அது போல இல்லை” என அவர் பெரிய மகளைப் பார்த்து கோபமாக சொல்லிவிட்டு, வெளியேறினார். வைதேகி கண்களை துடைத்துவிட்டு, அடுத்த ஆறு நிமிடத்தில் அவர் முன்னாடி வந்து நின்றார்.
மீனாட்சி குடும்பம் சத்தியனைப்பார்க்கவும், அவன் ஏகத்துக்கும் சினத்தில் இருந்தவன், பற்களை கடித்துக்கொண்டு இருந்தான்.
105
சஸ்விஹா அதே ஆட்டோவில் வந்திறங்கினாள். வாசலில் பெற்றவர்கள் பெட்டியும் கையுமாக இருப்பதை பார்த்தவள் துணுக்குற்றாள். ’ஓஹோ வீதிக்கு வீசிட்டாங்களா?’ என தனக்குள்ள கேட்டவள், ஆட்டோவுக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு, கையில் இருந்த மருத்துவ அறிக்கையை ஆவேசமாக அவளை நோக்கி வந்த சத்தியன் முகத்தில் விட்டெறிந்தாள்.
“ஒவ்வொரு எழுத்தையும் எழுத்துக்கூட்டி, படிச்சுப்பார்த்துக்கோ! அப்புறம் தலையில் அடிச்சுக்கோ! எனக்கு எந்த இழப்பும் இல்லை. நான் எதையும் இழக்கவும் இல்லைன்னு உறைக்கும்.” என அவள் அமைதியாக கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு கம்பீரமாக சொல்லவும், பெற்றவர்கள் ஒருவரை ஒருவர் பெருமையுடன் பார்த்தார்கள்.
மீனாட்சியும் சிதறிக்கிடந்த தாள்கள் எடுத்து அப்படியும், இப்படியும் அலை பாயும் கண்களால் படிக்க முனையவும், சஸ்விஹா ஒரு கிண்டல் தொனியில்,
“அத்தை புரியலைன்னா கீழே டாக்டர் நம்பர் கூட இருக்கு.” என சொல்லிவிட்டு, திரும்பி பெற்றவரைப் பார்த்து.
“என்னப்பா உங்களுக்கும் டாக்டர் நம்பர் தரவா?” குரலில் வலியின் வீரியம் தெறிக்கக்கேட்டதும், அவர் சட்டென்று கை எடுத்து கூப்பி அழ ஆரம்பிக்கவும், அவள் பதறிப்போனாள்.
“அப்பா!” என அவரை எட்டு வைத்து அணைத்துக்கொண்டாள். வைதேகியும்,
“உன் அப்பா சந்தேகிக்கல.. நான் விவரமா எல்லாம் சொல்றேன்மா. முதல்லே எங்களை இங்கே இருந்து கூட்டிப்போ” என அவரும் அழ, அவளும் அதே முடிவோடு தான் திரும்பி வந்திருந்தாள். நர்சிங் ஹோம் செல்லும் வழியிலேயே வித்யாவிடம் எல்லாம் கொட்டி அழுது விட்டுத்தான் போனாள்.
“நான் வீட்டை விட்டு வெளியேறி வருவேன். எனக்கு ஒரு அடைக்கலம் தந்திடு!” என வேண்டுகோள் வைக்கவும், தோழியும் ஆறுதல் சொல்லி, தைரியம் கொடுத்து,
“நீ போ! நான் பின்னால் வருகிறேன்” என நம்பிக்கை கொடுத்திருந்தாள்.
இப்பொழுது தாய் சொன்னதும் அவளுக்கு என்ன ஏது என விளக்கம் தேவைப்படவே இல்லை. அடுத்த நிமிடம் ஆட்டோவை அழைத்தாள்.
பெற்றவர்களைப் பார்த்து ஏறுமாறு தலையசைக்கவும், அவர்களும் ஏறிக்கொண்டார்கள். வித்யாவும் ஸ்கூட்டியில் வந்து சேர்ந்தாள். சஸ்விஹாவிடம் ஒரு ஹெல்மெட்டை நீட்டி “ஏறு” என்றாள். சத்தியன் ஆவேசமாக வந்து சஸ்விஹாவின் கையை முறுக்கி,
“ஏண்டி என் பொண்டாட்டிடி நீ! என் பர்மிஷன் இல்லாம வீட்டை விட்டு போயிடுவியா?” என கர்ஜிக்கவும், அவளோ சிறிதும் பயமில்லாது, தனது முறுக்கிய கரத்தினை ஒரு உதறலில் உருவியவள்,
“மறந்துட்டேன். நல்ல வேளை ஞாபகப்படுத்திட்டே! தாங்க்ஸ்” என சொல்லிவிட்டு, தனது விரலில் இருந்த மோதிரத்தை பார்த்தவள்,
´இதுதானே எனக்குள்ளே கலந்தவனை தள்ளி வைத்தது. அவன் வாயால் மேரேஜ் இன்விடேஷன் கேட்க வைச்சது,´ என தனக்குள்ளே கேட்டவாறு, அதைகழட்டி வாசல் படியில் வைத்துவிட்டு,
“போலாம்” என வண்டியில் ஏறினாள்.
“ஏய் என்னை சாதாரணமா எடை போடுறேடி! நீ எவனையும் கல்யாணம் பண்ண முடியாதுடி! என்னை மீறி எவனும் உன்னை நிமிர்ந்தும் பார்க்க மாட்டான்” என உருமவும்,
அவள் “உஸ்ஸ்ஸ்” என்றவாறு “எல்லா சினிமாவும் பார்க்க கூடாதுடா! வில்லன் போலவே தப்பு.. தப்பு.. வில்லனாகவே பேசுறே!” என சொல்லிவிட்டு போக முற்பட, அவன் அடங்கினால் அல்லவா? விநாயகமூர்த்தி பொறுமை இழந்து ஆட்டோவிலிருந்து இறங்கி,
“சத்தியா! மரியாதையா வழியை விடு! தங்கச்சி பையன்னு கூட பார்க்கமாட்டேன். போலீச கூப்பிட வைச்சுடாதே!” என அவர் மிரட்ட, மீனாட்சி ஓடி வந்து மகனை பிடித்து,
“விடுடா! போய் தொலையட்டும் அடங்காபிடாரி” எனவும் அவனோ தாயிடம்,
“எனக்கு அவ வேணும்” என கத்த சஸ்விஹா ஜாடை காட்ட, ஆட்டோ பறக்க, ஸ்கூட்டியும் பின் தொடர்ந்தது.
106
தொலைதூர பயணங்களில் தொலைக்க விரும்பாது
பயணிக்கவே விரும்பினாலும்
வேண்டும் என்றே உன்னை தொலைத்தால் என்னவென தோன்ற வைக்கிறது
என்னால் தொலைக்க முடியாத சுமைகள்!
தொலையாத சுமைகள் என்தோளினை தாழ்த்தும் போதெல்லாம்
முட்டுக்கொடுத்து முகவுரையாகிறது முன் நிற்கும் உன் உருவம் !
உருக்குலைத்துக்கொண்டிருக்கும் என்னையோ ,
உருமாறிக்கொண்டிருக்கும் மனதையோ,
விளக்க மறியலில் வைக்க திராணியற்று,
விலக்கி வைக்குறது உன்னை !
இருந்தும் தொலையாத சுமைகளினை கூட தூக்கி வீசிப்போகிறது
தொலைக்க விரும்பாத உன் நினைவுகளின் சுமைகள்!
வித்யாவின் உதவியுடன் அவர்கள் மூவருக்கும் வீடு பார்த்து குடிபுகுந்து கொண்டார்கள். தங்குவதற்கு இடம் கிடைத்ததும், அடுத்த வேளை உணவுக்கு கையில், கழுத்தில் இருந்ததை சஸ்விஹா விற்க முற்பட, வித்யா தடுத்தாள்.
“நீ வேலை தேடி அது கிடைக்கும் வரை வைச்சு இரு! அப்புறமா முடியும் போது மட்டும் திருப்பி தா!” என ஒரு ரொக்கத்தை அவளின் கையில் வைக்கவும், அவள் தோழியின் தோளில் சாய்ந்து குலுங்கினாள். பெற்றவர்களுக்கு தாம் பெற்ற பெண்ணுக்கு எவ்வளவு தவறு இளைத்து கொடுத்து இருக்கிறோம்? என அப்பொழுது உறைத்தது .
“நீ அனுப்பிய அத்தனை பணமும் அப்படியே சத்தியனின் பேங்குல போட்டதன் பின் விளைவுகள் இப்போது தான் புரியுதும்மா. அந்த குளிரில் நான் பெத்த மகள் உழைத்த உழைப்பின் ஒரு சதவீதம் தன்னும், அவள் கையில் இல்லாது, வழித்து, வாங்கி, அடுத்தவனுக்கு கொடுத்தது. எவ்வளவு மடத்தனமான தவறும்மா! என்னை மன்னிச்சுடு” என சொல்லி அழுதார். அவளோ,
“அப்பா போனது போகட்டும். எனக்குப்படிப்பு இருக்கு. திறமை இருக்கு. நான் மீண்டுடுவேன்.” என தைரியம் சொல்லியவள், அடுத்து, வேலை தேடுவதில் தீவிரமானாள்.
சஸ்விஹாவின் திறமைக்கும், இருக்கும் அனுபவத்திற்கும், அவளுக்கு வேலை கிடைப்பது கடினமான காரியமாக இல்லை. இருந்தும் பழைய பஞ்சாங்கம் புரட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அவள் போகும் அத்தனை கம்பெனிகளிலும் சத்தியனின் சதியே ரவுண்டு கட்டி, அவளை துரத்தி அடித்து, சோர்வடைய வைத்துக்கொண்டிருந்தது.
சில கம்பெனிகள் அவள் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு திரும்பியதை, சத்தியனின் வக்கிர புத்தி என்ன சொல்லி வைத்ததோ? அவளின் உடலுக்கும், அழகுக்கும் அவளை வேறு மாதிரி நினைத்துக்கொண்டு பேரம் பேச ஆரம்பித்தன. அதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியாது போனது.
இதன் பின்னணியில் சத்தியன் இருப்பான் என அவள் எண்ணிப்பார்த்தாளா? அவள் இருந்த மனநிலையில், அவளின் ஒரே நோக்கம் ஒரு வேலை. அது எதுவாக இருந்தாலும் எனும் நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருந்தாள். தான் சோர்வதையோ, கலங்குவதையோ பெற்றவர்களின் முன் காட்டிக்கொடுக்காது இருக்க முயற்சித்தாள்.
வித்யாவுடன் சேர்ந்து தந்தையின் அனைத்து மருத்துவ அறிக்கையுடனும், வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்ற போது அவளுக்கு அடுத்த அதிர்ச்சி தாக்கியது.
“எப்பொழுதோ ஆபரேஷன் செய்து இருக்க வேண்டும். எதுக்கு தாமதித்தீர்கள்?” என டாக்டர் கேட்கவும், எல்லோரும் சத்தியன் தம்மிடம் சொன்னதை சொல்லி, எடுத்துக்கொண்டிருக்கும் மாத்திரைகளை காட்டிய போதும், அது வெறும் டானிக் என தெரிய வரவும், எல்லோரும் துடித்துப்போனார்கள். எவ்வவள் தூரத்துக்கு தான் ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருந்திருக்கிறேன். என புரிந்ததும் விநாயகமூர்த்திக்கு நெஞ்சு வலி அதிகமானது. சஸ்விஹாவுக்கு சத்தியன் குடும்பம் மீது கொலை வெறியே வந்தது.
பெற்றவர்களை நோவதா? இல்லை தன்னைத்தானே நோவதா? என அவள் உடைந்து தான் போனாள். ஏற்கனவே மன உளைச்சலில் இருந்தவளுக்கு, தனக்கும் நெஞ்சு வலி வந்துவிடும் போல பயந்தாள். எங்கே அதை வெளியில் காட்டி, மேலும் தந்தையின் உயிருக்கு உலை வைக்க விரும்பாதவளாக, அடக்கினாள் அந்த அழுத்தக்காரி. எல்லாவற்றையும் தனக்குள்ளேயே அடக்கி, நீரைக்குடித்து இறக்கினாள். வித்யா அவளின் மனது போராட்டத்தை கண்கூடாக பார்த்து, அவளை அப்பப்போ உலுக்கி,
“சஸ்வி அடக்காதேடி! வேணாம்டி!” என அதட்டிவைத்தாள். உடனடியாக ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் எனும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். விநாயகமூர்த்தியோ,
“எனக்கு ஆபரேஷன் தேவையில்லம்மா.. ஆனா நான் உனக்கு ஒரு வழி அமைச்சுக்கொடுக்காது, அவ்ளோ சீக்கிரம் கண் மூடத் தயாராக இல்ல. நீ மணக்கோலத்தில என் கண் முன் நின்னாலே போதும். அதைப்பார்த்துட்டு நான் போய்விடுவேன்” என அவர் குமுறவும்,
சஸ்விஹா என்ன பதில் சொல்லி விட முடியும்? ‘என்னால் ஒருவனை மணம் முடிக்க முடியுமா? மனதில் இருப்பவனை விரட்டிவிட தெரிந்தவளுக்கு, இன்னொருவனுக்கு பாழாய்ப்போன, பழுதான மனதை கொடுக்க முடியுமா? முடியாதே! எந்தக்காலத்திலும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் முடியாதே! தந்தையின் மாப்பிளை தேடலுக்கும், மணக்கோல கனவுக்கும், தலையாட்ட இது ஒன்றும் இரு வருட ஒப்பந்தம் இல்லையே’. அவள் அமைதியாக சிந்தனை வசம் இருக்க, அவரோ,
“நீ வேலை தேடிக்கிட்டு இரு! நான் மாப்பிளை பார்க்குறேன். சீக்கிரம் உனக்கு நல்ல காரியம் பண்ணாத்தான் என்னால மூச்சு விட முடியும். அதுக்கு அப்புறம் அது நின்னாலும் கவலையில்ல” என சொன்னதோடு நின்று விடாது, தேடுதலில் இறங்கியும் விட, சஸ்விஹாவுக்கு எங்காவது குதித்து விடலாமா? என எண்ணமும் வந்து சேர்ந்தது.
உடனேயே ‘முட்டாள் ஒருதலைக்காதலால் ஒருவர் சூசைட் பண்ண நினைச்சா, இந்த உலகத்தில ஒரு ஜீவன் கூட மிஞ்சாது’ என தன்னைத்தான் திட்டியும் கொண்டாள்.
எதிர்காலம் எப்படி நகரப்போகிறது? நிகழ்காலத்தில் தந்தையின் ஆபரேஷனுக்கு என்ன வழி? கையில் இருக்கும் வித்யாவின் பணம் எத்தனை நாளுக்கு தாக்குப் பிடிக்கும்? வேலை என்று பேரம் பேசாது வந்து சேரும்? என்ற மன உளைச்சல் ஒருபக்கம், அக்ஷ்ரன் அருகே இருக்கும் போது நடமாடும் சஸ்விஹாவுக்கும், அவனில்லாத சஸ்விஹாவுக்கும் ஆறு வித்யாசத்தை உணரவே செய்தாள்.
அங்கே மீனாட்சியின் வீட்டில் சத்தியன் தினமும் பிரியாணி, பீர்பாட்டில், கும்மாளம் தான். காரணம் என்னவாக இருந்திடப் போகிறது? அவனால் முடிந்தவரை சஸ்விஹாவின் குடும்பத்தை மறுபடியும் தனது கைக்குள் கொண்டு வர, என்னவெல்லாம் செய்ய முடியுமோ? செய்து கொண்டு இருந்தான்.
சஸ்விஹா எங்கும் அவனை மீறி வேலைக்கு சேர்ந்துவிட முடியாதவாறு அவன் காய்களை நகர்த்திக்கொண்டிருந்தான். கூடவே சசிரேகா தன்னை உதறிவிட்டு, தங்கை கூட சென்ற பெற்றவர்களையும், அவளையும், ஒரு வழி பண்ணிவிட வேண்டும் எனும் தீவிரத்தில், சத்தியன் கூட இணைந்து அவனை உசுப்பேற்றிக்கொண்டே இருந்தாள்.
சஸ்விஹாவுக்கு வேலை கிடைக்காததற்கு சத்தியனின் சதியும், வக்கிரம் பிடித்த பேச்சுக்களும் என அறிந்த வித்யா, தோழிக்கு தகவல் சொல்லவும், அவள் ஒருவாறு ஊகித்து வைத்திருந்தது தான். பெற்றவர்களிடம் சொல்லாமல், மறைத்தும்விட்டாள். அவர்கள் மேலும் கலங்கி உடல்நிலையைக் கெடுத்துக்கொள்ளவே கூடாது எனும் நோக்கில்.
107
நாட்களை பறக்க விடாது, சஸ்விஹாவின் விதி வேறு ரூபத்தில் அவளுக்கு வேலையை தேடிக்கொடுக்கவும், அவள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லாமல் போனது.
“அப்பா எனக்கு வேலை கிடைத்துவிட்டது. அதுவும் என் திறமைக்கும், படிப்புக்கும் ஏற்ற அதே வேலை தான்பா” என சிறு குழந்தை போல துள்ளிய மகளை பாசத்தோடு எதிர்கொண்டார்கள் பெற்றவர்கள்.
“31 நாளும் 31 கம்பெனிகள் ஏறி இறங்கினேன். அங்கே சாத்தான் வேலையைக்காட்டிகிட்டு இருந்திச்சு. ஆனா இங்கே எதுவுமே பலிக்கலப்பா.. நான் வித்யா கூட விசாரிச்சுட்டேன், ரொம்ப டீசண்டான கம்பெனிப்பா.. எம்டி பக்க டீசண்ட்.. ஜென்டில்மேன்..அங்கே வேலை செய்யும் யாரைக்கேட்டாலும், ஒரு பிளாக் மார்க் இல்லை.” அவள் சந்தோஷ குஷியில் சொல்லி, நிம்மதி மூச்சு விடவும், அவர்களுக்கும் அது பரவியது.
“கடவுளே இப்பவாவது கண் திறந்துட்டியே” என வைதேகி மேலே பார்த்து கரம் கூப்பினார்.
“அப்பா முதல் மாச சம்பளம், அத்தோடு வித்யா லோன் கேட்டு இருக்கா, அதை வைச்சு குவிக்கா உங்களுக்கு ஆபரேஷன் பண்ணறதாக இருக்கோம். அப்புறம் அவளுக்கு நான் மாச, மாசம், கொஞ்சம், கொஞ்சமா, திருப்பி கொடுத்துடுறதாக டீல்” என அவள் உற்சாகமாக சொல்லவும், மகளை பெருமையுடன் பார்த்து,
“உன் இஷ்டம் ஆனா அதுக்கு முன்னாடி இந்தா இதைப்பாரு!” என ஒரு போட்டோவை அவளிடம் நீட்டினார். அவள் வாங்காமலேயே,
“என்னப்பா?” என்றாள்.
“உனக்கு நான் பார்த்த மாப்பிளை. கவர்ன்மென்ட் வேலை. இன்காம் டாக்ஸ் ஆபீஸரா இருக்கார். ஒரே பிள்ளை, நல்ல குடும்பம், ரெண்டு ஜாதகமும் பொருந்தி இருக்கு” என அவர் சந்தோஷத்தோடு சொல்லிக்கொண்டு போகவும், சஸ்விஹாவின் காதுக்குள் ஏறினால் அல்லவா? அவளோ சுரத்தில்லாமல் பார்த்து,
“அப்பா நான் சந்தோஷ மனநிலையில் வந்தேன். நீங்க எதுக்கு?” அவள் துடிக்கும் மனதை கட்டுப்படுத்தி, விழிகள் கலங்க ஏறிட்டாள்.
“என்னம்மா சத்தியன் ஏதாவது பண்ணிடுவானோன்னு யோசிக்குறியா?”
“…”
“அது எல்லாமே நடக்காது. நான் தெளிவா பேசிட்டேன். மாப்பிளை பையனை மிரட்டவே முடியாது. அவருக்கு எல்லாமே தெரியும்” என அவர் அந்த வரன் புராணமே பாடவும், இவளது மனதோ,
‘அய்யோ என்னால எவனையும் கல்யாணம் பண்ணமுடியாதுன்னு கத்துடி” என உலுக்கியது. அதை அடக்கி,
“அப்பா! ப்ளீஸ் கொஞ்ச காலம் போகட்டும்.. உங்களுக்கு மகளாகவே இருக்க ஆசைப்படுறேன். இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்பா. அதை விட, எனக்கு அந்த ஐடியா இல்லை” என சொல்லிவிட்டு தந்தையை பயத்துடன் ஏறிட்டாள். எங்கே இந்த அதிர்ச்சி அவரை பாதிக்கப்போகுதோ? என. அதைப்புரிந்து கொண்டவர்,
“நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்மா. உன் விருப்பம். ஆனா யோசி! எங்க காலத்துக்கு பின்னாடி உனக்கு ஒரு துணை வேணும்.. அதை நல்லதாக தேடித்தரும் பொறுப்பும், கடமையும் எங்களுக்கு இருக்கு. மறுக்குற உரிமை உனக்கு இருக்கு. ஆனா எங்களின் ஆசைக்கு, நீ” என அவர் இடை நிறுத்திவிட்டு ஏக்கத்துடன் பார்க்கவும், அவள் பார்வையை வெளியே ஜன்னலில் காற்றினால் பட் பட் என அடித்த கதவின் மீது எறிந்து,
“டைம் வேணும்” என்றாள். அவரும் அவளின் தலையை வருடி,
“எடுத்துக்கோ” என்றவர் “நீ ஆபரேஷன் செய்ய சொல்றே, ஒத்துக்குறேன். ஆனா அது பெயிலியராகி, உனக்கு வழி தேடித்தராது, போய் சேர்ந்துட்டா என்னோட ஆத்மா சாந்தியடையாது” என அவர் சேர்த்து சொல்லவும், சஸ்விஹா அதிர்ந்து,
“அப்பா!” என அதட்டி “என்ன பேச்சு பேசிகிட்டு இருக்கீங்க?” என வெடித்தாள். அவர் கலங்க, அவளோ விழிகளை மூடித் திறந்து ஜன்னலின் ஓரம் போய் நின்று, அடிக்கும் கதவினை இழுத்து பிடித்தவள், ஒரு நிமிடம் மவுனம் காத்தாள். பின்
“அப்பா டைம் தாங்க. நான் என்னை..என் மனசை.. தயார் படுத்தணும்.. ப்ளீஸ்..” என கெஞ்சவும், அவரும் அதுக்கு மேல் மகளை கலங்க வைக்காது, தலையாட்டினார்.
‘இப்போதைக்கு நிம்மதி’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டவள், எப்படி தயாராகப்போகிறே? எனும் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.
அவளுக்கு வேலை கிடைத்ததை அறிந்து கொண்ட சத்தியன். எத்தனை சதிவலை பின்னியும் பலிக்காமல் போன கம்பெனியையும், அவளையும், கண்காணிப்பதே முழுநேர வேலையாக்கி கொண்டான்.
சஸ்விஹாவின் முதல் மாத சம்பளம் வரவும், வித்யாவின் லோனும் சேந்து கொள்ள, அவர்கள் திட்டமிட்டபடியே விநாயகமூர்த்தியின் ஆபரேஷன் ஏற்பாடு நடந்தது. ஆனால் அவரோ மகளிடம்,
“உன்னை மணமேடையில் பார்த்துவிட்டுத்தான் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளேயே போவேன்”. என பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார். அவளுக்கு மூச்சடைத்தது. எவ்வளவோ சொல்லி மன்றாடினாள். அவர் ஒத்துக்கொண்டார் இல்லை. அவளுக்கோ, தனது மனநிலையை வாய்விட்டு சொல்ல முடியாது தவித்தாள். கடைசியில் தந்தை அவரது ஆபரேஷனை தள்ளி வைக்க முனைவதை பார்த்தவள், இடிந்து போனாள். வித்யாவோ,
“சஸ்வி! ஏன் பிடிவாதம் பிடிக்குறே? அப்பா சொல்றதுல எந்த தப்பும் இல்லைடி! அவரோட நிலையில் இருந்து பாருடி.” அவளும் வாதாட, அவளோ நெஞ்சைப்பிடித்துக்கொண்டு, மூச்சு விட சிரமப்பட, அவளின் தோளை உலுக்கிய வித்யா தோழியை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“எனக்கு அக்ஷ்ரன் நம்பரைத் தா!” என்றதும் மற்றவள் அதிர்ந்து பார்க்க,
“என்ன பார்க்குறே? நான் அறியாத என் தோழியா? நீ நம்பரை சொல்லு!” என அவள் மிரட்டி தனது மொபலை தூக்கவும்,
“வித்தி! உளறாதே!” என அவளை அடக்கிவிட்டு, மூச்சை இழுத்து வெளியே தள்ளி, தந்தையிடம் வந்தவள்,
“அப்பா! உங்க சதோஷத்துக்காக நான் மாலையும் கழுத்துமாக நின்னா, நீங்க ஆபரேஷன் தியேட்டருக்குள் போவீங்க இல்லையா?” என கேட்டாள். அவரும்,
“ம்” என்றார்.
“சரி! அப்படியே வைச்சுக்கோங்க! அப்புறம் நீங்க எதுக்கு பயந்துகிட்டு? எனக்கு அவசர, அவசரமாக ஒரு விலங்கினை பூட்ட நினைக்குறீங்களோ? அது நடந்தா.. அதுக்கு அப்புறம் எப்படி நீங்க பூட்ட இருக்கும் விலங்கு கூட நான் சந்தோஷமாக வாழ்வேன்?”அவள் அமைதியாக ஆனால் அதிரடியாக கேட்டாள்.
“…”
“அந்த விலங்கு வந்த நேரம் தான் என் அப்பா என்னைவிட்டு பிரிந்தார் என் மனசு சொல்லும். அதை செயலில் காட்டுவேன்.” என சொன்னாள். எப்படியாவது அவரை ஒத்துக்கொள்ள வைக்கும் தீவிரத்தில் இறங்கிவிட்டாள்.
“…”
“அப்புறம் விலங்குக்கு நரகம்.. எனக்கும் நரகம்.. அப்படி ஒரு நரகத்தை தந்துவிட்டு தான் நீங்க ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே போக விரும்புறீங்களா?” என அவள் கேட்கவும், எல்லோரும் வாயடைத்துபோனார்கள்.
“அடிப்பாவி! மனசுக்குள்ளே இருக்குறவனை மறக்க முடியாம, ஸ்டோரி ஸ்க்ரீன் பிளே நல்லாத்தான் போடுறே!” என வித்யா மனதுக்குள் தோழியை திட்டினாள்.
“முடியாது இல்லை.. நான் வாழணும் தானே? அதுக்கு நீங்க நிம்மதியா ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே போய், நல்லபடியாகவே திரும்பி வருவீங்க! வாங்க! அப்புறம் மாலையும் கழுத்துமா என்ன? மாப்பிளையும், பொண்ணுமாக விருந்து சாப்பாடே சேர்ந்தே சாப்பிடலாம்” என அவள் சொல்ல, அவர் வாய்திறவாது யோசித்தார். அவளோ,
“அப்பா! அன்று ஒரு நாள் பிடிவாதம் அவன் பிடித்ததால், அவசர, அவசரமாக மாற்றப்பட்ட விலங்கு. இந்த நிலைக்கு என்னை கொண்டு வந்து தள்ளி இருக்கு. நீங்களும் பிடிவாதம் பிடிச்சு, மறுபடியும் ஒரு விலங்கு மாட்டிகிட்டு, நான் என்ன பாடு பாடப்போகிறேன்னு உங்களுக்கு பயம் வரலையா?” வேதனையுடன் கேட்டுவிட்டு,
“நானும் பிடிவாதம், நீங்களும் பிடிவாதம், பாவம் அம்மா! நம்ம ரெண்டு பேருக்கும் இடையில்” என தாயைக்கட்டிக்கொண்டு தந்தையை ஒரு புன்னைகையுடன் பார்க்க, அவரும்,
“மடக்கிட்டேன்னு சிரிக்குறியா நீ? சொன்ன சொல்லை மீறக்கூடாது. நான் ஆபரேஷன் பண்ணிக்கிறேன்.. திரும்பி வர்றேன்.. அதுக்கப்புறம் நான் சொல்றதை தான் நீ செய்யணும்” அவர் மிரட்டவும், அவளும் சிரிப்புடன், உள்ளுக்குள் நிம்மதி பரவவும்,
“என்னிக்கு மீறி இருக்கேன்பா” என சொன்னவள் தந்தையின் கரங்களை எடுத்து நன்றியுடன் பார்த்தாள்.
108
தந்தைக்கு நல்லபடியாக ஆபரேஷன் முடிந்த சந்தோஷத்தில் கோயியில் சஸ்விஹா அன்னை கூட இருந்தாள். தாயும், மகளும் வேண்டுதலை நிறைவேற்ற வந்திருந்தார்கள். வைதேகிக்கு எல்லா துன்பங்களும் விலகியது போல் இருந்தது.
“எம்பெருமானே எத்தனை பாடு பட்டுட்டோம்.. இத்தோடு போதும்.. எங்களை விட்டுடு! இனி எல்லாம் நல்லதே நடக்கட்டும்… எங்களுக்கு இனியாவது கருணை காட்டு.. என் புருஷன் ஆயுசு கெட்டியாக்கியது போல.. என் மகள் வாழ்கைக்குக்கும் ஒரு வழி காட்டுப்பா.. அவ வாழணும்” என அவர் கண்ணீர் வழிய வேண்டுதல் வைக்கவும்,
“அம்மா! ஒரேயடியாக கடவுள்கிட்டே ஓவரா விண்ணப்பம் போடாதே! அவர் டிஸ்டர்ப் ஆகி கஷ்டப்பட வைக்கப் போறார்..வா! அப்பாவுக்கு புடிச்ச சமையலை பண்றோம்.. அவர் வீட்டுக்கு வர்ற நேரம்.. நாம அங்கே இருக்கணும்..” என அவள் சொல்லிவிட்டு நடக்க,
“சஸ்வி அவருக்கு நீ வாக்கு கொடுத்திருக்கே.. பேச்சு மாறக்கூடாது! அந்த இன்காம் டாக்ஸ் ஆபீசரை கட்டிக்கணும்..” என அவர் தொடங்க, அவளோ,
“பச்.. அந்த வாக்கு எல்லாம் காலவாதியாகிடுத்து” என அசால்ட்டாக சொல்லிவிட்டு, அவள் படிகளில் துள்ளி இறங்க, வைதேகியோ,
“சஸ்வி கோயில்ன்னும் பாராது அடி வாங்கப்போறே! இப்படி தனி மரமா நிக்குறதுக்கு நாங்க ஒத்துக்க மாட்டோம்.. இன்னிக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டுறது..” அவர் சொல்ல,
“ஸ்ஸ்ஸ்.. அமமா.. சும்மா டார்ச்சர் பண்ணாதேம்மா! எனக்கு மூட் இல்லை” என தாயைப்பார்த்து, சொல்லி அதட்டிவிட்டு, படிகளில் கால் வைக்க. அவர் திகைத்து,
“என்ன இந்த பெண் மனசுல யாராச்சும்..” என அந்த நேரத்தில் அவருக்கு சந்தேகம் தோன்ற, விழுந்திடாதவாறு எட்டு வைத்து இறங்கியவர் மகளின் கரத்தைபிடித்து நிறுத்தியவர்,
“சஸ்வி! அம்மாகிட்டே உன்மையை சொல்லு! நீ மனசுல யாரையாச்சும்..” என அவர் வினவ, அவள் திடுக்கிட்டு,
“அம்மா! உளறாம வா!” என அவரை முறைத்து வேண்டுமென்றே எரிச்சலை குரலில் கொண்டு வந்தாள்.
“நில்லும்மா!” என அவர் மீண்டும் மகளை தடுக்க, அவளோ அவரை திரும்பி பார்த்து,
“அம்மா! பேசாம வாம்மா!” என சொல்லிவிட்டு உடல் சமநிலை மாறி இறங்கியவள், எதிர் புறமே ஏறிக்கொண்டிருந்த ஆள் மீது மோதினாள். மோதிய வேகத்தில், அந்த உருவத்திடமிருந்து வந்த நறுமணம், அவளைத் திணற வைத்தது. விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.
அவளின் நெற்றியிலிருந்த குங்குமம், சந்தனம் விபூதி, எல்லாம் அந்த உருவத்தின் சட்டையில் அப்பி இருக்க, அதை துடைத்துக்கொண்டிருந்தான் அக்ஷ்ரன். சஸ்விஹாவுக்கு விழிகள் அதிர்ச்சியில் உறையவும், மூடி கவிழ்த்து பூட்டு போட்ட மனது ’திறடி!’ என தட்டவும், பேச்சிழந்து நின்றாள். பார்த்த வைதேகி மகளை கோபிக்க முனைய முன், அருகே கூட வந்தவன் முந்திக்கொண்டான்.
“மேடம்! அடக்கம், ஒடுக்கம் வேணும் தான். அதுக்காக ஓவரா, இந்தளவுக்கு அடுத்தவங்க எதிரே வர்றாங்களா? இல்லையான்னு? தெரியாத அளவுக்கு இருக்க கூடாது” என வினித். சஸ்விஹாவிடம் பாயவும், தன் நண்பனின் மீது மோதிவிட்டு, சிலையாக நிற்குறாளே எனும் கடுப்பில் அவன் கோபமானான். அக்ஷ்ரன் சட்டையை துடைத்தவாறே,
“விடுடா!” என நண்பனிடம் சொல்லிவிட்டு நிமிர்ந்தவன் விழிகளில் ஆச்சரியம். கூடவே ஏகத்துக்கும் சந்தோஷம் அவளைப்பார்த்ததையிட்டு,
“ஹேய்! சஸ்விஹா!! நீங்களா?” என அப்பொழுது தான் தன் மீது மோதியது யார் என அறிந்து உற்சாகமாக கேட்க, அவளோ மனதுக்குள்,
´எனைத்தாக்கிய தென்றலே! மறுபடியுமா?’ என குதிக்க முற்பட்ட மனதினை ´வேணாம்டா!’ என்றே அடக்கிவிட்டு,
“சாரி சார்” என சொல்லிவிட்டு அவனை சுற்றிக்கொண்டு, படிகளில் இறங்க, அவன் குரல் பின்னாலேயே,
“மிஸ் சஸ்விஹா!” என வரவும், அவள் காதில் விழாதது போல, கீழ் வந்து ஆட்டோவை அழைத்தாள். நண்பனிடம்,
“நீ போய் பிரே பண்ணுடா! நான் வரேன்” என்றுவிட்டு, அவனும் அவசரமாக இறங்கி வந்து,
“என்னங்க எப்படி இருக்கீங்க? இந்தியா வந்துட்டேன்னு ஒரு மெசேஜ் மட்டுமே.. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை.. இங்கே இப்படி உங்களை மறுபடியும் பார்ப்பேன்னு நினைக்கல.. உங்க பிரண்ட்ஸ்..” என அவன் அவளைப்பார்த்த சந்தோஷத்தில், சொல்லிக்கொண்டு போக, அவளோ கண்களை மூடித்திறந்து, பொறுமை குறைந்து,
“ஹலோ! யார் சார் நீங்க?” எனக்கேட்டது தான் தாமதம், அவனது முகம் மாறியது. பின்னுக்கு ஒரு எட்டு வைத்தான். வைதேகி எதுவும் புரியாது அவனையும், மகளையும் மாறி, மாறி பார்த்துவிட்டு, மகளிடம் வம்பு செய்யவே வந்து இருக்கிறானோ? இல்லை சத்தியன் ஏவிய ஆளாக இருப்பானோ? அவளை கடத்திக்கொள்ள போகிறானோ? என பயந்து போனவர்,
“யாருப்பா நீ? முன் பின் தெரியாதவங்ககிட்டே.. அதுவும் வயசு பொண்ணுகிட்ட.. இவ்வளவு உரிமைய…நெருக்கமா வந்து நின்னுகிட்டு.. பேச்சுக்கொடுக்குறே. நான் அவ அம்மா.. இது கோயில்.. இங்கேயும் பொண்ணுங்களை நிம்மதியா வரவிடமாட்டீங்களா? பார்த்தா நல்ல பையனாட்டம் இருக்கே.. உன்னை பெத்தவ இப்படித்தான் பொண்ணுங்க பின்னால போய் நில்லுன்னு சொல்லி வளர்த்தாளா? பண்பாடு தெரியாம ஒரு பொண்ணுகிட்ட.. இவ்ளோ நெருக்கமா.. சே.. காலம் கலிகாலம்..” என அவர் பேச, பேச சஸ்விஹா அதிர, அவனோ அவரது வார்த்தைகள் புரிய, வியர்த்து, முகம் சிவக்க, சட்டென்று கரம் எடுத்து கூப்பி,
“எனக்கு தெரிஞ்சவங்க போல இருந்தாங்கம்மா.. மன்னிச்சுடுங்க..” என அவரைப்பார்த்து சொல்லிவிட்டு, சிலையாக நின்ற சஸ்விஹாவிடம், திரும்பி, “சாரி மேடம்” என்று மன்னிப்பு வேண்டி நின்றவன், விழிகள்,
´ஏம்மா?’ என கேட்பது போல பார்க்கவும், அவளோ, அவன் கரம் கூப்பி மன்னிப்பு கூறுவான் என எதிர்பார்த்தாளில்லை. அவனது அந்த செயலை அவள் விரும்பினாள் இல்லை. முகத்தை திருப்பிக்கொண்டாள்.
அக்ஷ்ரனுக்கு ‘இதுக்கு மேலயுமா உன் முகம் அவமானத்தில் சிவக்கணும்?´ என மனது கேட்டது. அடுத்த நொடி அவன் அங்கே இல்லை.
‘நீ நடிச்சுக்கிட்டு இருடி! ஆனா உன் நடிப்புக்கு எதிரொலி, எப்படி? எந்த ரூபத்தில் உன்னை தாக்கப் போகுதுன்னு பாரு’ என அவளின் விதி வில்லங்கமாக சிரித்தது.
“உன்னை ஏதாச்சும் பண்ணிவிடுவானோன்னு பயந்துட்டேன்” என வைதேகி சொல்ல, சஸ்விஹா அதுவரை இருந்த நிம்மதி, அமைதி, எல்லாமே காணாமல் போனதை உணர்ந்தாள்.
ஆட்டோக்காரன் “ஏறுங்க” என சொல்வதை காதில் வாங்காது, மகள் அதே இடத்தில் நிற்பதை பார்த்து,
“பொறுக்கி என் பொண்ணை என்ன பண்ண வந்தானோ?” என அவர் திட்டியவாறு ஆட்டோவில் ஏறவும், அவளோ திடுக்கிட்டு,
“அம்மா! அவர் ஒண்ணும் பொறுக்கி இல்லை.” என்றாள் பட்டென்று. அவனை முன் பின் பார்த்திராத வைதேகி ,
“உனக்கு எப்படித் தெரியும்?” என கேட்கவும் அவளோ, நொந்து கொண்டவாறு,
“அவர் தான் அக்ஷ்ரன்” என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு. தாய் அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தார். சஸ்விஹா அலறும் இதயத்தை, இறுக கைகளை கட்டிக்கொண்டு, மூச்சு விட சிரமப்பட்டவாறே ஆட்டோவைப்பார்த்து,
“சீக்கிரமா போப்பா! ப்ளீஸ்” என்றாள் உதட்டையும் சேர்த்துக்கடித்து. வைதேகி மகளை குழப்பமாக பார்த்து,
“சஸ்வி” என தொடங்க,
“ம்மா.. ப்ளீஸ்மா பேசாதே!” என அவள் கெஞ்சலுடன் பார்த்தாள். அவருக்கோ மகள் தம்மிடம் எதையோ மறைப்பது நன்றாக புரிந்து போனது.
“உனக்கு உன் அப்பா தான் சரி! இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆகி வருவார்ல.. வரட்டும்” என அவர் கோபத்துடன் சொல்ல,
“அம்மா! தேவையில்லாத கற்பனையை விட்டுடு! அப்பாக்கு இப்போதான் ஆபரேஷனாகி இருக்கு. மறந்துடாதே!” அவள் கடிந்து கொள்ளவும், வீடு வந்து விட்டிருந்தது.
109
விடு விடுவென இறங்கி அவள் ஓடியது குளியறைக்குள் தான்.
பின்னால் வந்த வைதேகி வித்யாவை தொடர்பு கொண்டு, நடந்தை சொல்ல விநாயகமூர்த்தியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் கூடவே வித்யாவும் வந்து சேர்ந்தாள்.
குளியறைக்குள் புகுந்த சஸ்விஹாவின் நிலைமையை வார்த்தைகளில் சொல்லவே முடியாது. தாண்ணீர் குழாயை திறந்துவிட்டவள், அப்படியே மடங்கி உட்கார்ந்து வலிக்கும் நெஞ்சினை நீவியவாறு, மறுகையால் முகத்தில் நீரை எடுத்து அடித்தாள்.
எல்லா உணர்வுகளையும், சிறு வயதில் இருந்து அடக்கி, அடக்கியே வளர்ந்து பழக்கப்பட்டவளுக்கு, அக்ஷ்ரன் மீதான உணர்வினை அடக்கவும் முடியவில்லை. அதை கொட்டவும் வழியில்லை. அவனை மறந்துவிட்டு தானுண்டு, தன் குடும்பம் உண்டு, என ஒரு பாதையை அமைத்துக்கொண்டு வாழ்ந்து விடலாம் என நினைத்திருந்தவளுக்கு, அது சாத்தியமான காரியமாகத் தோன்றவுமில்லை.
தந்தை மணம் முடித்து வைப்பதே குறியாகவே இருப்பதையும் தாங்க முடியாது போனது. அக்ஷ்ரனை இன்று பார்த்துவிட்டு தன்னால் எந்தக்காலத்திலும் அவனை மறக்கவும் முடியாது. தந்தைக்கு கொடுத்த வாக்கையும் காப்பாற்ற முடியாது. என தெளிவாகவே புரிந்து போனதன் விளைவே, அவள் கோயிலில் அவனை பார்த்ததும், அவன் மீது சாய்ந்து விடுவேன் என குதித்த மனதை, அடக்க முடியாது, அவனைப்பார்த்து அப்படி பேசி வைத்தாள்.
“யப்பா போதும்டா! என்னால முடியல..என்னை விட்டுட்டு போயிடேன்.” வாய் திறந்து கண்ணீர் மல்க கெஞ்சினாள்.
“என் நெஞ்சின் கூட்டை போட்டு இப்படி உடைக்குறியே. போயிடுடா! இன்னொரு தடவை என் கண் முன்னாடி நீ வந்தா நான் பலவீனமாகிடுவேன் போலிருக்கே”. இதயப்பகுதியை அழுத்திக்கொண்டு கதறினாள்.
வாய் திறந்து பேசாத ஆத்மாக்கள் எல்லாம் தம் மனசுக்குள் போட்டுப் புதைத்து, தனிமையைத் தேடி, ஓடி, ஒளிந்து, இப்படித்தான் யாருமில்லாத இடத்தில் கொட்டும். சஸ்விஹாவின் குணமே அவளுக்கு நோயைக் கொண்டு வரவா? எனக் கேட்டது.
“உன்னை எதற்காக எனக்கு காட்டினான் அந்த பாவி கடவுள்? பார்த்து, எனக்குள் அனுமதித்து, அணு, அணுவாக துடித்து, அலறியே சாகடின்னு.. சண்டாளா பிரம்மா! நல்லாவே என்னை வைச்சு செய்யுறே! போதும்பா! கூடப்பிறந்தவளின் ஒதுக்கம் தந்த வலி, பொருந்தாதவன் மோதிரம் மாட்டிய போது வெறுத்த நிலை, அப்பாவின் ஹார்ட் பிராப்ளம் என் இதயத்தை பிளந்த வலி, இது எல்லாத்தையும் தாங்கிக்கிட்டவளுக்கு இந்த வலி என்னால் முடியல”
“தெரியாம உன் மீது சரிந்து போன என் மனசை திருப்பிக் கொடேன். வேண்டாம்டா! எனக்கான ஒரு வாழ்க்கையை நான் ஏனோ, தானோன்னு வாழ்ந்துகிட்டு போயிடுறேன். என்னை நெருங்கி வந்து கொல்லாதே!” வலி தாங்க முடியாது அவளால் கதறவே முடியவில்லை தான். உதட்டைக்கடித்து முனகத்தான் முடிந்தது.
“என்னையும் அறியாமல், என் இயலாமையின் வெளிப்பாடாக உன்னை ஏதாவது செய்து விடுவேன். அதுதான் தானே நான் உனக்கு எப்பொழுதும் செய்யுறது. வார்த்தைகளால் குதறுவேனோ? வயலென்டில் இறங்குவேனோ? நான் அறியேண்டா” தன்னையும் மறந்து எதிரே அவன் வந்தால் அவனை காயப்படுத்திவிடுவேனோ என அஞ்சினாள்.
“நான் பட்ட துன்பங்களே போதும்.. நீயும் வேண்டாம்.. உன்னால் நான் என்னை இழக்கவும் வேண்டாம். என் பெற்றோரை அனாதையாக்கவும் வேண்டாம். அவர்களுக்கென்று இருக்கும் ஒரே பிடிமானம் நான். என்னை உருக்குலைச்சிடாதே! வேண்டாம் ” என சொல்லி, சொல்லி முகத்தை அடித்து கழுவி, அவளுக்குள் உறைந்து இருந்த அக்ஷ்ரன் மீதான காதலையும் கரைத்தாள்.
“நீ எந்த ஆற்றில் மூழ்கி, முக்கி எழுந்தாலும், உன்னை விடுவோமா?” என அவளது முகத்தில் கொட்டிய நீர்த்துளிகளில் ஊசலாடியவாறே கொக்கரித்தது அவளின் விதியும்.
***
விநாயகமூர்த்தி “உட்காரப்போகிறேன்” என சொல்லவும், கைத்தாங்கலாக அழைத்து வந்து வித்யாவும், வைதேகியும் ஈஸிசேரில் அமர வைத்தார்கள். அவர் உட்கார்ந்து கொஞ்சம் ஆசுவாசம் ஆகவில்லை. பிடி தலைவலியை! என பின்னாலேயே வந்து நின்றான் சத்தியன்.
அவனைப்பார்த்ததும் அவர் முகம் கறுக்க, அமைதியாக இருக்க முயற்சித்தார். தனக்கு என்ன நடந்து இருக்கு? இத்தனை நாளாகியும் ஒரு மனிதத்தன்மையோடு யாரும் எட்டியும் பார்க்கவில்லை. இந்தகுடும்பத்துக்காகவா தான் பெத்த பெண்ணை இரண்டு வருடம் பிரிஞ்சு இருந்தேன்? என எண்ணி வேதனைப்பட்டார்.
அவனோ, அங்கே இருந்தவர்களை கண்டுக்கொள்ளாது, சஸ்விஹா எங்கே என தேடினான். லண்டனிலியே சஸ்விஹாவை வேவு பார்க்க வைத்த சத்தியன். இங்கே அவனது இடத்தில், அவளை சும்மா விட்டு வைத்திருப்பானா? அவர்கள் வீட்டை விட்டு கிளம்பி போனதிலிருந்து, அவனுக்கு வேலையே அவளை கண்காணிப்பது தான்.
எப்படி சதி செய்தும் அவள் வேலைக்குள் நுழைந்து விட்டாளே. அதுவும் புகழ் பெற்ற நிறுவனத்தில். அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது போனது. கூடவே வண்டியில் ஒரு உதவாக்கரை சான்றிதழ் நண்பனை துணைக்கு அழைத்துக்கொண்டு, அவளின் செயலை அங்குலம், அங்குலமாக கண்காணிப்பதையே, தொழிலாக வைத்து இருந்தான். கோயிலில் சஸ்விஹா கூட அக்ஷ்ரனை கண்டு உத்தம நண்பனே ஏற்றியும் விட்டான்.
“பார்றா எப்படி இருக்கான்னு? அவனுக்கு முன்னாடி நீயெல்லாம் ஆம்பிளையே இல்லை” என. சத்தியனுக்கு ஏறிப்போய் இருந்த வெறி அக்ஷ்ரனைப் பார்க்க, பார்க்க நாலு அருவாளால் கீறி போட்டால் என்னவென இருந்தது. அதை சஸ்விஹாவிடம் காட்டாது போனால் அவன் சத்தியன் இல்லையே. நேராக அவள் வீட்டுக்கே வந்தும் விட்டான்.
“போதுமடா சாமி! பொல்லாத காதலும், பாழாய்ப்போன மனசும் படுத்தியது” என தன்னைத்தானே திட்டிவிட்டு, வெளியே முகத்தை துடைத்துக்கொண்டு வந்தாள். எதிரே இவளை பார்வையால் துகிலுரித்தவாறு சத்தியன் நின்றான்.
அவளுக்குள் எழுந்த சினத்தின் எடையை அளக்க எந்த எடை இயந்திரமும் இல்லை என்றானது. ஏற்கனவே அவள் மன உளைச்சலில் இருப்பவள், இவனது வருகையை எதிர்பார்க்காதவள், தந்தையின் உடல் நலன் கருதி அமைதியாக முயற்சித்தாள். பின்,
“அப்பா என்ன விட்டது எதுவோ ஒண்ணுன்னு தலை முழுகினோமே மறந்துட்டாங்களோ?” என அவள் சினத்தை அடக்கியவாறு கேட்டாள்.
“என்னடி எகத்தாளம்?” என அவன் கேட்டவாறு முன் வர, தந்தை அவசரமாக எழ முயற்சிக்கவும், அவளோ அசையாது,
“நீங்க அப்படியே உட்காருங்கப்பா! சாருக்கு என்ன வேணும்ன்னு கேட்டுட்டு கொடுத்திடலாம்” என அவள் ஒரு மார்க்கமாக சொன்னாள். வித்யா கலவரத்துடன் அவளைப்பார்த்து கண்களால் ‘பேசாதே!´ என ஜாடைகாட்டினாள். வைதேகி கணவரையும், மகளையும் மாறி மாறிப்பார்த்து என்ன நடக்கப் போகுதே? என பதட்டமாக ஆரம்பித்தார்.
“ஏண்டி ஒருத்தனும் உனக்கு வேலை தரமாட்டேன்னு கதவை மூடிட்டானுங்க. ஆனா அந்த கம்பெனிக்காரன் மட்டும் எப்புடிடீ உன்னை வைச்சுகிட்டான்?” என அவன் எடுத்த எடுப்பிலேயே குதர்க்கமாக பேச,
“சத்தியா!” என விநாயகமூர்த்தி குரல் அதட்டலுடன் வந்தது. சஸ்விஹா சளைக்காமல்,
“அப்பா அமைதியாக இருங்க! தெருவுல போற ஒண்ணு இடம் மாறி வந்து நின்னு குலைக்குது. பாவம் குலைக்கட்டும். அதனோட குணம். அதை மாத்த முடியுமா?” என அவனை ஏளனத்துடன் பார்த்து சொல்லவும், அவனோ சூடாகிப்போனவன்,
“ஏண்டி சொல்லமாட்டே! அந்த பாரிஸ்காரன் உன் பின்னாடி இருக்கானேன்னுற தெனாவெட்டுல பேசுறியா?” என அவன் கேட்கவும், சஸ்விஹா கடுப்புடன்,
“ஏய் என் பொறுமையை சோதிக்காம போயிடு!” என அவள் விரல் நீட்டி எச்சரிக்கவும், விநாயகமூர்த்தியும்,
“சத்தியா உங்க சகவாசமே வேணாம்ன்னு வந்துட்டோம்ல.. போ! போய் உருப்படுற வழியைப்பாரு” என அவர் எழுந்த கொள்ள, அவன் அவரிடம் பாய்ந்தான்.
“யோவ் மாமா! உன் பொண்ணு சர்டிபிகேட் தந்துட்டா மட்டும் அவ பத்தினின்னு ஆயிடுமா? அவ முந்தானையில் தொங்கிகிட்டு இருக்கிறதெல்லாம் அந்த பாரிஸ் காரன் தான்” அவன் வன்மத்துடன் பேச ஆரம்பிக்க, சஸ்விஹா எட்டு வைத்து வந்தவள்,
“இன்னொரு வார்த்தை பேசினே கொன்னே போடுவேன்” என அவள் அங்கே ஏதாச்சும் கிடைக்குமா? என தேடவும், வித்யா அவளின் கரத்தைப்பற்றி அமைதியாக்க முயற்சித்தாள். வைதேகி அவனை மனதுக்குள் சபித்துக்கொண்டார். அவனோ,
“ஆமாண்டி நீ கொல்லுவே! நான் இந்தா கொல்லுன்னு *** புடிச்சுகிட்டு தொங்குவேன்” என அவன் பேசவும், சஸ்விஹா மானம் போன உணர்வுடன் பின்னுக்கு விழப்பார்த்தாள். வித்யா பிடித்துக்கொண்டு, அருவருப்புடன், வெறுப்பாக அவனைப்பார்த்தாள். விநாயமூர்த்தி எட்டி ஓங்கி ஒரு அறை கொடுத்தார்.
“பொறுக்கி ..உன் நாக்குல என்னத்த வைச்சு இருக்கே ..? என் தங்கச்சி பையனாச்சேன்னு தான் நான் பல்லை கடிச்சுக்கிட்டு இருந்தா.. நீ பாட்டுக்கு துள்ளிட்டு போறே.. போடா வெளியே!” என அவர் கர்ஜிக்கவும், அவருக்கு நெஞ்சு பகுதி சுள்ளென வலிக்க, அதை பிடித்தவாறு சரிய, சஸ்விஹா,
“அப்பா” என ஓடி வந்து, தாங்கிக்கொண்டு அவரை உட்கார வைத்துவிட்டு, சீற்றத்துடன் சத்தியன் பக்கம் திரும்பி,
“என்னடா வேணும் உனக்கு? எங்களை நிம்மதியா இருக்க விடவே மாட்டியா?” என வெடித்தாள். அவனோ தனது ராட்சியம், அவன் வைத்ததே சட்டம் எனும் தோரணையில் பேசினான்.
“முதல்லே நீ வேலைக்கு போறதை நிறுத்து!” என அவன் கட்டளை போடவும், அவளோ,
“அதை சொல்ல யார்ரா நீ?” என சீறினாள்.
“உன் புருஷண்டி ! நான் இங்கே குத்துக்கல்லா காத்திட்டு இருக்க, அந்த பாரிஸ் காரன் என்னவெல்லாம் பண்ணி இருக்கான்? அவனோட கம்பெனியில வேலையும் தந்து, ஏற்றி இறக்க வண்டியும் வைச்சுக்கொடுத்து, மகாராணி பின்னாடியில்லே வந்து இருக்கான் உன் கள்ளக்காதலன்” அவன் சொல்ல சஸ்விஹா நெற்றியில் அடித்து,
“டேய்! நான் என்ன மனநிலையில் இருக்கேன்னு தெரியாம வார்த்தையை விடாதே!” என சினத்துடன் சீறவும்,
“அட சீ நிறுத்து! எவனுமே உனக்கு வேலை தராம போனதுக்கு நான் தாண்டி காரணம்.. ஆனா அந்தக்கம்பெனிக்காரன் மட்டும் காதுல வாங்காம உன்னை வேலைக்கு சேர்த்ததும் ஆரம்பிச்ச டவுட்டுடி.. அப்புறமாத்தான் புரிஞ்சது அது உன்னோட கள்ளக்காதலன் கம்பெனின்னு.. எப்புடிடீ?” அவன் சொன்னதும் தான் சஸ்விஹாவுக்கு எல்லாமே புரிந்தது.
“பாவி நீ பண்ண நாசவேலை தானா? என் பொண்ணை அவனுங்க ரேட் எவ்வளவுன்னு விலை பேசினாங்களா?” என அவனது சதியினை புரிந்து போன கோபத்தில், விநாயகமூர்த்தி எழவும், அவள் தந்தையை தோள் பற்றி அழுத்தி அமரவைத்துவிட்டு,
“இதப்பாரு! நீ சொல்லித்தான் எனக்கே தெரியுது அது அக்ஷ்ரன் கம்பெனின்னு. நல்லது. நீ பண்றதுக்கு எல்லாம் ஒரு எல்லை வைக்க ஆண்டவன் காத்திட்டு இருக்கான். போயிடு! நான் எதையும் கேட்கவும் தயாராக இல்லை. உன்னை பார்க்கவே அருவருப்புடன் கூடிய வெறுப்பு வருது. தங்கம்போல இருந்த தண்டபாணி மாமாவுக்கா இப்படி ஒரு பிள்ளை?” என அவள் சொல்லிவிட்டு, முகத்தை திருப்பிக்கொண்டு உள்ளே போகவும், அவனோ,
“அடியேய்! இதையும் கேட்டுவிட்டுப் போ! உன் அப்பன் உனக்கு மாப்பிளை பார்த்துட்டு இருக்கார்லே. எல்லா மாப்பிள்ளைக்கும் நான் தான் உன் புருஷன்னு நம்ம நிச்சயதார்த்த போட்டோவை ரிலீஸ் பண்ணிட்டேன். எவனும் உன்னை கட்டிக்க வரமாட்டான். அப்படி எவனாச்சும் வந்தாலும், இந்த சத்தயன் சமாதி கட்டிடுவான். ஹே.. ஹே.. நீ வாழ்ந்தாலும் என்னோடதான்.. வாழாம போனாலும் வீட்டோடு தான்.. எந்த ஆம்பிளையின் மூச்சும் உன்னை நெருங்க விடவேமாட்டேண்டி! வரட்டா!” என அவன் மிதப்பாக சொல்லிவிட்டு, மாமனாரைப்பார்த்து,
“யோவ் மாமனாரே! பொண்ணுக்கு மாப்பிளை தேடுறதை நிறுத்திக்கோ! பாவம் பாதிப்பேர் ஹாஸ்ப்பிட்டல்லே இருக்காங்க. நானும் டயர்டாகிட்டேன் எவ்ளோதான்னு அடி கொடுக்குறது.. நல்லா முட்டையும், இறைச்சியுமா தின்னு தேத்திட்டு வரேன். யோசிச்சு வை!” என அவரைப்பார்த்து கை காட்டி எச்சரித்து விட்டுப்போனான்.
110
ஒரு சாக்கடை நாற்றம் அடித்து ஓய்ந்தது போலிருந்தது எல்லோருக்கும்.
“என்ன கொடுமைங்க? எங்களுக்கு நாதியில்லைன்னு இவன் இந்த அடாவடி பண்றானா?” வைதேகி அழவும், சஸ்விஹா தலையில் கை வைத்து இடிந்து உட்கார்ந்திருந்தவள், வித்யா அருகே வந்து அமர்ந்து தோழியின் தோளைப்பற்றி,
“சஸ்வி! சத்தியன் இவ்வளவு சைக்கோவா மாறுவான்னு நினைக்கலைடி” என குரல் தழுதழுத்தாள்.
“நான் எதிர்பார்த்தேன்” என அவள் மெல்ல நிமிர்ந்து சொன்னவள், தந்தையைப்பார்த்து,
“சாரிப்பா! எனக்கு அது அக்ஷ்ரனின் கம்பெனின்னு தெரியாது. என்னை மன்னிச்சுடுங்க” என அவள் சொல்ல, அவரோ,
“என்னம்மா நான் உன்கிட்டே விளக்கம் கேட்டேனா?” என அவர் நொந்து கொண்டார். அவளோ தனது மொபைலை எடுத்து, தன்னை வேலைக்கு அமர்த்திய எம்டி வாசுவுக்கு போன் போட்டாள். மறுமுனை எடுக்கவும்,
“சார் நான் சஸ்விஹா” என சொல்லவும் அக்ஷ்ரனின் நண்பனான வாசு எனப்படும் வாசுதேவன்,
“சொல்லுங்க மிஸ் சஸ்விஹா” என்றான். அவளோ ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டு,
“சார் நான் வேலையே ரிசைன் பண்ணிடுறேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துல என்னோட ரிசைனேஷன் லெட்டர் மெயிலுக்கு அனுப்பிடுறேன். நேர்ல வர முடியாத சூழ்நிலை. ப்ளீஸ் அக்செப்ட்” என கேட்கவும், அவன் உட்பட, மற்றவர்களும் அதிர்ச்சியானார்கள். வித்யாவோ,
“ஏய்!” என தடுக்க. விரல் வாயில் வைத்து ‘பேசாதே’ என சைகை செய்தவள், வாசுவின் குரல் வர அதில் கவனம் திருப்பினாள்.
“மிஸ் சஸ்விஹா! நீங்க திடீர்ன்னு வேலையை ரிசைன் பண்ணக்காரணம் என்னவென தெரிஞ்சுக்கலாமா?” என அவன் பவ்யமாக கேட்கவும், அவளோ கண்களை மூடித்திறந்து, அக்ஷ்ரனின் கம்பெனியின் எம்டியாக இருந்தாலும் அவனிடம் பொய் பேசுவது, அக்ஷ்ரனிடம் பேசுவது போலவே தான். ஆனாலும் பொய் சொன்னாள்.
“நான் சொந்தமா பிசினஸ் பண்றதாக இருக்கேன். அதுக்கு ரெடியாகணும்.. ப்ளீஸ்” எனவும், அவனோ நம்பியது போல தெரியவில்லை. ஒரு பெருமூச்சு விட்டு, பின்,
“மிஸ் சஸ்விஹா ஒரு விஷயம் சொல்லிட்டு நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன். வித் யுவர் பர்மிஷன்” எனவும், அவளும்,
“ம் ..சொல்லுங்க” என்றாள்.
“நீங்க இந்தியா வந்து இறங்கியதில் இருந்து, உங்களுக்கும், உங்க எதிர்காலத்துக்கும், எந்த பாதிப்பும் வரக்கூடாது. நீங்க எங்கும் வேலை தேடி அலையவே கூடாது. கல்யாணம் பண்ணாலும் சரி, வேலை தேடினாலும் சரி, நீங்க சந்தோஷமாக இருக்கணும். அதுதான் ஒருத்தனுக்கு வேணும்.” அவன் சொல்லத் தொடங்கவும், மற்றவர்கள் மவுனமாக கேட்க ஆரம்பித்தனர்.
“அதனால் மிஸ் சஸ்விஹாவை பின் தொடர்ந்து அவங்களைப்பத்தி அப்டேட் பண்ற வேலையை எனக்கு கொடுத்தது. என்னோட பிரண்ட், இந்தக்கம்பெனி முதலாளி, உங்க பழைய பாஸ் அக்ஷ்ரன் தான்” அவன் சொல்ல,
எல்லோரும் நெகிழ்ந்து போய் இருக்க, சஸ்விஹாவுக்கு சற்றுமுன் குளியலறையில் கழுவி கரைத்த உணர்வுகள், உயிர் பெறுவோம் என ஓலமிட்டது. அடக்கினாள். கண்களை மூடியவாறு மறுமுனை சொல்வதை கேட்டுக்கொண்டாள்.
“நானும் ஆச்சர்யத்தோடு தான் அவன் சொன்ன வேலையை செய்தேன். ஏன்னா அவன் எந்த பெண்ணையும் இந்தளவுக்கு கேர் எடுத்தது இல்லை. உங்க குடும்ப விவகாரம் முழுக்க அவனுக்கு அப்டேட் தான். சாரி உங்களுக்கு கோபம் வரும் தான்.”
“…. ”
“ஆனா எனக்கு என் நண்பன் முக்கியம். மத்தவங்க உணர்வுகளை புரிஞ்சு நடந்துக்குறவன், அவனோட பயம் என்னென்னு எனக்கு தெரியாமல் இல்லை. அவன் ஏற்கனவே ஓர் அடி வாங்கியவன். நீங்க படும் பாட்டினை பொறுக்க மாட்டாது, அவனோட கம்பெனின்னு சொல்லிக்காது, என் மூலமா உங்களுக்கு வேலைக்கான ஆர்டரை அனுப்ப சொன்னான். ”
“….”
“அவனோடதுன்னு சொன்னா நீங்க வரமாட்டீங்கன்னும் சொல்லி, வினித்தை வேற பிரஞ்சுக்கு மாத்திட்டு, என்னை இங்கே போட்டான். நீங்க வேலைக்கு சேர்ந்துட்டீங்க. உங்க அப்பாவுக்கு ஆபரேஷனும் பண்ணிட்டீங்கன்னதும் தான் அவன் நிம்மதியா மூச்சு வாங்கினான்.”
“…”
“ஆனா இப்போ ரிசைன் பண்றது தெரிஞ்சா பீல் பண்ணுவான். நீங்க பிசினஸ் பண்றதாக இருந்தாலும் அவனுக்கு சந்தோஷமே. என்ன ஹெல்ப் என்றாலும் செய்ய காத்திருக்கான். ஆல் தி பெஸ்ட்” என சொல்லிவிட்டு வைத்தான்.
சஸ்விஹா சுவற்றில் சாய்ந்து கொண்டாள். கண்கள் திறக்கவே இல்லை. கன்னங்கள் முழுதும் நீர். வித்யா வாஞ்சையுடன் பார்த்து துடைக்கவும், பேச்சிழந்து நின்றார்கள் பெரியவர்கள்.,
“பார்த்தியா எங்கோ பிறந்த பிள்ளைக்கு இருக்குற கரிசனையோ, அக்கறையோ, துடிப்போ, கூடப்பிறந்தது பெத்ததுக்கு இல்லாம எப்படியெல்லாம் நம்ம சித்திரவதை செய்யுதுன்னு?” விநாயகமூர்த்தி வேதனையுடன் கூறவும்,
சஸ்விஹாவுக்கு நெஞ்சை இறுக்கிய வலி மீண்டும் வரவும், அவள் மூச்சு விடவே சிரமப்பட்டாள். தான் வேண்டாம், வேண்டாம் என்றாலும், சூழ்நிலையும், காலமும் அவளை அந்த வலைக்குள்ளேயே இழுத்துப் போவதை உணர்ந்தாள். அவளால் அக்ஷ்ரன் மீதான காதலை கட்டுப்படுத்தவே முடியாது போலிருந்தது. பற்களை கடித்து ´அவனை நினைக்காதே மனமே! வேணாம்ன்னு சொல்லு!’ என தனக்குள் சொல்லிக்கொண்டிருந்தாள். விநாயகமூர்த்தி,
“நான் பார்த்து வைச்சுருக்குற இன்காம் டாக்ஸ் ஆபிசர் பையன்கிட்டே, இவனோட வேலை பலிக்கலை வைதேகி! என் பொண்ணுக்கு அடுத்த முகூர்த்தத்தில கல்யாணம் பண்ணி, அவளை மாலையும், கழுத்துமா பார்க்கல, நான் விநாயகமூர்த்தி இல்லை” என சவால் விட, ஏற்கனவே வலியில் துடித்துக்கொண்டிருந்தவள்,
“அம்மா!” என வாய்விட்டே முனகவும், வைதேகி திடுக்கிட்டு மகளருகே ஓடி வந்தார். வித்யாவும் என்னவென்று? அவளை பிடிக்க? அவளோ உதட்டைக்கடித்து, விழிகள் நிறைக்க, தலையை மட்டும் இடது வலதாக ஆட்டினாள்.
எவ்வளவுக்கு மனதினை ஒரு புதைகுழியாக்குறோமோ? அவ்வளவுக்கு பல வியாதிகள், மன உளைச்சல், மன அழுத்தம் எனும் போர்வைக்குள் முளை விட ஆரம்பிக்கும். சஸ்விஹா வளர்ந்த சூழ்நிலையில் அவளால் அவளின் சிறு விருப்பு, வெறுப்புகளை வாய் திறந்து சொல்லியிராதவள். இன்று தனது காதலை மட்டும் கொட்டிவிடுவாளா? அதுவும் பெற்றவர்கள் முன்.
“ஏய்’ என்னடி உனக்குள்ளே வைச்சு மருகிகிட்டு இருக்கே? என்கிட்டே கொட்டேண்டி!” என வித்யா அதட்டவும்,
“ஓ..ஓ…ண்ணும்…மில்லை” என சொல்லி மீண்டும் மேற்பற்களால் கீழ் உதட்டைக்கடிக்கவும், வித்யா கோபமாகி,
“என்னடி ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லைன்னு உனக்குள்ளேயே அடக்கிட்டு இருக்கே? உணர்ச்சிகளை அடக்கலாம்டி! ஆனா இப்படி உன்னைப்போல, உள்ளுக்குள்ளே புதைச்சுட்டு இருக்க கூடாது! இப்போ சொல்லப் போறியா? இல்லை நான் வாய் திறக்கட்டுமா?” என அவள் ஒரு முடிவோடு கேட்கவும், சஸ்விஹா விரக்தியுடன் பார்த்து,
“என்னத்த நீ திறந்து சொல்லப் போறேன்னு எனக்குத் தெரியும். என்னை விடு! நான் சரியாயிடுவேன்” என அவள் பேச, பெரியவர்கள் புரியாது துடித்துப்போனவர்கள்.
“என்னம்மா? என்னென்னு வாய் திறந்து சொல்லும்மா!” என கலங்க ஆரம்பிக்கவும், அவளோ,
“அய்யோ ஒண்ணுமில்லைமா! சத்தியன் பண்ற டார்ச்சர்ல எனக்கு லேசா நெஞ்சு வலிக்குது. அதான்” என அவள் பொய் சொல்லவும், அவர்கள் கலங்கவும், வித்யா நம்பவேயில்லை. முறைத்தாள்.
“அவனோட அராஜகத்துக்கு முடிவு கட்டிடலாம்மா. நாளைக்கே மாப்பிளை வீட்டுக்காரங்களை வர சொல்லிடுறேன்” என விநாயகமூர்த்தி தனது மொபைலை தூக்கவும், சஸ்விஹா பதட்டமாக எழுந்து,
“அப்பா! எதுக்கோ பயந்து, எதையோ கொளுத்துறது போல. அவனுக்கு பயந்துகிட்டு நான் அவசரமாக ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டணுமா?” என வெறுத்துப்போய் கேட்டாள். அவரோ,
“அப்படியெல்லாம் இல்லைம்மா. நான் வர சொல்லிடுறேன். நீ பார்த்து பேசு! உனக்கு புடிச்சாத்தான் கல்யாணம்” என அவர் சொல்லிவிட்டு, மாப்பிளை வீட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தி விட.
´வேண்டாம் என கத்துடி ராட்சஸி! எங்களால் வலி தாங்க முடியவில்லை’ என சஸ்விஹா இதய அறைகள் பட், பட் என அடித்தது. உதட்டைக்கடித்துக்கொண்டு தொப்பென்று வாசல் படிகளில் அமர்ந்துவிட்டாள். சில நொடிகளில் பேசிவிட்டு வைத்தவர், முகம் ஏகத்துக்கும் கவலையில் மூழ்கியது.
“என்னங்க சொல்றாங்க மாப்பிளை வீட்டுக்காரங்க?” ஆவலுடன் வைதேகி கேட்கவும், சஸ்விஹாவுக்கு நிலைமை கை மீறிப்போனாலும்,
´வரட்டும் அவனிடம் சொல்லி விடலாம் என்னை பிடிக்கலைன்னு சொல்லுன்னு’ என மனதுக்குள் சொல்லியவள், பின் அமைதியாக இருக்க முனைந்தாள். தந்தையின் குரல்,
“அந்த மாப்பிளையோட அப்பா பேசினார் வைதேகி. அந்த பையனை இவன் சத்தியன் அடிச்சு துவைச்சு இருக்கானாம்.”என்றது.
“கடவுளே”
“இப்படியொரு முறைப்பையன் இருக்குற பொண்ணுக்கு, அவங்க பையனை கட்டித்தந்தா அவனை இழந்துடுவோமாம்.. வேணாம்ன்னு சொல்லிட்டாங்க” என அவர் கண்ணீரை துடைக்க கூட தோன்றாது சொல்லவும், சஸ்விஹா மனசுக்குள்,
‘அப்பாடா’ என நிம்மதியானது. ‘கடவுளே இந்த மட்டிலாவது நீ எந்தன் பக்கம்’ என தனக்குள் நன்றி சொல்லிக்கொண்டாள். அதுக்குள்ளே நிம்மதியாக விட்டுவிடுவேனா? என அந்தக்கடவுள் சிரித்தார்.
“அய்யோ ஈஸ்வரா! அப்போ நம்ம பொண்ணுக்கு ஒரு வழி காட்டமாட்டியா?” என்ன பாவம் செய்தோம்ன்னு தெரியலையே. கடைசியில அந்த கேடு கெட்டவன் சொன்னது தான் நடக்கப்போகுதா?” என வைதேகி குமுற ஆரம்பிக்கவும்,
அவர்கள் வாசலில் வந்து நின்றது ஒரு வண்டி. மறுபடியும் சத்தியன் தான் வந்து விட்டானோ? என சினத்தோடு, எல்லோரும் வாசலைப் பார்க்க, வந்து நின்றது கார்.
111
அதிலிருந்து இறங்கியவனைக்கண்டதும், அத்தனை பேரும் எழுந்து நின்றனர். சஸ்விஹாவோ, விக்கித்து, திகைத்துப்போனாள். அக்ஷ்ரன் அவள் வீடு தேடி வருவான் என எதிர்பார்த்திருந்தால் அல்லவா? விநாயகமூர்த்தி அவசரமாக எட்டு வைத்து,
“வாங்க! வாங்க!” என கரம் கூப்பி வரவேற்கவும், வைதேகி அவனை பேசியதை நினைத்து மனம் வருந்தி “மன்னிச்சுடுங்க” என கரம் கூப்பினார்.
“அம்மா!” என அவர் கரத்தைப்பற்றியவன்,
“ம்ஹூம்” என மறுப்பாக தலையாட்டிவிட்டு கரத்தை விட்டான். பின் எல்லோரையும் பார்த்து,
“வணக்கம்” என்றான். வித்யா நேரில் அவனைக்கண்டதும்,
‘அடிப்பாவி! இவனை மனசுக்குள்ளே பொத்தி வைச்சுகிட்டுதான் நீ இத்தனை வேஷம் கட்டிக்கிட்டு இருக்கியா!? இரு! உன்னை என்ன பண்றேன் பாரு’ என தனக்குள் சொல்லிக்கொண்டு பதிலுக்கு வணக்கம் வைத்தாள்.
அவனை உள்ளே அழைத்து சோபாவில் உட்கார வைத்தவர்கள், பவ்யமாக என்ன குடிப்பானோ? எனும் யோசனையில் மகளைப்பார்த்து,
“என்ன குடிப்பார்?” என வைதேகி காதில் முணுமுணுக்கவும், அவளோ அதிர்ச்சியில் இருந்து மீளாது, அவனை எப்படி மனதில் இருந்து, இதோ இந்த வீட்டில் இருந்து, விரட்டுவது என தெரியாது ஸ்தம்பித்து நின்றிருந்தாள்.
“பார்மாலிட்டீஸ் எல்லாம் பார்க்காதீங்கம்மா” என அன்பாக அவரிடம் சொல்லிவிட்டு, அக்ஷ்ரன் நேராக விநாயகமூர்த்தியினைப் பார்த்து,
“சார் என் மேல கோபம் இருக்கலாம். உங்களுக்கு தெரியாமல், உங்க மகளை வாட்ச் பண்ண செயலுக்கு. அதுக்கு நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். தண்டனையே தந்துடுங்க” அவன் கேட்டதும்,
“த .. ம் ..பி” என அவர் திணறவும், அவரின் கையை தனது கைக்குள் வைத்து,
“ஆனா உங்க மகளுக்கு என் மேல என்ன வெறுப்புன்னு தெரியலை. இங்கே வேலை தேடுறதாக இருந்தா, என்னோட கம்பெனியின் பிராஞ்சுல வேலை இருக்கு. செய்யலாம்ன்னு எவ்ளோ கேட்டுவிட்டேன். அவங்க மறுத்துட்டாங்க”
“…”
“இப்போ சுத்தி வளைச்சு அவங்களுக்கு வேலை கொடுத்தேன். ஆனா அவங்களுக்கு என் மேல எந்தளவுக்கு வெறுப்பு இருந்திருந்தா, அது என்னோட பிராஞ்சுன்னு தெரிஞ்ச அடுத்த செகண்டே ரிசைன் பண்ணுவாங்க?” அவன் வேதனை குரலில் ஓட கேட்டான்.
“எனக்கும் அதிர்ச்சி தான்” என விநாயகமூர்த்தி தலை குனிந்திருந்த மகளைப் பார்த்தவாறு சொன்னார்.
“அவங்க வெறுக்குற அளவுக்கு நான் என்ன தவறு இழைத்தேன்? அதுவும் என் மரியாதைக்குரியவங்களுக்கு ” அவன் சொல்ல வித்யா அவனை பார்த்து பெருமைப்பட்டாள்.
“அவங்க பிசினஸ் பண்ணப்போறதாகவும், அதனால வேலையை விடுறதாகவும் சொல்லி இருக்காங்க. நான் நம்பிட்டேன்னு சொல்லுங்க. சப்போஸ் அது தான் ரீசன்னா உதவிகள் செய்ய காத்திருக்கிறேன். இதை சொல்லிட்டு போகத்தான் வந்தேன்” என அவன் எழுந்து கொண்டான். சஸ்விஹாவை அவன் திரும்பியும் பார்க்கவில்லை.
‘அவனை நேருக்கு நேர் பார்த்து விழிகளால் மன்னிப்பு கேட்டுவிடு!’ என துடித்த மனதினை எவ்வாறு அடக்கவென்றே சஸ்விஹாவுக்கு தெரியவில்லை. அவனது வார்த்தைகள் சுட்டது.
‘நானாடா உன்னை வெறுக்கிறேன்? நானாடா உன்னை விட்டு ஓடப்பார்க்குறேன்?‘ என அலறியது.
“தம்பி! ரொம்ப நன்றி வீடு தேடி வந்து இப்படி உதவி செய்யுறேன்னு சொன்னதுக்கு..நீங்க நல்லதுக்கு தான் செஞ்சீங்க. ஆனா என் பொண்ணு அவ விருப்பத்துக்கு நாங்க குறுக்கே நிற்கமாட்டோம்” என அவர் மகளை ஒரு பார்வை பார்த்தவாறு சொல்லவும், வித்யாவுக்கு அவர் சஸ்விஹாவின் மனதை அறிந்து கொண்டு விட்டாரோ? எனும் எண்ணம் உதித்தது.
“அடடா கண் கொள்ளா காட்சியாக இருக்கே” என பல கை தட்டல்கள் கேட்க, எல்லோரும் திரும்பினார்கள். வாயில் இருந்த சிகரெட்டை ப்பூ என வெளியே ஊதி அரக்கனின் அரசன் போல் நின்று இருந்தான் சத்தியன்.
அவனை அங்கே அந்த நேரத்தில் அதுவும் அக்ஷ்ரன் வந்து நிற்கும் கணத்தில் கண்டதும், அனைவரும் கதி கலங்கித்தான் போனார்கள். அக்ஷ்ரன் வந்திருப்பவன் யாரென அறிந்து கொண்டதும் பேசாது போகத்தான் முனைந்தான்.
“நான் வரேன் சார்” என அவன் தலையசைப்புடன் வெளிய நடக்க, சஸ்விஹாவுக்கு அவனை போகாதே! என கத்த வேண்டும் போலிருந்தது. அவளது கண்களில் தெரிந்த தவிப்பினை வித்யாவும், வைதேகியும் கவனிக்கத் தவறவில்லை.
***
“அலோ மிஸ்டர் பாரிஸ்! கொஞ்சம் நில்லுங்க!” என அவன் அவனை வழி மறிக்கவும், சஸ்விஹா தான் முதலில் சுதாரித்தாள். ‘இந்த அரக்கன் அக்ஷ்ரனை ஏதாவது செய்து விடுவானோ?’ எனும் பயம் அவளது முகத்தில். விநாயகமூர்த்தியும்,
“சத்தியா! பேசாம இரு! நீங்க போங்க தம்பி!” என அவர் சொல்லவும், அக்ஷ்ரனுக்கு போகவே மனது வரவில்லை. திரும்பி இம்முறை சஸ்விஹாவை நேருக்கு நேர் பார்த்தான். அவளது விழிகள் பல ஆயிரம் கதை பேசியது. நெற்றியை வருடிவிட்டு,
“என்னோட பேர் அக்ஷ்ரன்” என அவன் கரம் நீட்டவும்,
“தெரியுமே உன்னோட ஜாதகமே என் கையில” என அவன் ஒருமைக்கு தாவி அக்ஷ்ரனை எரிப்பது போல பார்க்கவும். நீட்டிய கரத்தை பாக்கெட்டுக்குள் வைத்தவன், அவனுக்கே உரிய ஸ்டைலில்,
“ஓ! ஓ! என் அம்மா என்னோட ஜாதகத்தை கூகுளுக்கு வித்ததாக நினைவில்லையே” என அவன் தலை சரித்து சொல்லவும், வித்யா அவனின் அந்த அசராத ஆண்மையை பார்த்து, சஸ்விஹா காதில்,
“ஏய் செம்ம ஸ்டைலிஸ்ட்டுடி” என்றாள். சஸ்விஹா பேசாது அவனை ரசிக்க துடிக்கும் விழிகளை தாழ்த்திவிட்டு, தோழியை முறைத்தாள்.
“டேய் பாரிஸ் வெண்ணெய்! ஒழுங்கு மரியாதையா நாட்டை விட்டு ஓடிப்போயிடு!” என அவன் மிரட்டலுக்கு போகவும், அக்ஷ்ரன் அப்பொழுதும் அசையாது,
“ஏனாம் இந்த நாட்டை நீங்க தான் கட்டி ஆளும் மன்னரோ?” என புன்னகையுடன் கேட்க, மற்றவன் கடுப்பாகி,
“டேய்! என்னைப் பத்தி உனக்குத் தெரியாது!” என சீற, அவனும்,
“தெரியாமல் இருந்தாலும் நோ அப்ஜெக்ஷன். தெரிந்து கொண்டாலும் நோ ரியாக்ஷன்” என அவன் தோள்களை குலுக்கவும், மற்றவர்களுக்கு அவனது பேச்சு ஆச்சரியம் கொடுக்க, சஸ்விஹாவுக்கு அவனது பேச்சினை ரசிக்கும் மன நிலையை விட, மற்றவன் என்னவாகப்போகிறான்? எனும் பயமே தூக்கலாக இருந்தது.
“தம்பி! நீங்க போங்க! இவன்கிட்டே பேசினா நாம தான் பைத்தியமாகணும்” விநாயகமூர்த்தி சொல்லவும், அவனுக்கு சினம் எட்டிப்பார்க்க,
“யோவ் மாமா! மூடிக்கிட்டு போய்யா!” என அவர் நெஞ்சில் கை வைத்து தள்ளப்போக, குறுக்கே அக்ஷ்ரன் ஒரு எட்டில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
எல்லோருக்கும் அதிர்ச்சியும், அவமானமும் தாக்கியது. அக்ஷ்ரன் முன் மரியாதை இல்லாமல் போனது போலவும் தோன்றியது. சஸ்விஹாவோ அவனை எரித்து விடுவது போல பார்க்கவும், அவளது விழிகளில் தெரிந்த நெருப்பினை முதல் முறையாக கண்ட அக்ஷ்ரன் விழிகள், அவளது விழிகளை சிறைப்பிடிக்க, அவளுக்கோ நெருப்பின் மீது பனித்தூவல் தூவியது போலிருந்தது அவனது பார்வையின் ஈர்ப்பு. சட்டென்று முகம் திருப்பி விட்டு,
“சத்தியா பிரச்சனை பண்ணமா போயிடு!” என்றாள் வாசலைக்காட்டி. அவனா கேட்பான்?
“ஏய் நிறுத்துடி! உன்னோட கள்ளக்காதலன் வந்துட்டானேன்னுற தெனாவெட்டுல இருக்கியா?” என அவன் சீறினான்.
“சத்தியா! விநாயகமூர்த்தி அதட்டவும், சஸ்விஹாவுக்கு, அக்ஷ்ரன் முன் தன் மானம் போன உணர்வு. அவளது முகம் கன்றிப்போகவும், அதைக்கவனித்த அக்ஷ்ரன்,
“அலோ மிஸ்டர் சத்தியன்! முதலில் நீங்க பண்புள்ள மனிதனா பேசலாமே” என்றான் அவனைப்பார்த்து. அதைகேட்டவன்,
“ஏய் பண்புள்ள மனிதனா முதல்லே நீ இருடா! அடுத்தவன் பொண்டாட்டி பின்னாடி அலைஞ்சுக்கிட்டு இருக்காம” என அவன் சொல்ல, அக்ஷ்ரன் பார்வை இடுங்க,
“தாங்கள் பேசும் வார்த்தைக்கு அர்த்தம் புரியாது விழிக்கும் இந்த மிஸ்டர் பாரிஸ் வெண்ணெய்க்கு விளக்கம் தர முடியுமா?” என அவன் கேட்க,
விபரீதமாகவே எதுவோ நடக்கப்போகிறது என சஸ்விஹா தந்தையைப்பார்த்து பார்வையால் கெஞ்சினாள். வித்யாவோ,
“அங்கிள்! இவன் எந்த நேரமும் நம்மைத்தான் நோட்டம் விட்டுகிட்டு இருக்கான் போல” எனவும், அவரும் மெல்லிய குரலில்,
“பாவிப்பயல் அக்ஷ்ரன் தம்பி வந்து இருக்கிறது தெரிஞ்சுதான் வம்பு இழுக்க வந்து இருக்கிறான்” என கவலைப்பட்டார். சத்தியன் தனது மொபைலை எடுத்து,
“பார்றா பொறுக்கி! நீ இப்படித்தானே?” என அவன் அதே படுக்கையறை காட்சி படங்களை காட்டவும், சஸ்விஹா முகத்தை மூடிக்கொண்டு மடங்கி உட்கார்ந்து குலுங்கவும், அதை முதல் தடவையாக பார்த்த அக்ஷ்ரன் துடித்துபோனாலும், வெளிக்காட்டாது, அந்த படங்களை துளியும் சினம் கொள்ளாது, தலையை அப்படியும், இப்படியும் சரித்து, பார்த்துவிட்டு,
“அடடா இந்த ஹேர் ஸ்டைலை இப்படி மாத்தி இருக்கணும். அந்த சட்டை எனக்கு நல்லாயில்லை. அப்புறம் கையில கூட வாட்ச் என்னோட பிராண்டு இல்லையே. என்னப்பா ai போட்டு வைச்சுருக்கே? எனக்கு சுத்தமா செட் ஆகலை!” என உதடு பிதுக்கவும் சத்தியன் சூடாகிப் போனான்.
மற்றவர்களோ அவன் இத்தனை இலகுவாக எடுப்பான் என எதிர்பாராதவர்கள் வியந்து நிற்க, அவனது பதிலால் சஸ்விஹா வழிந்த நீரைக்கூட துடைக்காது அவனைப்பார்த்தாள். அவனோ ஷேரினை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டவன், சத்தியனைப் பார்த்து,
“ஆமா உங்களுக்கு என்ன வியாதி?” எனக் கேட்டான். அவன் கேட்டதும், சத்தியன்,
“ஏய் !” என கத்த,
“ஸ்ஸ்ஸ்.. எனக்கு கத்தி பேசுறவங்களை ஒயரை கட் பண்ற வார்டுக்கு அனுப்புற வியாதி இருக்கு. சோ ப்ளீஸ்” என அவன் சொல்லவும், வித்யா மெல்ல புன்னகைத்தவாறு, சுவாரசியமாக தோழி அருகே படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள். விநாயகமூர்த்தியும் சோர்ந்து போனவராக ஒரு முடிவுக்கு வரட்டும். என அமர்ந்து கொள்ள, வைதேகி அவர் பின்னால் நின்று கொண்டார். மனமோ வேண்டாத தெய்வம் இல்லை.
“இதப்பாரு! இது எப்படி எனக்கு வந்திருந்தாலும், எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை..நீ இங்கே வருவது இதுதான் கடைசியும், முதலும். இவ.. இவ.. இருக்காளே.. இவ உன்னைப்பார்த்தி ஒரு வார்த்தை பேசினா அப்படியே பொங்கிடுறா..” என சஸ்விஹாவை உதைக்க கால் தூக்கவும், அக்ஷ்ரன் சட்டென்று எழுந்து அவனது நெஞ்சில் கை வைத்து, தனது சேரில் தள்ளி உட்கார வைத்தவன், விரல் அவனது முகத்துக்கு நேராக பிடித்து,
“ஒரு பொம்பளைதானே உன்னை பெத்தாங்க? உன் அம்மா மேல இப்படி காலை தூக்குவாயா? மிருகம் கூட உன்னைப் போல இருக்காது. நீ என்ன சைக்கோக்களின் லீடரா?” என அவன் குரலில் இருந்த கடுமை சத்தியனுக்கு தொண்டைக்குள் எச்சில் விழுங்க வைத்தது. சஸ்விஹாவுக்கு அவனது அந்தக் கடுமையான குரல் புதிது.
“என்ன? என்ன வேணும் உனக்கு? நீ பண்ண கூத்து எல்லாம் தெரிஞ்சு கொள்ளாமல் நான் இங்கே வரவில்லை. உனக்குன்னு ஒரு அற்புத தேவதையை தந்து இருக்கான் அந்தக்கடவுள். அதை பொக்கிஷம் போல பாதுகாக்காது போனாலும், போட்டு புழுதியில தள்ளாது இருந்திருக்க கூடாது?” உறுமல், கர்ஜனை, கத்தல் எதுவுமே இல்லை. ஆனாலும் அக்ஷ்ரனின் குரலில் இருந்த வலிமையும், பேசும் தொனியும் எதிராளிக்கு வயிற்றில் பயத்தின் கோடுகளை கீறியது என்றால் நிஜம்.
மற்றவர்கள் இப்படிக்கூட ஒருத்தரை மடக்க முடியுமா? என வியந்து பார்க்க, அவனே தொடர்ந்தான்.
112
“ஏன்டா உனக்கு என்ன குறை வைச்சாங்க? ஒரு பெண்ணா அதுவும் இளவயது, இந்த வயசுல தனியா வெளிநாட்டுக்கு வந்து, தன்னோட உணர்வுகள், ஆசைகள், கனவுகள், எல்லாத்தையும் தியாகம் செய்து, வேலை பார்த்து சமபாதிக்குற காசுல, தனக்குனு ஒரு பைசா கூட வைச்சுக்காது மொத்தமா வழிச்சு உன்கிட்டே அனுப்பிட்டு, இரண்டு வருஷத்தை விரலில் எண்ணிக்கிட்டு இருந்தவங்க அவங்க” அவன் பேச ஆரம்பிக்கவும், சஸ்விஹாவுக்கு கண்கள் குளமெடுப்பதை தடை போட முடியாது போக, உதட்டை அழுந்திக்கடித்துக்கொண்டே இருந்தாள். பெற்றவர்கள் பெருமையுடன் பார்த்தார்கள்.
“ஒரு பார்ட்டி, ஒரு பங்ஷன், ஒரு ஆடம்பரம், ஏதாச்சும் ஒண்ணு அவங்களுக்காக செய்து இருப்பாங்களா? நல்ல சாப்பாடு தான் நேரத்துக்கு சாப்பிட்டு இருப்பாங்களா? இல்லை நேரத்துக்கு தூங்கித் தான் இருப்பாங்களா? நிம்மதியாக தூங்கத்தான் விட்டு இருக்கீங்களா? எப்ப பார், என் குடும்பம், என் பிரச்சனை, என சதா உங்களைப்பத்தியே நினைச்சு, நினைச்சு அந்த குளிர் நாட்டுல என்ன பாடு பட்டாங்கன்னு எனக்குதாண்டா தெரியும்!”அவன் சினம் மேலிட சொல்லிவிட்டு, சத்தியன் எழுந்திருக்காத வண்ணம் தனது வலது காலை, அவனது சேரில் கால்களுக்கு இடையில் தூக்கி வைத்திருந்து பேசினான்.
மீறி எழுந்தால் அவனது முழங்காலால் சத்தியனின் முகம் காயம் பார்க்கும்நிலை. பெரியவர்கள் வழிந்த நீரை துடைக்க, துடைக்க அது வந்து கொண்டே இருந்தது. வித்யா அவனை மரியாதை கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
“எந்த ஆம்பிளையையும் ஏறெடுத்தும் பார்த்திருக்க மாட்டாங்க. எதுக்கு அவங்க நிழல் கூட தன் மீது விழாமல் தன்னைபார்த்துக் கொண்டவங்க. உரசிப்பார்க்க துடிச்சவங்களை துணிச்சலாக எதிர்த்து நின்னு தன்னைக் காப்பாத்திக்கிட்டவங்க. அவங்க நினைச்சு இருந்தா அந்த நாட்டில் எப்படியும் வாழ்ந்து இருக்கலாம். இந்த நியூ ஜெனெரேஷனிலே அவங்களைபோல எங்காச்சும் ஒரு பிறப்பு இருக்கான்னு காட்டு பார்க்கலாம்? குடும்பம் தான் முக்கியம், தனது நலம் முக்கியமில்லைன்னு இருக்கும் ஒரு சுயநலமற்ற பெண்ணைக் காட்டுடா! இந்த நூற்றாண்டுல தப்பி பிறந்தவங்கன்னு என் அம்மா வாயால் சர்டிபிகேட் வாங்கியவங்க அவங்க” என்றவன் சஸ்விஹா மீது விழிகளை வீசியவாறு,
“நான் பார்த்து வியந்த பெண்ணுடா! அந்த தேவதையின் அருமை தெரியாத உன்கிட்டே தந்தான் பாரு அந்த கடவுள்! அவனுக்கு கண் இல்லை. அவனுக்குத்தான் இல்லைன்னா உனக்கு எங்கேடா போச்சு? உன் விருப்பத்துக்கு ஆட்டுவிக்குற அடிமை போல நடத்துறே. இருக்குற குப்பை Appsல் குழப்பி, என்னையும் இணைத்து, உன்னை” என அவன் ஓங்கி ஒரு அறை கொடுக்க, சத்தியனுக்கு உலக சத்தங்கள் நின்று போன உணர்வு.
பெரியவர்களுக்கு அக்ஷ்ரனின் பேச்சு ஒரு பக்கம் சாட்டையடி. மறுபக்கம் தம் பெண்ணை நினைத்து பெருமையால் பூரிப்பு. வித்யாவோ, சஸ்விஹா காதில்,
“தி க்ரேட் அக்ஷ்ரன்!” தான் எனவும், சஸ்விஹாவுக்கும் அவன் தன்னை எந்தளவுக்கு கணித்து வைத்து இருக்கிறான் என வியப்பு ஒரு புறம், தன் மேல் எவ்வவளவு மரியாதை வைத்திருக்கிறான் என சந்தோஷம் கொப்பளிக்க அவனை வியந்து விழிகள் கலங்கப் பார்த்தாள்.
“என்ன நீ அவங்களுக்கு வேலையே கிடைக்க கூடாதுன்னு சதி பண்ணே. ஆனா வேலை கிடைச்சுது. அப்புறம் அவங்களுக்கு வாழ்க்கையே கிடைக்க கூடாதுன்னு, வர்ற அலையன்ஸை எல்லாம் இந்த போட்டோசை காட்டுறது. மறுத்தா அடிச்சு உதைக்கிறது. ஏண்டா ஓவரா சினிமா எபெக்டு ஆல் சைடும் அள்ளி வீசிக்கிட்டு இருக்கே!” கேட்டு மேலும் ஒரு அறை அறையவும், சத்தியன் அடங்காது,
“இதப்பாரு! அவளை எவனும் கல்யாணம் பண்ண வரமாட்டான். என்னைத்தவிர அவளை எவனும் தொட முடியாது! இது தான் இந்தக்குடும்பத்துக்கு நான் கொடுக்குற தண்டனை!” என அவன் கர்ஜிக்கவும், அக்ஷ்ரன் கைகளை பின்னுக்கு கட்டிக்கொண்டு, அப்படி, இப்படி என அவனது ஸ்டைலில் இரண்டு, மூன்று, நடை நடந்தான். அவன் நடப்பதை பார்த்து,
“ஏய் பாரிஸ் ராஜ பரம்பரையாடி?” என வித்யா காதில் கிசுகிசுக்க, சஸ்விஹாவின் அடங்கா மனது அவனை ரசித்தவாறு,
“ம்ம்.. இப்படி நடந்தா சார் சீரியஸாக ஏதோ பேசப்போறாருன்னு அர்த்தம்!” என அவள் அந்த தோரணையை அவசரமாக தனக்குள் நிறைத்துக்கொண்டு சொன்னாள். அக்ஷ்ரன் குரல்,
“வருவானே! ஒருத்தன் தொடுவானே!” என்றது. சத்தியன் துள்ளி எழுந்து,
“எவன்னு நான் பார்த்துடுறேன்” என கொதித்தான்.
“உஸ்ஸ்! ஓவரா கத்தினா ஒரு கிலோ கொழுப்பு குறைஞ்சுடும் உட்காரு!” என அவனை அதட்டிவிட்டு,
“நான் பேசி முடிக்கிற வரை நீ இந்த சேரை விட்டு அசையக்கூடாது! கேட்டுகிட்டு இரு ! என் பேச்சு சுவாரஸ்யமாகவே இருக்கும். கேட்டுட்டு மறக்காம லைக் பண்ணிடு ஓகே” என அவனிடம் தலை சாய்த்து கொஞ்சிப்பேசினான்.
“நிஜம் தாண்டி கேட்கவே ஆசையாக இருக்கு பாரின் தமிழும், தொனியும்” வித்யா பூரிப்போடு சொல்ல, சஸ்விஹா அவனைப்பார்த்தவாறு இருந்தாள். அருகே இருந்த விநாயகமூர்த்தியிடம், வந்தவன் முழங்காலிட்டு அவர் முன் அமரவும், அனைவரும் பதற, அவனோ,
“பீல் பண்ணாதீங்க!” என்றுவிட்டு, தன்னை சங்கடத்துடன் பார்த்த விநாயகமூர்த்தியினைப் பார்த்து,
“சார்! தேவதைகளை பத்திரமாக பார்த்துக்கணும். பார்க்க அழகா பனித்தூவலின் பஞ்சு போல இருக்காங்க என்பதற்காக, அவங்க சிறகுகளை நாம் இழுத்து பிடிச்சு வைச்சுக்கிட்டு, சித்திரவதை செய்யலாமா? செய்யத்தான் மனம் வருமா?”அவன் கனிவுடன் கேட்டதும், அவர் கண்ணீர் துளி அவனது கரங்களில் விழுந்து சிதறியது. அவன்
“ம்ஹூம்” என அழக்கூடாது என தலையாட்டி,
“ப்ரீயாக அவங்க சுவாசக்காற்றை சுவாசிக்க விடணும். அவங்களுக்கு நம்மைப்புடிச்சு போச்சுன்னா, நாம விரட்டினாலும், வெறுத்தாலும், நம்மைவிட்டு விலக மாட்டாங்க. அதனோட அருமை தெரியாதவன்கிட்டே கொடுக்க பார்த்தீங்களே” அவன் அதே கனிவான குரலில் கேட்டு முடிக்கவும்,
அவர் இரு கைகளாலும் அவனது கரங்களைப் பற்றி தவறுதான் என்பது போல பார்க்க, வைதேகி விழி நீரை வழித்தெறிய, சஸ்விஹாவுக்கு நெஞ்சை அடைத்தது. வித்யாவோ, நெகிழிந்து போய் அவன் மண்டியிட்டு பேசும் அழகை பார்த்தாள். அவன் சஸ்விஹாவை பார்த்தவாறே,
“என்கிட்டே கொடுங்களேன். நான் பத்திரமாக பார்த்துப்பேன்” என்றான்.
சஸ்விஹா விலுக்கென்று நிமிர்ந்து அவனைப்பார்த்தாள். அவளது விழிகளில் எதிர்பாராத பேரதிர்ச்சி. பெரியவர்கள் வாயடைத்துப்போக, வித்யாவுக்கு விசில் அடித்தால் என்னவென இருக்க, சத்தியன் மூர்க்கமானான்.
“ஏன்டா என்ன தைரியம் உனக்கு?” எனக் கொதித்தவாறு சேரைத் தூக்கினான் அக்ஷ்ரன் முதுகில் அடிக்க. சஸ்விஹா தன்னிச்சையாகவே,
“ஷரா!” எனக் கத்திக்கொண்டு குறுக்கே பாயவும், அக்ஷ்ரன் சட்டென்று எழுந்து, சஸ்விஹா கரம் பற்றி இழுத்து, தன் பின்னால் நிறுத்திவிட்டு,
“உன்னை” என சொல்லி இரண்டு கொடுத்து உட்கார வைத்தவன்,
“நான் அமைதியாக மனுப்போட்டுக்கிட்டு, பதிலுக்கு காத்திட்டிருக்கேன். உனக்கு பொறுமையாக சேரில் காலாட்டிக்கிட்டு என் பேச்சை கேட்க முடியாம இருக்கா?” என கேட்டு அவனை அதில் தள்ளி உட்கார வைத்தவன் கை விரல் நீட்டி,
“இதப்பாரு முக்கியமான விஷயம் போய்கிட்டு இருக்கு. குறுக்கே, குறுக்கே வந்து எதையாவது தூக்கினே, அப்புறம் சுருக்கு நான் உனக்கு போடவேண்டி வரும். எனக்கு போலீஸு, கேஸு, ஆல் தூசு! புரிஞ்சுதா?” அவன் ஒரு பார்வை பார்த்தவாறு சொல்ல, மற்றவனோ,
“அவ எனக்கு பாதிப்பொண்டாட்டிடா! உனக்கு” அவ என தொடங்க, அக்ஷ்ரன்,
“உனக்கு டயலாக் டெலிவரி பண்றதே டைம் வேஸ்ட்!” என்றவாறு தனது மொபைலை எடுத்து,
“அலோ டிஎஸ்பி சரவணா! இங்கே ஒருத்தன் நான் பார்க்க வந்த வேலையை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு இருக்கான். ஏன்னு வந்து கேளேன்?” என சொல்ல, மறுமுனை “நீ வை நான் வருகிறேன்” என சொன்னதும், அக்ஷ்ரன் மொபைலை அணைக்க, சத்தியன் மிரண்டாலும்,
“என்னடா மிரட்டுறியா?” என எகுறவே செய்யவும், மற்றவர்களுக்கு பயம் வந்து, வந்து போய்க்கொண்டிருந்தது.
“ஓ புரிஞ்சுடுத்தா வெரிகுட்” என்றவாறு சத்தியனின் சட்டையை ஒழுங்கி படுத்தி, முகத்தின் தாடியை தடவிவிட்டு, கன்னத்தில் மெல்ல ஒரு தட்டு தட்டி,
“போலீஸ் வண்டியில ஏறும் போது அழகா இருக்க வேண்டாம்” என கேட்டு, மற்றவன் அடங்கவே மாட்டேன் என்பது போல,
“உன்னோட இமேஜூ, பேரு எல்லாத்தையும் நாறடிச்சுடுவேன். இதோ என்கிட்டே இருக்குற AIயா இருந்தா என்ன? BIயா இருந்தா என்ன? நெட்டிசன்களுக்கு அல்வா சாப்புடுறது போலத்தான். உன்னை வெச்சு செஞ்சு, நாறடிச்சுடுவாங்க” என அவன் தனது மொபைலில் அந்த படங்களை காட்டி, பதிலுக்கு மிரட்டவும், அக்ஷ்ரன் வலது கையை பாக்கெட்டில் வைத்து, இடது கை விரல்களால் நாடியில் பியானோ வாசித்தவாறு,
“ஏம்பா என்னைப்பார்த்து பாரிஸ் லூசுன்னு நினைச்சுட்டியோ?” என அவன் கேட்ட ஸ்டைலும், தொனியும் பார்த்து பெரியவர்கள் உட்பட வித்யாவும் வாய்க்குள்ளேயே சிரித்தார்கள். சஸ்விஹா,
“சீரியஸா பேச சொல்லுங்கப்பா!” என அவள் குரல் சிறு கோபத்துடன் ஒலிக்கவும், அக்ஷ்ரன் திரும்பி அவளைப்பார்த்து மெல்ல புன்னகைத்தவன், கரங்களை பாக்கெட்டுக்குளேயே வைத்து,
“சீரியஸா ஆம்புலன்ஸை கூப்பிட்டுடலாம் மேடம்” என சேவகன் போல மெல்ல குனிந்து சொல்லிவிட்டு, மற்றவனிடம் திரும்பினான்.
“இப்படி பேசி, பேசியே என்னை கொல்றதுக்கு அந்த பிரம்மன் உன்னை படைச்சு இருக்கான். அவனை உதைக்கணும்!” என தன்னை மறந்து எதன் மீதோ இருந்த எரிச்சலுடன் முணுமுணுக்கவும், வித்யாவோ,
“வாய்தானே எரிச்சலாக பேசுதே தவிர, மேடத்தோட கண்களில் வீசும் ஒரு பவர் வேற எதையோ பறைசாற்றுதே” என தோழியின் தோளில் இடிக்க, அவள் பார்வையை மாற்றியவள்,
“என்கிட்டே நீ சாத்து வாங்கப்போறே!” என அவள் மீது எரிந்துவிழுந்தாள்.
***
அக்ஷ்ரன் குரல்,
“நீ நெட்டிசன்களுக்கு அல்வா கொடுக்கப்போறியா? அதாவது உருப்படாத மீடியாவுல நீ பண்ண AI ல இருப்பது அக்ஷ்ரா குரூப் அக்ஷ்ரனா? அவன் கூட இருப்பது ஆயாவான்னு நான் ஸ்டாப்பா பேச?” என அவன் தனது இடது கை சட்டையின் பட்டன்களை இலகுவாக்கி, பின்னுக்கு மடித்தவாறு கேட்டான். அடுத்த கையில் அதே வேலையில் தீவிரமாக,
“கணக்குல புலின்னு ப்ரூவ் பண்றேன்னு என்கிட்டே வேலைக்கு சேர்ந்து, களவாடுறதுல எலின்னு ப்ரூவ் பண்ணிய புண்ணியவானை சென்ட் ஆப் பண்ணி வைச்சா.. தட் நீலகண்டனோடு, திஸ் சத்தியவான் சுத்திகிட்டு, என்னை பழிவாங்குறேன்னு பக்கம், பக்கமாக உனக்கு ஸ்க்ரீன் பிளே சொன்னான்னா.. நீ அப்படியே பிடிச்சுகிட்டு, சஸ்விஹாவை டார்ச்சரா பண்ணிக்கிட்டு இருந்திருக்கே” அவன் ஒவ்வொன்றாக சொல்ல, மற்றவன் தனது குட்டு பட், பட் என வெளிக்கும் என எதிர்பார்க்கவில்லை.
“நீ பண்ணது எது தெரியுமா? இந்த மூன்றாம், நான்காம் தர செயலுக்கு அப்பாற்பட்ட ஒரு செயல். உன்னை நான் உட்கார வைச்சு பேசிகிட்டு இருக்கேன். அப்போ நான் பாரிஸ் லூசு தானே?” என கேட்டு சட்டக்கையை பின்னுக்கு சொருகிய லாவகத்தோடு, சத்தியன் முகத்தில் விளாசிய லாவகமும், பார்த்து சஸ்விஹா காதினையும், கண்களையும் மூடித்திருந்தாள். அடி வாங்கிய சத்தியன், மூளை வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது.
“நீ நீலகண்டனை வளைச்சது போல, கணேஷை வளைச்சுடலாம்ன்னு வலையா வீசினே? அவனுக்கு பிரசன்னாகிட்டே ஆகாது. அவன்கிட்டே இவங்க மாட்டிக்கிட்டதை எதேச்சையாக சொல்லி வைக்க, அதை வைச்சு, நீ நூடில்ஸ நூலிலே கட்டி, ஈபிள் டவரில் ஏறுவியோ ?” என கேட்டு ஒரு அறை.
விநாயகமூர்த்திக்கு அவன் அடிவாங்குவது மனதுக்கு வலித்தாலும் தம் மகளின் வலிக்கு முன், தான் ஏமாந்ததுக்கு முன், இது சொற்பமே. என பேசாது இருந்தார்.
“இந்த லட்சணத்தில கணேஷுகிட்டே போய், என்னோட பர்சனல் விஷயம், என்னோட போட்டோஸ், நான் எப்படி இருப்பேன்? எப்படி நடப்பேன், உருளுவேன், உட்காருவேன்னு படம் கேட்டு இருக்கே? உனக்கு பாடம் தரத்தான் நான் பாதியும் பறந்து வந்தது” என சொல்லி அடுத்த அறை.
“என் கம்பெனி சுவத்துல ஊர்ந்து போற எறும்பு கூட இந்த அக்ஷ்ரனை வெறுக்காதுடா! என்னை வேவு பார்க்க, நீ ! ஆளை செட் பண்ணுவே! அந்த நீலகண்டனுக்கு தான் என் மேல லவ்வுன்னா, உனக்கு என்னடா? நான் பண்ணேன்? அதுவும் சஸ்விஹா கூட இணைச்சு?” என கேட்ட அவன் குரலில் என்றும் கேட்டிராத சீற்றம். முதல் முறையாக சஸ்விஹா அவன் சீற்றம் கண்டு கொஞ்சம் பயந்தாள்.
“என்னை பாரிஸ் வெண்ணெய்ன்னு நினைச்சுட்டே போல. இருந்த இடத்திலிருந்து என் உலக ஆளுறவன் நான். அதுவும் பதின்மூணு வயசிலிருந்து. எனக்கு நீ” என அவனை சாம்பலாக்கி விடும் பார்வையை பார்க்க, மற்றவன் இவ்வாறான உக்கிரத்தை அவனிடம் எதிர்பார்க்கவில்லை என அவன் முகம் சொன்னது. ஏன் சஸ்விஹாவுக்கு கூட இந்த அக்ஷ்ரன் புதிது.
“உன்னோட மேட்டர், அந்த நீலகண்டனோடது எல்லாமே இங்கே கமிஷனர் ஆபிசுக்கு, என்னோட பிரண்டு டிஎஸ்பி சரவணன்கிட்டே பத்திரமா இருக்கு. நான் தும்மினாலும், நீ நெட்டுல போட்டாலும், அவன் உன்னை கட் பண்ணி பெட்டியில போட்டுடுவான்” என எச்சரித்தான்.
பின் கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு யோசித்து, யோசித்து சொல்ல ஆரம்பித்தான். கேட்டுக்கொண்டிருந்த பெரியவர்களுக்கு, கண்கள் கலங்கவும் ஆரம்பித்தது. வித்யா பூரிப்போடு கேட்கவும், சஸ்விஹவால் தாங்கவே முடியாது போனது. அவன் பேசியதோ,
“இந்த AI ல பண்ணது தான் பண்ணே. வேற லெவலுக்கு பண்ணி இருக்க கூடாது? நானும், அவங்களும் அப்படியே மாலையை மாத்திக்கிறது மாதிரி.. அவங்க குனிஞ்சு வெட்கப்பட்டு இருக்கவே, நான் தாலி கட்டுறது.. அப்புறம் அவங்க நெற்றியில் கிஸ் பண்றது.. அப்புறம் அவங்க மேடிட்ட வயிற்றில் நான் காது வைச்சு கேட்பது..அப்புறம் என் பேபியை கையில் வைச்சுக்கிட்டு.. ஆசையாக பார்த்துகிட்டு.. அப்புறம் அது வளர்ந்து ரெண்டு வயசு ஆகுறது.. அவங்க வயிறு மறுபடியும் மேடிட.. நான் அவங்களை கடலை போட.. இரண்டு குட்டிங்களும் என் தோளில் ஆட.. அவங்க நானும் ஆடுவேன்னு என் தோளில் தொங்க.. நான் அவங்களை கொஞ்ச..” என சொல்லிக்கொண்டு போகவும், சத்தியன் மனது எதிரே இருப்பவனுக்கு சமாதி கட்ட நாள் பார்க்க ஆரம்பித்தது. சஸ்விஹாவுக்கு இதுக்கு மேல் தாங்க முடியாது எனத் தோன்றவும் வெடித்தே போய்,
“போதும்!!!” என்றாள் காதுகளை பொத்திக்கொண்டு. அக்ஷ்ரன் மெல்ல புன்னகையுடன் அவளைப்பார்த்துவிட்டு,
“பாரு! வெட்கம் வந்த அவங்க முகத்தின் சிவப்பு செவ்வனத்துக்கு பொறாமையைத்தூண்டப் போகுது” என அவன் சொல்ல, வித்யா தோழியைப்பார்த்து புன்னைக்க, பெரியவர்களுக்கும் இதழ் விரியவே வைத்துப்போனது அவன் பேச்சு.
“இப்படி நீ பண்ணி இருந்தேன்னா, உன்னையும் கொஞ்சி இருப்பேன். அந்த ஈபிள் டவரிலேயும் ஏத்தியிருப்பேன். ஆனா நீ ட்ரிபிள் எக்ஸ் ஓனர் வேலையே காட்டி இருக்கே” அவனின் கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டு தட்டவும், மற்றவன் பற்களை கடித்தான்.
“எங்கே இப்போ பேசு! எப்படி? எங்கே அப்லாட் பண்ணப்போறே? உன்னோட உதவாக்கரை பிரண்ட்ஸ் எவனாச்சும் இதை காப்பி பண்ணி போட்டாலும், என் உடன் பிறவா நட்பே நீதான் கம்பி கவுண்டிங் பண்ணுவே” என அக்ஷ்ரன் சோகமாக சொல்ல, மற்றவன் மனதுக்குள் திட்டம் வகுத்தான்.
“அப்புறம் என்ன சொன்னே? அவங்களை கல்யாணம் பண்ண எவனும் வரமாட்டான்னா? இதோ! இந்த பாரிஸ் ஈபிள் டவர் வரும்! அவங்க பேமிலி இனி என்னோட பேமிலி. அதை அவங்க ஒத்துக்கிட்டாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி, இந்த குடும்பத்துக்கு முன்னாடி நான் நிற்பேன். எங்கே முடிஞ்சா என் சட்டையில் இருக்குற தூசியை தட்டிவிட்டு, இவங்களை நெருங்கு பார்ப்போம்” என அவன் பின்னுக்கு கை கட்டிக்கொண்டு, நெஞ்சை நிமிர்த்தி தன் உயரத்துக்கு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கவும், வலித்த கழுத்தை சுளுக்கு எடுத்த சத்தியன் கடுப்பில்,
‘எதிரே இருப்பவனை சாதாரணமாக எடை போடாதே’ என மனது எச்சரிக்கவும், ´முதலில் இந்த இடத்தில் இருந்து கிளம்பி போ! அப்புறம் வைச்சுக்கலாம்’. என அது சொல்லவும், விடுவிடுவென பைக்கை உதைத்துக்கொண்டு பறந்தான். மற்றவர்கள் திகைத்து நிற்கவும், அக்ஷ்ரன் கேசத்தை கோதியவாறு, சரவணனுக்கு,
“இங்கே கேசு நான் லூசாகாமல் பினிஷ்ட்! நீ உன் வேலையைப் பாரு” என அனுப்பினான்.
113
ஏதேதோ எண்ணங்கள் ஏகாந்தமாய் எதிரொலித்த போதும்
ஏக்கத்துடனேயே கரைகிறது என் எதிர்காலம்!
எதிர் புதிரான போதும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி
எல்லை தாண்டாது எட்டி நிற்கிறது உன் காதல் !
ஏனிந்த தண்டனை என நொந்து சபிக்கிறேன் எனைப் படைத்த பிரம்மனை
எதற்குமே அசராது எனை ஆட்டிவைக்குறது உன் தோரணை
அருகருகே இருந்த போதிலும் அரை மனதாகவே உன்னை விலக்க முனைய,
குறை கூறி கொன்று போடுகிறது மனசாட்சி!
கண் முன்னே ஓர் கண்ணியமான காதல் காலடியில் தவம் இருக்க
கண்ணிருந்தும் ஏன் குருடியானாய் என !
“என்னோட மனுக்கான பதில் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?” என அவன் சஸ்விஹாவை பார்த்துவிட்டு, விநாயகமூர்த்தியிடம் வினாவ, அவரும்,
“நீங்க கேட்டதும் எனக்கு வார்த்தை வரல. என் பொண்ணோட விருப்பம் தான், எங்க விருப்பமும். அவ..” என்றுவிட்டு மகளைப்பார்த்து பார்வையாலேயே ´ஓத்துக்கோடா’ என கெஞ்சினார். அவள் சட்டென்று எழுந்து, முகத்தை அழுந்த துடைத்துவிட்டு,
“சாரிப்பா! எனக்கு சம்மதம் இல்லை. அவர் செய்த எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி போயிட்டு வரச்சொல்லுங்க” என அவனைப்பார்த்து கரம் கூப்பி சொல்ல, அவனோ மறுப்பாக தலையாட்டிவிட்டு,
“சஸ்விஹா” என அழைத்தான். அவளோ சட்டென்று அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள்.
“போங்கன்னு சொன்னேன்” என்றாள் எட்டிப்பார்த்த அழுகையை அடக்கியவாறு. வித்யா குழம்பி,
“சஸ்வி! என்னடி பேசிகிட்டு இருக்கே? உனக்கு” என அவள் தொடங்க,
“வித்தி! ப்ளீஸ்! நீ தலையிடாதே!” அவளைப்பார்த்தும் கரம் கூப்பி, கெஞ்சல் பார்வை பார்க்க, அவளோ வேதனையுடன் பார்த்தாள்.
“அப்பா அவரை ஒழுங்கா ஊரு போய் சேர சொல்லுங்க” என்றுவிட்டு உள்ளே போகவும், அவனோ விநாயகமூர்த்தியைப்பர்த்து, அவன் எதற்காக நாடு விட்டு, நாடு வந்தானோ? அதை கொட்டிவிடும் தீவிரத்தில் இருந்தான்.
“சார் எனக்கு உங்க பொண்ணை புரிஞ்சுக்கவே முடியுறதில்லை. முதன், முதலாக என் சட்டையை பிடிச்சு உலுக்கியபோதே அவங்களை எனக்குள்ளே வரைய ஆரம்பிச்சேன்.” நெகிழ்ந்த குரலில் தனது உணர்வுகளை, அந்த இடத்தில் கொட்டிவிட்டு போய்விடும் நோக்கில் பேச ஆரம்பித்தான்.
“ஆனா அந்த ஓவியத்தின் விரலில் இருந்த மோதிரத்தை பார்த்துவிட்டு பாதியிலே என்னோட தூரிகையை உடைச்ச ஆளு நான்.” உள்ளே இருந்த சஸ்விஹாவுக்கு இதயம் ´என்னை அவிழ்த்து விடேன்’ என மன்றாட ஆரம்பித்தது.
“அதுக்கு பின் அவங்க கூட வேலை செய்த ஒவ்வொரு கணமும், அவங்களை மேலும், மேலும் பிடிச்சுக்கிட்டே போச்சு. மரியாதையும், மதிப்பும் கூடிகிட்டே போச்சு. நான் வியந்து, வியந்து, ரசித்த பெண்.” அவன் சொல்லும் போது அதில் தெறித்தோடிய பரவச ஊற்று, சஸ்விஹாவை மூழ்கடிப்பேன் வா! என இழுத்தது.
“எனக்குள் அவங்க மேல காதல் உணர்வுகளோ, எந்த வித சலனமோ இல்லை. அவங்க என்கூட பாரிஸ் வந்து, இங்கே வீடு கட்டும் புரொஜெக்ட் விஷயமா பேசிய போது, உங்க பேமிலியைப்பத்தி விசாரிக்கப்போய்த்தான் அவங்க மோதிர விரலுக்கு சொந்தம் கொண்டாடும் இந்த சத்தியன் பத்தி தெரிய வந்திச்சு.”அவன் இடை நிறுத்தி விட்டு, மதில் மீது சுவாரசியமாக கொய்யாவை கொறிக்கும் அணிலைப் பார்த்து மெல்ல இதழ் விரித்தவன், தொடர்ந்தான்.
“சத்தியனைப் பற்றி தெரிந்து கொண்டதிலிருந்து, அவங்க இந்தியா திரும்பி, இதோ இப்போ உங்க முன்னாடி நான் நிற்கும் வரை என்னிடம் என் மனசு இல்லை. நான் நானாகவும் இல்லை.”அவன் கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு ஜன்னலோரம் நின்று கேட்டுக்கொண்டிருந்த சஸ்விஹாவின் முதுகினைப் பார்த்து சொன்னான்.
“என்னால் நார்மலாக இருக்கவே முடியாது போனது. எதுக்கு கடவுள் இப்படியொரு பொருத்தமில்லாத இடத்தில் இந்தத் தேவதையைக் கொடுத்தானோ? என நான் கடவுளை திட்டாத நாள் இல்லை என்றானது.” அதை அவன் சொல்லும் பொழுது மெல்ல தலையாட்டி புன்னகைத்தவாறே சொல்லிக்கொள்ளவும், பெரியவர்கள் கண்கள் கலங்க அன்புடன் பார்க்க, வித்யாவோ, தன் தோழி அவனை கொண்டாடுவாங்க என சொன்னது, எவ்வளவு உண்மை என உணர்ந்தாள்.
“உங்க பொண்ணு பக்கா டீசண்ட். எந்தவித உணர்ச்சியையும் அவங்க முகத்துல படிக்க மாட்டீங்க. ஏர்போட்டில் கூட சொன்னேன். உங்க மேரேஜுக்கு என்னை இன்வைட் பண்ணுங்கன்னு. ஆனா அவங்க என்கிட்டே ஒரு டயலாக் சொன்னாங்க. அதைகேட்டுக்கிட்டு என்னால் அங்கே நிம்மதியா இருக்க முடியவேயில்லை. இங்கே எல்லாமே நான் பயந்தது போலவே போய்க்கொண்டிருக்கவும், பொறுக்கமுடியாது தான் கிளம்பி வந்தேன்.”
“இத்தனைக்கும் என் அம்மாவின் பேச்சை என் வாழ்க்கையில் முதல் தடவையாக மீறி இருக்கேன். அதுவும் உங்க பொண்ணுக்காக.”அவன் பார்வையில் சஸ்விஹாவின் முகம் காட்டமாட்டாளா? எனும் தவிப்பு பிரதிபலிக்க,
வித்யா அவளது கரத்தைபிடித்து இழுத்து, கண்கள் வாடி! என கெஞ்ச, அவளோ மறுகையால் அதை விலத்திவிட்டு, ஜன்னலோரமாகவே சுவற்றில் தலை சாய்த்து கண்களை மூடினாள். வித்யா அவளின் செயலைப்பார்த்து கொலை செய்துவிடுவாள் போலிருந்தது. அக்ஷ்ரனே ஏமாற்றத்தை மறைத்தவண்ணம் தொடர்ந்தான்.
“அவங்க மேல காதல் உணர்வுகள் இல்லை. என நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு, எவ்ளோ காதல் இருந்திருந்தா, என் அம்மாவின் பேச்சையும் மீறி வந்திருப்பேன்” என அவன் சொல்லிவிட்டு மவுனம் காத்தான்.
உள்ளே இருந்து சஸ்விஹா, ‘ஓடிப்போய் அவனைக் கட்டிக்கொள்ளுடி’ என சொன்ன மனதை கொன்று புதைப்பதில் தீவிரமாக இருந்தாள். அக்ஷ்ரன் பேசும் பேச்சுக்களை கேட்டுக்கொண்டு அசையாது, உணர்ச்சிகளை முகத்தில் காட்டாது, இருக்கும் தோழியைப்பர்த்து, ஒரு புறம் வியந்த வித்யாவுக்கு, மறு புறம் பயமும் வந்து சேர்ந்தது.
‘தன்னைத்தானே எதுக்கு வருத்துகிறாள்? ஏன் அடக்குகிறாள்? இவளின் நிலை எங்கே போய் விடப்போகுதோ?’ என மனதுக்குள் கவலைப்பட ஆரம்பித்தாள்.
“இந்தியா வரவே அம்மாவுக்கு பயம். எனக்கோ சில நினைவுகளை கிளறும் நாடு. நான், நானாக இருக்கமாட்டேன். உங்க பொண்ணை நினைச்சுக்கிட்டு அங்கேயும் நான், நானாக இல்லை. போக விடாது தடுத்த அம்மாவுக்கு, வாக்கு கொடுத்துவிட்டு வந்தேன். வந்து மூன்றாம் நாளே திரும்பி விடுகிறேன் என”. அவனது விழிகள் அதே ஜன்னலோரம் அங்கலாய்ப்புடன் அலைந்தது
வித்யாவோ, “சஸ்வி என்னாலேயே தாங்க முடியல.. நீ எப்புடிடி கேட்டுகிட்டு ஜடமா நிக்குறே?” என அவளை உலுக்கினாள். அவள் அசைந்தால் அல்லவா? அக்ஷ்ரனின் குரல் தொடர்ந்தது.
“இன்னும் சில நேரத்தில் பிளைட். நான் திரும்பணும்.” அவன் சொன்னதும் எல்லோருக்கும் அதிர்ச்சி. சஸ்விஹாவுக்கு ஒரு பக்கம் நிம்மதியான மனதினை அடுத்த பக்கம் வெறுமையான மனது திட்டிதீர்த்தது.
“என் அம்மாவுக்கு உங்க பொண்ணை ரொம்ப புடிக்கும். அவங்க சொன்னது இதுதான். இதே போல ஒரு பிடிவாத காதலால் தான் பெத்த பொண்ணை இழந்தேன். அதே காதலால் உன்னையும் இழக்குற நிலையை கொடுத்திடாதே! அப்புறம் என்னை காணாமாட்டாய். சஸ்விஹாவுக்கு உன் மீது ஒரு துளி கூட விருப்பம் இல்லை, சம்மதம் இல்லை என தெரிந்த அடுத்த நொடி, நீ விமானம் ஏறி இருக்க வேண்டும். என சத்தியம் வாங்கிவிட்டுத்தான் என்னை அனுப்பி வைச்சாங்க” அவன் நிறுத்த, பெரியவர்கள் மகள் இப்பொழுதாவது வெளியே வருவாளா? என தவிப்புடன் பார்க்கவும், வித்யா,
“சஸ்வி! வேணாம்டி! அக்ஷ்ரன் இவ்ளோ தூரம் இறங்கி” என தொடங்க, சஸ்விஹா அளவுக்கு மீறி எழுந்த கோபத்துடன், எட்டி அவள் வாயைப்பொத்தி,
“அவர் சொல்றதெல்லாம் சொல்லிட்டு கிளம்பும் வரை மூடிக்கிட்டு இரு!” என பற்களுக்கு இடையில் சொல்லவும், மற்றவள் திகைத்துப்போய் பார்த்தாள்.
“உங்க பொண்ணு சம்மதம் இல்லைன்னு சொன்ன பின்பும் நான் போர்ஸ் பண்ணற ஆள் கிடையாது. இதுக்கு அப்புறமும் நான் இங்கே நிற்க போவதும் கிடையாது. அவங்க மனசுல என்ன இருக்கோ அதையே பாலோ பண்ணிக்கட்டும். என்ன உதவி என்றாலும் என்கிட்டே தயக்கமே வேண்டாம். நான் விரும்பிய முதல் பெண் என் வருங்கால மனைவிக்கு என்று இல்லாமல் போனாலும், எனக்கு பிடித்த ஒரு தோழிக்கு ஒரு பிரணடாக இருந்து செய்வேன். இது என்னோட விசிட்டிங் கார்ட். எப்பவேணா கால் பண்ணலாம். இனிமேல் உங்க குடும்பத்துக்கு அந்த சத்தியனால் பிராப்ளம் வராது. அதுக்கு நான் வழி பண்ணிட்டுத்தான் கிளம்புறேன். என் பிரண்டு டிஎஸ்பி சரவணன் இருக்கான். அதனால சத்தியனை நினைச்சு குறிப்பாக சஸ்விஹாவை டிப்ரெஷன் ஆகவேண்டாம் என்று சொல்லுங்க.” என அவன் தனது நீண்ட பேச்சை முடித்துவிட்டு,
“ரொம்ப நன்றி என்னை பேசவிட்டு கேட்டுக்கொண்டு இருந்ததுக்கும் உங்க பொறுமைக்கும்” என கரம் கூப்பினான். வைதேகி என்ன சாபமோ புழுங்க ஆராம்பிக்கவும், விநாயகமூர்த்தி, .
“தம்பி நாங்க தான் ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கோம். எங்களை மன்னிச்சுடுங்க. இவ்ளோ தூரம் நீங்க சொன்னதுக்கு அப்புறம், எங்க பொண்ணு எந்தவொரு பச்சைக்கொடியும் காட்டாது உள்ளேயே இருப்பதை வைச்சு, அவளோட முடிவு என்னென்னு தெரிஞ்சுடுத்து.”
“….”
“அவளுக்கு விருப்பமில்லாத எதையும் இனி நான் செய்வதாக இல்லை. ஒன்றோடு பட்டுட்டேன். உங்களுக்கு பெரிய மனது. நீங்க நல்லா இருக்கணும். அம்மா பார்க்குற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தைங்க கூட சந்தோஷமா இருங்க. முடிஞ்சா உங்க பொண்டாட்டி கூட இங்கே வந்துட்டு போங்க. நான் உங்களுக்கு விருந்தே வைக்கணும்” என அவரும் கரம் கூப்பினார்.
வித்யா மனது முழுக்க தோழி மீது கடுப்பில் வெந்து கொதித்துக்கொள்ள ஆரம்பித்தது. சஸ்விஹாவோ அவனது பேச்சினை கேட்டவாறு மரம் கூட மரத்தாலும், மழை நீரால் கொஞ்சம் இளக பார்க்கும். அவளோ அதைக்கூட என்னிடம் எதிர்பார்க்காதே! எனும் தோரணையில் நின்றிருந்தாள்.
அவளது கோலம் கண்டவனோ ஒரு எட்டு வைத்து வந்தவன்,
“விஹா!” என இதுவரை காலமும் கொண்டு வராத குரலில், நெஞ்சுக்கூட்டின் அறைகளை தட்டி திறக்கும் ஈர்ப்போடு, அவளை விளிக்கவும், அவளுக்கு தனது கனவில் அழைப்பவனின் குரல் போல இருக்கே என திடுக்கிடலுடன் சடாரென்று திரும்பி அவனைப்பார்த்தாள்.
அவனின் பார்வை அவளது முகத்தினை ஆராய்ந்தது. இரு விழிகளும் கலங்கி சிவப்பாகுறதுக்கு இனி இடம் இல்லை என பறைசாற்றியது. அவனது முகம் ஏக்கத்துடன் இவளையே பார்த்துக்கொண்டிருந்தது. அவளோ படாரென தலையை திருப்பி பின் முதுகு காட்டிக்கொண்டு நின்றாள்.
அவளது உடல் ஆடுவதை வைத்தே அவன் கண்டு கொண்டான் அவள் தன்னை அடக்க முயற்சித்திக்கொண்டு இருக்கிறாள் என. ஒரு மூச்சு இழுத்து விட்டவன்,
“எனக்கு உங்களை புரிஞ்சுக்கவே முடியலைங்க! பல நேரம் உங்க விழிகளும், முகமும் பேசும் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என எனக்கு புரிவதேயில்லை. நீங்க உணர்வுகளை அடக்குவதில் கோல்டு மெடலிஸ்ட்டாக இருந்துட்டுப்போங்க. ஆனா நான் உணர்வுகளை உங்களிடம் காட்டுவதில் கோல்டினையும் மிஞ்சும் மெடலிஸ்ட்டாக இருக்கவே விரும்புகிறேன்” என அவன் சொல்ல, அவளோ,
“உங்களை போகச்சொல்லி பல மணிநேரமாச்சு” என்றாள் திரும்பாமலே வரவழைத்த எரிச்சல் குரலில். அவனோ ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு,
“போகத்தான் போறேன். அதுக்கு முன்னாடி, இப்படி இந்த க்ரேட் அக்ஷ்ரன், ஒரு பெண் முன்னாடி, கெஞ்சி மண்டியிட்டுக்கொண்டு, காதல் பிச்சை கேட்பான்னு கனவிலும் நினைச்சு பார்க்கவில்லை. எனக்கு என்னை நினைச்சே ஆச்சர்யமாக இருக்கு.” அவன் சிரித்தவாறே சொல்ல, அவள் உதட்டைக்கடித்து முகம் இறுக நிற்க, வித்யாவுக்கு கோபம், கோபமாக வந்து கொண்டிருந்தது. பெரியவர்கள் தம் மகளை புரிந்து கொள்ள முடியாது கலங்கினார்கள். அக்ஷ்ரனோ இளகிய குரலில் தொடர்ந்தான்.
“அதே நேரம் விரும்பாத இடத்துலேயா நீ ஓவியம் வரைய ஆசைப்படுறேன்னு? என் மனசாட்சி நொந்து கொள்ளுது. இருக்கட்டும் உங்களுக்குள்ளே கனவு கண்டுக்கிட்டு இருப்பீங்க, வரப்போறவன் இப்படித்தான் இருக்கணும்ன்னு. அதுக்கு நான் பொருந்தாது போனேன் போல. அது தான் உங்க மறுப்புக்கு காரணம் என புரியுது. உங்க கனவுக்கும், கற்பனைகளுக்கு உயிர் கொடுப்பவன் விரைவில் கிடைக்க என் வாழ்த்துக்களும், வேண்டுதல்களும்,” அவனது குரல் இறுதியில் வலியினை வெளிப்படுத்தவும்,
இவளுக்கு உணர்வுகள் இனியும் கட்டி வைக்க முடியாது என உரைக்கவும், மேலும் இவன் பேச்சை கேட்டுகிட்டு இருந்தால் தன்னிலை இழந்து அவனுக்கு சம்மதம் சொல்லிவிடும் அபாயம் வந்துவிடும் என பதட்டமானவள்.
“போதும்! ரொம்ப நன்றி உங்க அக்கறைக்கும், கரிசனத்துக்கும். கிளம்பி போய்கிட்டே இருங்க. மரியாதை வைச்சுக்குறதால தான் இவ்ளோ பேச அனுமதித்தேன். இனி எந்தக்காலத்திலும் என் நேர்ல வந்துடாதீங்க புண்ணியமாகப்போகும்” என அவள் திரும்பாது சொல்லிவிட்டு, ஜன்னலை மூடப்போக அவன்,
“வாவ்! என்ன ஒரு சாட்டையடி என் முகத்துல? மூணு ஜென்மம் எடுத்தாலும் எனக்கு மறக்காது போலிருக்கே” என அவன் வேதனையைக்காட்டாது கிண்டலாக சொன்னவன்,
“இதையும் சொல்லிட்டு போயிடுறேன் வித் யுவர் பர்மிஷன்” என நின்றான். அவளோ,
“அய்யோ” என கத்தியவாறு, பின் தலையால் ஜன்னல் கம்பிகளில் இடிக்கவும், அவனோ முகம் மாறியவன்,
“சஸ்விஹா!” என அதட்டினான். முதல் முறையாக அவனது அதட்டலில் அவள் உடைந்து தான் போனாள். அவன் முகம் இறுக,
“காதலிக்கவே கூடாது! என சத்தியம் கேட்ட தாய்க்கு எந்தக்காலத்திலும் அந்த தவறை செய்யேன் என சத்தியம் செய்து கொடுத்தவனை, மீறத்தூண்டிய முதல் பெண் அவார்டு தரேன் வாங்கிக்கோங்க! தாயின் சொல்லை மீறியதுக்கு நான் காலம் பூரா தண்டனை அனுபவிக்கப்போறேன். போறேன்” என்று விட்டு விநாயகமூர்த்தியைப் பார்த்து,
“இவ்ளோ தூரம் என்னை பேச வைச்ச உங்க பொண்ணுக்கு பாராட்டு விழாவே நடத்தணும் சார்” என சொல்லிவிட்டு எட்டு வைத்து வண்டியை எடுத்துக்கொண்டு சென்றும் விட்டான்.
114
நினைக்காமல் இருக்க நினைவுகளுக்கு நிலவறை கட்டி விட்டாலும்,
உயிர்வரை உலுக்கியே உன் உறவை நாடுகிறது,
நாக்கை பிடுங்கி நாலு வார்த்தைகள் கேட்ட மானம் கெட்ட மனம்!
பார்க்காமல் இருந்து விடவோ, பார்த்தும் பாராமல் கடந்து விடவோ,
நினைக்காமல் நினைவுகளை எரித்து விடவோ,
துளியும் துணிவில்லாது துவண்டு சுருண்டு போகிறது அதே மனம்!
சுழட்டி வீசிய உன் மீதான காதல்
சாளரத்தில் சோர்ந்து காற்றுடன் சேர்ந்து சபிக்கிறது!
வண்டியின் சத்தம் காதுகளினை விட்டு மறையும் வரை உதட்டைக்கடித்து தன்னை கட்டுப்படுத்தியவள், பின் ஜன்னல் கம்பிகளில் நெற்றியினை அடித்து அழத்தொடங்கிவிட்டாள். மற்ற மூவரும் கோபம், குழப்பம், வேதனையுடன், அவள் செய்து கொண்டிருந்த செயலைபார்த்து, பதறி பிடித்து நிறுத்தினார்கள்.
“அழுறியா நீ? இது போதாதேடி! ஒப்பாரி வைச்சுல்லே அழணும்! அழு! நீ மனுசிதானான்னு கேட்டு அழு! வீடு தேடி வந்த சொர்க்கத்தை விரட்டிவிட்ட பாவிதான்னு அழு!” என வித்யா வெடித்து அவளை உலுக்கவும், பெற்றவர்களுக்கு மகளின் கண்ணீர் எதையோ புரிய வைக்க முயன்றது. வித்யா விடவில்லை.
“உன் மனசை தொட்டு சொல்லு! உனக்குள்ளே அக்ஷ்ரன் இல்லைன்னு” அவள் உலுக்க, மற்றவள் வாய் திறக்காது இல்லை என தலையை மறுப்பாக அசைத்தாள்.
“கொன்னுடுவேன்! பொய்! பொய்யாகவே பேசிகிட்டு” அவளை அடிக்க கை ஓங்கிவிட்டு, பெரியவர்களிடம் திரும்பி,
“அங்கிள் இவ மனசு பூரா அவர் தான். ஆனா ஒத்துக்கமாட்டேங்குறா. ஏன்னு கேளுங்க! இவ்வளவு தூரம் அவர் வந்ததே இவளுக்காகத்தான்னு தெரிஞ்சும் அவரை நாய் போல போ! போன்னு விரட்டி விட்டுட்டா! அவரை எது கொண்டு வந்து சேர்த்தது? இவ மேல உள்ள காதல் தான். அதுல ஒரு துளி கூட இவளுக்கு இருக்கான்னு கேளுங்க! துளி இல்லை அங்கிள்! ஒரு சமுத்திரம் தோற்றுவிடும் அளவுக்கு அவர் மேல காதல் வைச்சு இருக்கா! கல்லுளி மங்கை” என வித்யா தோழியின் முதுகில் இரண்டு அடி அடித்து குமுறினாள்.
மடங்கி அமர்ந்து இருந்து சுவற்றில் சாய்ந்திருந்த மகளின் தலையை விநாயகமூர்த்தி வருடியவாறு,
“ஏம்மா உண்மையை சொல்லுடா! அவர் மேல உனக்கு துளியும் விருப்பமில்லை? அந்த பிள்ளையைப்பார்த்தா யாருக்கும் மறுப்பு சொல்ல மனசு வருமா? சரி உனக்கு வந்திருக்கு. அதுக்கு என்ன காரணம்? அவர் குணம் சரியில்லையா? இல்லை அவரே சரியில்லையா? இல்லை?” என தந்தை தொடர, அவளோ,
“அப்பா!” என கத்தியவாறு அவரது வாயில் தனது கரத்தை வைத்து பொத்தினாள். மறுப்பாக தலையாட்டி, குரல் உடைய,
“எப்படிப்பா அவரை சரியில்லைன்னு சொல்ல மனசு வருது?” மகள் எதிர்கேள்வி கேட்க,
“அப்போ எதக்கு சம்மதம் இல்லைன்னு முகத்தில அடிச்சது போல சொன்னே?” தந்தை கேட்கவும், அவள் அமைதியாக இருந்தாள். வித்யாவுக்கு கோபம் பொத்திக்கொண்டு வந்தது.
“சஸ்வி அமைதியாக இருக்குறது உன் நேச்சுரலாக இருக்கலாம். ஆனா இந்த அமைதி எங்களை கொல்றதை விட, அக்ஷ்ரனை கொன்னுட்டு இருக்கு. நீ வியந்து, உனக்குள் பதுக்கி வைச்ச உன் அக்ஷ்ரன் தான் உன்னை விரும்பி வந்து, கல்யாணம் பண்ண கெஞ்சியது. இதை மறுத்த உனக்கு ஒன்று பைத்தியம். இல்லைன்னா பலமான வேற காரணம் இருக்கணும். சொல்லு! என்னென்னு சொல்லுடி!” என உலுக்கினாள்.
“என்னத்தை சொல்ல சொல்றே? அவர் பேசப் பேச துடிக்கிற நெஞ்சை அடக்கிட்டு மரம் போல நின்னேன். இந்த உடம்பில எத்தனை நாடி நரம்புகள்? அது பூராவும் நிறைஞ்சு இருப்பது அக்ஷ்ரன் தான். அப்படி இருந்தும் சம்மதம் இல்லைன்னு சொன்னேன் ஏன்? ஏண்டி?”சஸ்விஹா வெடிக்க ஆரம்பித்தாள்.
“….”
“ஏற்கனவே ஒரு பிள்ளையை இழந்து தவிக்குற அகல்யாம்மாவுக்கு இன்னொரு பிள்ளையையும் இல்லாமல் பண்ணச்சொல்றியா? சம்மதம்ன்னு சொல்லி அவரை இழக்கசொல்றியா ? சத்தியன் இரண்டு பேரையும் வைச்சு செஞ்ச கேவலமான விஷயத்தை உண்மையாக்க சொல்றியா?”அவள் சராமாரியாக கேட்டாள்.
“…”
“இல்லை அக்ஷ்ரன் கையால் நான் தாலி கட்டிக்குறேன்னு வை! என் கழுத்துல எவன் கட்டுவான்? நான் வெட்டுவேன்னு உறுமிக்கிட்டு இருக்குற சத்தியன் சும்மா இருப்பானா?”
“…”
“அக்ஷ்ரன் காதலுக்கு சம்மதம் சொல்லி, அவரை இழப்பதை விட, நான் சம்மதம் சொல்லாமலேயே அவரை, அவர் அம்மாவிடம் அனுப்பி வைக்கிறது தான் எனக்கு பெஸ்ட்டுன்னு தோணிச்சு. அதான் அவர் பேசப் பேச என்னோட உணர்ச்சிகள், ஆசைகள், எல்லாத்தையும் கொன்னுக்கிட்டு மரம் போல நின்னதும், போன்னு விரட்டியதும்” அவள் விளக்கம்கொடுக்க, மற்றவர்கள் சிறிது மவுனம் காத்தனர். பின் தந்தை,
“அம்மாடி நீ அந்த சத்தியனுக்கு பயந்து கொண்டு வாழாது இருக்க முடியாது. அதே நேரம் அக்ஷ்ரன் பவர் தெரியாம அவன் ஆடுறான். இவ்வளவு தூரம் வந்து இருப்பவருக்கு, அவன் ஒரு எறும்பு. அதை நசுக்க எவ்வளவு நேரமாகும்? இதுதான் காரணம்ன்னு சொல்லி இருந்தா, அவர் உன்னை கிண்டல் பண்ணி இருக்கலாம், ஒரு வழி சொல்லியிருக்கலாம்” என சொல்லவும், மகள் மறுப்பாக தலையசைத்து,
“இல்லைப்பா அதுமட்டுமில்லை, அவரை கல்யாணம் பண்ணினா நான் பாரின் போகணும். உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு. நீங்க இங்கே இருக்க, நான் அங்கே அவர் கூட எப்படி சந்தோஷமா வாழ்வேன்?”
“சஸ்வி!” வைதேகி அதட்ட,
“இரும்மா! என்னால அது எந்தக்காலத்திலும் முடியாது. நானும் சந்தோஷம் இல்லாம, அவரோட சந்தோஷத்தையும் பாழாக்கிக்கிட்டு.. அய்யோ.. என்னால முடியாது.”அவள் தலையைப்பிடித்தாள்.
“நீ வேண்டாத கவலைக்குள்ளே..” என தாய் தொடங்க,
“அம்மா என்னைப் பேசவிடு! சதா உங்களைப்பத்தி நினைச்சு, நினைச்சே நான் கோலம் மாறிடுவேன். என்னால பாதிப்பு அவருக்குத்தான். அதுக்கு பார்க்க, நான் உங்க மகளாகவே இங்கேயே இருந்துக்குறேன். முடிவும் பண்ணிட்டேன். எனக்கு அவர் தேவையில்லை” என்றாள் தீர்க்கமாக. வைதேகி கோபமானவர்.
“அடிச்சேனா! அப்போ ஊரு உலகத்துல பொண்ணுங்க அமெரிக்கா, லண்டன், பாரிசுன்னு யாரும் கட்டிக்கிட்டு போகாம இருக்காளுங்களா?” அவர் கேட்கவும், அவளும் கோபமாகவே,
“அம்மா ஊரு, உலகத்து கதை எனக்கெதுக்கு? என்னால் முடியாது. உங்க ரெண்டுபேரையும் தனியா தவிக்க விட்டுட்டு, கல்யாணம் எனும் பேர்ல, அதுவும் பாரினுக்கு, என்னால் அக்ஷ்ரன் கூட மறந்தும் நிம்மதியாக வாழ முடியுமான்னு தோணல” என அவள் முடிவு எடுத்ததை சொல்லவும்,
“உனக்கு பாரின் வேண்டாமா? அக்ஷ்ரன் வேண்டாமா?” என வித்யா கோபத்தோடு கேட்க,
“பாரின் அக்ஷ்ரன் வேண்டாம்” என்றாள் அவளும் முறைத்தவாறு.
“அப்போ எதுக்குடி அவ்ளோ காதல் அவர் மேல? கல்யாணமே பண்ண மாட்டேன்னு மறுப்பு சொன்னவளுக்கு, காதலும் இருக்க கூடாது” என சொல்லவும்,
“வித்தி! விநாயகமூர்த்தியின் மகளாகத்தான் திரும்பி வந்தேன். அக்ஷ்ரனின் காதலியாக இல்லை. இப்பொழுதும் என் அப்பாவுக்கு பெண்ணாகத்தான் பேசுறேன். அக்ஷ்ரனை ஏற்றுக்கொண்டவளாக இல்லை. எனக்கு அவரை பிடிக்கும். அந்த பிரியத்தை நான் கொஞ்சம், கொஞ்சமா கரைச்சு கழுவி ஊத்திக்கிட்டு வரேன்” என்றாள் அவள் விடாக்கொண்டனுக்கு மறு அவதாரமாக.
வித்யா நொந்து போய் பெரியவர்களைப்பார்க்கவும், விநாயகமூர்த்தி ஒரு முடிவோடு,
“அப்படியா? அப்போ நம்ம ரெண்டு பேரும் இல்லாத காலத்துல என்ன செய்யப்போறே? அதுவரை அக்ஷ்ரனை வெயிட்டிங்கில இருக்க சொல்லவா? இல்லை இப்பவே ரெண்டு பேரும் ஏதாச்சும் விஷம் குடிச்சுட்டு செத்து போயிடுறோம். நீ நிம்மதியாக எங்களைப்பத்தி நினைக்காம, கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளிநாடு போயிடலாம்” எனவும், அவள் அதிர்ந்து,
“அப்பா என்ன உளறிக்கிட்டு இருக்கீங்க?”
“நான் உளறலைம்மா! நீ தான் உளறிக்கிட்டு இருக்கே. இந்த ரெண்டு வருஷமும் நீ வெளிநாட்டில் இருக்க, எங்களால் எப்படி இருக்க முடிஞ்சுது?”
“அது வேற சூழ்நிலை”அவள் சோர்ந்து போனவளாக சொல்லவும், அவரும்,
“ஆனா நீ அக்ஷ்ரன் மனைவியாக அங்கே இருந்தா எங்களால் எவ்ளோ சந்தோஷமாக இங்கே இருக்க முடியும் தெரியுமா? நினைச்சுப்பார்த்தாலே பத்து வயசு குறையுறது போல இருக்கு” தந்தை பூரிப்போடு சொல்ல, சஸ்விஹா பதில் சொல்லாது பெருமூச்சு விட்டாள்.
“சரி இதுக்கு பதில் சொல்லு! நீ அக்ஷ்ரனை கல்யாணம் பண்ண மாட்டே. அப்படியே இருந்துக்கோ! ஆனா அவரோட அம்மா, அவருக்கு கொடுத்த கேடு மூணு நாள். அதுக்குள்ளே உன்னிடம் இருந்து பதில் அவருக்கு சாதகமாக வரலைன்னா, நாடு திரும்பிடணும்ன்னு நிபந்தனை.”
‘நல்ல காலம் மூணு நாள் கெடு கொடுத்திருக்காங்க. அதுக்கு மேலே கொடுத்திருந்தா நீ இளகித்தான் போயிருப்பே’ என மனசாட்சி சொல்லவும் அவள் மவுனமாக இருந்தாள்.
“அப்படிப்பட்ட அம்மா, அவருக்கு நாளைக்கே ஒரு பொண்ணு பார்த்து, கட்டுன்னா அவர் கட்டுவாரா? இல்லையா?” தந்தை கேட்டதும் சஸ்விஹாவுக்கு தூக்கிவாரிப்போட்டது. இந்தக்கோணத்தில் அவள் சிந்தித்தாளா? இல்லையே அவள் அதிர்வுடன் பார்க்கவும்,
“என்ன பார்க்குறே? அவர் அம்மாவுக்காக கல்யாணம் பண்ணிப்பார். நானும் வாழ்த்தித்தான் விட்டேன். நாளைக்கே அவர் கட்டிய மனைவியோடு நம்ம வீட்டில் விருந்து சாப்பிட வரலாம். எதிர்கொள்ற தைரியம் உன் மனசுக்கு இருக்கா?” தந்தை அதிரடியாக பேசவும், அவள் திணற ஆரம்பித்தாள்.
“….”
“இருக்குன்னு நினைச்சீன்னா..நான் அவர்கிட்டே சொல்லி உனக்கு அவரைப்போலவே ஒருத்தனை ஊருல பார்க்க சொல்லவா?” என கேட்டதும், அவள் முகம் சுளித்து,
“அப்பா பிளாக்மெயில் எல்லாம் பண்ணாதீங்க! எனக்கு மாப்பிளை பார்க்க, அதுவும் அக்ஷ்ரன்கிட்டே? யப்பா சகிக்க முடியல” என அவள் காதுகளை பொத்தவும், வித்யாவும்,
“எங்களுக்கும் தான். நீ சொல்ற எதையும் சகிக்க முடியலடி! முடிவா என்னதான் சொல்லப்போறே?” என வித்யா அதட்டலாக கேட்கவும்,
“முடிவா முடியாது. பல பிரச்சனைகளை உருவாக்கும் ஒரு பந்தம் எனக்கு வேண்டாம்”அவள் தீர்க்கமாக சொன்னாள்.
“அப்போ சரிடி! அங்கிள் அக்ஷ்ரனோட நம்பர் இருக்குல்லே? நீங்க அவர்கிட்டே சொல்லிடுங்க! அப்பா ராசா! நீ பாரிஸ் போனதும், உன் அம்மா பார்க்குற பொண்ணைக் கட்டிக்கிட்டு, விதம், விதமா போட்டோ எடுத்து எனக்கு அனுப்புப்பா! நான் பார்த்து, பூரிக்கணும். என் பொண்ணு ஒரு லூசு! அவளை நீ கட்டிக்காம போனதே உனக்கு நல்லதுன்னு சொல்லிடுங்க” என சொன்னவள் திரும்பி தோழியைப்பார்த்து,
“அவர் எவளுக்கோ புருஷனாக போகட்டும். நீ அவரை நினைச்சுகிட்டு எவனையும் கட்டிக்காம இப்படியே இந்த ஜன்னலிலிருந்து காற்று வருமா? காதல் வருமான்னு? பாடு!” என சொல்ல சஸ்விஹா அதிர்ந்தாள் தான்.
“என்ன ஷாக் அடிக்குதா? அடிக்கும் தான். எல்லாம் அக்ஷ்ரன் இன்னொரு பெண் கழுத்தில தாலி கட்டும் வரை தான் வீம்பு எல்லாம். மவளே! நீ தான் லூசுன்னா, அவருமா? பிராட்டிக்கலா பேசுடி! அடுத்த முகூர்த்தத்திலியே அவருக்கு பொண்ணு பார்த்து, அவங்க அம்மா கட்டி வைக்கத்தான் போறாங்க. உனக்கும் இன்விடேஷன் அனுப்பத்தான் போறார். வாங்கி பிரேம் போட்டு, பூஜை பண்ணுவியோ? இல்லை புலம்புவியோ? உன் பாடு!” என அவள் எழுந்து கொள்ள சஸ்விஹாவிடம் பதில் இல்லை.
விநாயகமூர்த்தியும் தன பங்குக்கு,
“அவருக்கு கல்யாணம் நடந்த கையோடு, உனக்கு மாப்பிளை பார்த்து, அவரோட தலைமையில கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் என்னோட முதல் வேலை. நான் ஆபரேஷன் தியேட்டருக்குள் போறதுக்கு முன்னாடி எனக்கு சத்தியம் பண்ணிகொடுத்து இருக்கே”. எனவும் அவள் சீற்றத்துடன் எழுந்தே விட்டாள்.
“என்ன? போட்டி போட்டுகொண்டு எனக்கு மூளை சலவை நடக்குதா? போங்க எல்லோரும். எவனையும் எனக்கு கட்டி வைக்க முடியாது. எனக்கு கல்யாணமே வேண்டாம்” என கத்திவிட்டு ஓடிப்போய் தனதறைக்குள் புகுந்து சாத்திக்கொண்டாள். வித்யாவும்,
“அங்கிள் அவளை விடுங்க! நாம கொடுத்த ஷாக்கில சேஞ்சிங் மோட்ல திரும்பி மனது மாறி வரலாம். அவ மேலயும் தப்பில்லை. உங்க மேல எவ்ளோ பாசம் இருக்கோ, அதே போல அக்ஷ்ரன் மீது அளவு கடந்த காதல் வைச்சு இருக்கா. அவ வழியிலேயே போய் அவளை அக்ஷ்ரன் கூட சேர்த்துடலாம். என்ன சண்டாளி லேசுல ஒத்துழைக்கமாட்டா. நாம டயர்டாகிடுவோம். பார்க்கலாம். இல்லைண்னா ஒரு போன் கால் அக்ஷ்ரனை பிளைட் எடுக்க வேணாம்ன்னு சொல்லி, அவர்கிட்டே இவ பேசினதை சொல்லிடலாம். அவர் பார்த்துப்பார்” என சொல்லவும் விநாயகமூர்த்தி யோசித்தவர்,
“எங்களுக்கு சம்மதம் தராதவ, அவரை விமானம் ஏறவிடாது தடுத்து வரவழைச்சு இவ மாட்டேன்னு சொன்னா… பச் அவர் போகட்டும்மா. அவரோட அம்மா கொடுத்த மூணு நாள் டைம் முடிஞ்சு போச்சு. அவர் போனாத்தான் இவளுக்கு உறைக்கும். பார்க்கலாம்”
“இப்படியொரு பெண்ணை ஏண்டா பெத்தோம்ன்னு? பூரிச்சு போறதா? இல்லை நொந்து பொறதான்னு? தெரியல” வைதேகி அழவும்,
“அம்மா பொறுங்க நாம விட்ட அம்பு, நைட்டு முழுக்க வேலை செய்தாலும் ஆச்சர்யம் இல்லை. பார்க்கலாம். நான் கிளம்புறேன். லீவு அரை நாள் தான் போகணும்” என சொல்லிவிட்டு அவள் கிளம்ப,
“பார்த்துப்போம்மா!” என இருவரும் சொல்லவும் அவளும் தலையாட்டிவிட்டுப் போனாள். பெரியவர்கள் இருவரும் மேலே பார்த்து கரம் கூப்பினார்கள்.
115
அதே நேரம் வண்டியில் போய்க்கொண்டிருந்த அக்ஷ்ரன்
“என்ன பாஸுடா நீ? என்ன பெரிய கொம்பனா இருந்தும் ஒரு பெண்ணை புரிஞ்சு கொள்ள முடியாதவனா இருக்கியே. அவ பார்வைக்கும், பேச்சுக்கும் ஈபிள் டவரில் ஏறி நின்னுகிட்டு ஜூம் வைச்சாலும் லிங்கே வராதாம்” சஸ்விஹாவை புரிந்து கொள்ள முடியாது தவித்தவாறே சென்று கொண்டிருந்தான். தாயின் அழைப்பு வரவும் சிந்தனை கலைந்து,
“அலோ திருமதி அகல்யா ஆனந்தகிருஷ்ணா அவர்களே! தாங்கள் ஜெயித்துவிட்டீர்கள். தங்கள் மைந்தன் தலைகுனிந்தே விமானம் ஏறிக்கொள்ளப்போகிறான்” என அவன் அவர் கேட்கும் முன்னமே தொடங்கவும், மறுமுனை ஒரு நொடி மவுனம் காத்தது. அவன் தனது குறும்பினை நிறுத்திவிட்டு,
“அம்மா லைனில் இருக்கீங்களா?” என கனிவுடன் கேட்டான்.
“இருக்கேன்பா” என அவர் குரல் வரவும் அவனுக்கு நிம்மதியானது.
“அம்மா சஸ்விஹா ரொம்பவே வித்தியாசம் தான். நான் என்னமோ நினைச்சு வந்தேன். ஆனா அவ அசையவேயில்லை. என்னை விரட்டுறதிலே குறியா இருந்தா! அவ மனசுல எந்த சஞ்சலமும் இல்லைன்னு புரிஞ்சதும், நான் போர்ஸ் பண்ண கூடாது இல்லையா?” தனயன் தானாகவே சொல்ல ஆரம்பிக்கவும், அவரும் ஒரு பெருமூச்சு விட்டு,
“எனக்கு தெரியும்பா அவ அவ்வளவு எளிதில் உனக்கு பச்சைக்கொடி காட்ட மாட்டான்னு” அனை சொல்லவும்,
“பச்சைக்கொடி காட்டலைன்னாலும் பிச்சை கேட்டவனை மதிச்சு இருக்கலாம். மிதிச்சு அனுப்பாத குறைதான்” அவன் அந்த நிலையிலும் சிரிப்புடன் சொன்னான். அவனது குரலில் அவள் மேலிருந்த காதல் அப்பட்டமாக தெரியவும், அன்னையோ,
“கண்ணா! எல்லாத்தையும் மறந்துட்டு விமானம் ஏறு ! நீ இங்கே வந்ததும், அடுத்த முகூர்த்தத்தில் உனக்கு நான் பார்க்குற பொண்ணோடுதான் கல்யாணம். அதுக்கு தயாராகிக்கோ!” அவர் சொல்லவும், அவன் அதிர்ந்தாலும் அதைக்காட்டிக்கொள்ளாது,
“அலோ! அலோ மிஸஸ் ஆனந்தகிருஷ்ணா! ஒரு பச்சை மண்ணை கொஞ்சம் மூச்சு விட்டு, ஆசுவாசமாக அவகாகசம் தரலாம்” எனவும், அவர் மெல்ல சிரித்து,
“முதல்லே பத்திரமா நீ வந்து சேருப்பா! அம்மாவுக்கு இங்கே அமைதியே இல்லாம மனசு தவிக்குது” என குரல் உடையப்பார்க்கவும், அவனும் அவரை மேலும் பேச விடாது,
“அம்மா ! நேரா பிளைட் பிடிக்கத்தான் போய்கிட்டு இருக்கேன். வண்டிய வினித் வந்து எடுத்துட்டு போயிடுவான். காலையில் நீங்க கண் முழிக்க நான் டான் ன்னு நிற்பேன். போதுமா?”
“போதும்! பிளைட்டுல தூங்கிடு சொல்லிட்டேன்” என அதட்டவும், அவனும் சரி என வைத்தான்.
பிளைட் ஏறியவனுக்கு வரும் பொழுது இருந்த உற்சாகம், எதிர்பார்ப்பு போகும் பொழுது வடிந்து, கரைந்து வெற்றுடம்பு மட்டும் போவது போல உணர்ந்தான்.
‘உஸ்ஸ்ஸ்…காதல் வந்தாலே நம்ம பாடி கூட நமக்கு லோட் போல தெரியுமா?’ தனக்குள் கேட்டவாறு சஸ்விஹாவை முதன் முதலில் பார்த்ததிலிருந்து, இன்று வரை தனது மனக்கண்ணில் காட்சிகளை கொண்டு வந்து, கண்களை மூடி அவளை அணு, அணுவாக ரசித்தவாறு அந்த பயணத்தை கடந்தான்.
‘உன் விரலில் அன்று மட்டும் அந்த மோதிரம் இல்லாது இருந்திருந்தால். இன்று இந்த நிலை எனக்கு வந்திருக்காது. நீயும் இத்தனை மனஉளைச்சல் அனுபவித்திருக்க வேண்டியதில்லை. எது எனக்கு உன்னை காட்டியதோ? அதுகிட்டேயே விட்டுடுறேன், நீ தான் பொறுப்பு! அவ மனசை மாற்றுவதும், என்னிடம் சேர்ப்பதும்’ என மனதோடு பேசியவனுக்கு அன்னை சொன்னது வந்து பிளாஷ் அடிக்க,
“ம்ஹூம்! அலோ மிஸ்டர் ஆனந்தகிருஷ்ணா? மை ஹீரோ! மை டாட்! மை ரோல் மாடல்! ப்ளீஸ் ஹெல்ப் மீ” என அவன் மானசீகமாக தந்தையிடம் வேண்டுகோள் வைத்ததும் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான். உறக்கம் வந்தால் அல்லவா? சஸ்விஹாவே வந்து இம்சித்தாள்.
***
வேண்டாம் என தர்க்கங்கள் நான் செய்தாலும்,
தகர்த்து எறியவே செய்கிறது உன் மீதான காதல்!
மீண்டும் மீண்டும் நான் விரட்டிவிட்டாலும்,
வேண்டும் உன் நினைவுகள் என முரண்டு
பிடிக்கவே செய்கிறது மனம்!
மீண்டும் மீண்டும் நெஞ்சுக்கூட்டின் அறைகளை அறைந்து சாத்தினாலும்,
சாத்த விடாமலேயே சண்டித்தனம் செய்கிறது
எனை சரித்து வீழ்த்திய உன் காதல் !
மீண்டும் மீண்டும் நான் விலங்கிட்டு பூட்டினாலும்,
புன்னகை பூத்தே கொன்று போடுகிறது உன் உருவம்!
உன்னை வெறுத்து ஒதுக்க நினைத்தாலும்,
மீண்டும் மீண்டும் தோற்றுப்போவது நானாக,
வெற்றிகொள்வது நீயாக ,
வீசிக் கொள்வது காதலாகவே இருக்கிறது
நம் காற்று வரும் ஜன்னலில் !
சஸ்விஹாவின் வீடு
இரவு முழுதும் அவளுக்கு தூக்கம் தொலைத்த இரவானது. இருக்காதா? அத்தனை பேர் முன்னிலையில் அக்ஷ்ரனை விரட்டியவளுக்கு பெற்றவர்களும், தோழியும் சேர்ந்து கொடுத்த ஊசியில் அவள் ஆடிப்போய் தான் இருந்தாள்.
அக்ஷ்ரனை கல்யாணம் பண்ணமாட்டேன் என்று அவள் தானே மறுப்பு தெரிவித்தாள். ஆனால் அவன் வேறு யாரையும் கல்யாணம் பண்ணக்கூடாது என இவள் எங்கே சட்டம் போட்டாள்? போடத்தான் முடியுமா? அதுவும் அகல்யாவின் பெண் பார்க்கும் தீவிரம் நன்றாக அறிந்திருந்தும்.
“அய்யோ அகல்யாம்மா கண்டிப்பா ஒருத்தியை கட்டித்தான் வைப்பாங்க. இவரும் டேக் இட் ஈஸி பாலிசிக்கு பாலிஷ் போட்டுக்கிட்டு, ம்ம்… ன்னு தலையாட்டி, கட்டிக்கிட்டா? கடவுளே! என்னால அதை தாங்க முடியுமா? என்னோட அக்ஷ்ரன் இன்னொருத்தியோட புருஷன்? நோ!’ என அலறினாள். மெத்தையை விட்டு இறங்கி அப்படியும், இப்படியும் உலாவினாள்.
“ஒருகாலமும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். அக்ஷ்ரன் பேருக்கு பக்கத்துல, இந்த சஸ்விஹா தான். மிஸஸ் அக்ஷ்ரன் நான் ஒருத்தி தான். அந்த பதவியை வேறு யாருக்கும் தாரை வார்த்துக்கொடுத்துட்டு, நான் காலம் பூரா நோ.. நோ..” என அவள் வாய் விட்டே பேசியவாறு கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு உலாவினாள்.
சத்தம் கேட்டு மெல்ல எட்டிப்பார்த்த வைதேகி, மகளின் பேச்சைக்கேட்டு, ஓசையின்றி திரும்பி போய் கணவரையும் அழைத்து வந்து காட்டினார்.
“பாருங்க உங்க பொண்ணுக்கு இருக்குற அழுத்தம் வேறு யாருக்கும் இல்லை” என கிசுகிசுக்க, விநாயகமூர்த்தி ஒளிந்திருந்து பார்க்கவும், அவள்,
“வேணும்டி! நல்லா வேணும்! வீடு தேடி வந்து யாசகம் கேட்டாரே, விரட்டினாயே, அனுபவி! அவன் இறங்கியதும், அவங்க அம்மா இதோ பொண்ணு! இந்தா பிடி தாலியேன்னு நீட்டினாலும் ஆச்சர்யம் இல்லை. இவனும் மாட்டேன்னு தாய் சொல் தட்டுற தறுதலையாக இல்லாம, சரிம்மான்னு தலையாட்டிகிட்டு, கட்டிக்கிட்டு போயிட்டே இருப்பான். டேய்! அப்படி ஏதாச்சும் அவசரமா பண்ணிடாதேடா” என சொன்னவள் தனது வாயில் ரெண்டு அடி அடித்தாள்.
“எப்படி இருந்தேன்? என்னை புலம்புற நிலைக்கு கொண்டு வந்து, பைத்தியம் பிடிக்க வைச்சுட்டே நீ! உன்னை!” என அவள் அங்கே இல்லாதவனை தலைகாணியால் தூக்கி அடிப்பது போல திட்டிவிட்டு, தொப்பென்று மெத்தையில் அமர்ந்து தலையை பிடித்தாள்.
பார்க்க பாவமாக இருந்தது பெற்றவர்களுக்கு. விநாயகமூர்த்தி அதுக்கு மேல் தன் செல்ல மகளை பார்க்க முடியாது, மனைவியை பார்த்து “வா போலாம்” என அவர் தமது அறைக்குள் திரும்பினார்.
பின்னால் வந்த வைதேகி,
“என்னங்க அந்த புள்ளை பிளைட் எடுத்திருக்குமா?” என கவலையுடன் கேட்க, அவருக்கும் அதே தான் யோசனை. இல்லாது போனால் அடுத்த நொடியே அழைத்து “வாப்பா வந்து உன் ஆளைப்பார்!” என காட்டி இருப்பார். அவனும் அவளை உண்டு இல்லையென பண்ணி இருப்பான். அவரோ ஒரு பெருமூச்சு விட்டு,
“வைதேகி அவ மனசுல அவர் மேல காதல் கொள்ளையாக இருந்தாலும் மறுப்பு சொன்னவள் தான். ஆனால் நாளைக்கு தனது இடத்தில் வேறு ஒருத்தி அவருக்கு வரப்போகிறாள் என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியல பார்த்தியா? அதான் அவ தன்னை மறந்து பேசிகிட்டு இருக்கா! விடியட்டும்! இந்த அப்பன் எப்படி மாறுகிறேன்னு பார்! நிம்மதியா தூங்கு! நம்ம பொண்ணு திருமதி அக்ஷ்ரன் தான். அதில் மாற்றம் அவள் நினைச்சாலும் நான் விடுறதாக இல்லை.” என தீர்க்கமாக சொன்னதும், வைதேகியும் சாமி அறைக்குள் சென்று ஒரு வேண்டுதல் வைத்துவிட்டு வந்து,
“உங்க பொண்ணுக்கு இவ்வளவு அழுத்தம் எங்கே இருந்துதான் வந்திச்சோ? பெரியவள் போல இருந்திருக்கலாம்ன்னு சில நேரம் எனக்கு கவலையாக கூட இருக்கும்”
“அவ என்னோட அம்மா போல அப்படியே வந்திருக்கா. நீ கலங்காதே நல்லா தூங்கிட்டு எழுந்தால் தான், நம்ம பெண்ணோடு நாளைக்கு போர் புரிய முடியும்” என அவர் ஒரு முடிவோடு சொல்லவும், அவரும்,
“பார்த்துங்க அவள் உங்களுக்கு பிறந்தவள்” என கலக்கத்துடன் சொல்லவும், அவரது தோளில் தட்டி,
“நான் இருக்கேன்” என தூங்க வைத்தார்.
116
சஸ்விஹா அதிகாலை நான்கு மணி வரைக்கும் நடந்து, பலது யோசித்து, ஒரு முடிவுக்கும் வந்திருந்தாள். அதன் பின் தனது மொபைலை எடுத்து, அக்ஷ்ரனின் வாட்சப்புக்கு மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தாள்.
“டேய் என் பாரிஸ் புருஷா! இந்த மெசேஜ் பார்த்த அடுத்த செகண்ட் நீ என் முன்னாடி நிற்கணும்! சாரி! பூரி! புண்ணாக்கு! எதுவும் நான் கேட்கப்போறதில்லை. உனக்கு நான் வேணும்ன்னா வா! அதை விட்டு லேண்ட் ஆன கையோடு, எவளையாச்சும் போய் பொண்ணு, கிண்ணு பார்த்தே? மவனே! எனக்கு பாரிஸ் விசா இன்னும் முடியல! நினைவிருக்கட்டும்!” என எழுதி அனுப்பியவள், பின்,
“அச்சோ பாவம்டி! மிரண்டுட போறார்! கொஞ்சமா பதுமையாத்தான் மெசேஜ் போட்டால் என்னவாம்?” மனசாட்சி கேட்கவும்,
“அட சீ! அடங்கு நீ! உன்னால் தான் எல்லாம் !” என அதை அடக்கிவிட்டு,
“அக்ஷ் கண்ணா! ஷரா செல்லம்! ப்ளீஷ்டா என்னோட மெசேஜை பார்ப்பியா? இல்லை என் நம்பரை unknown ல போட்டுடுவியா? எனக்கு தத்தளிச்சுகிட்டே இருக்குடா!” என மொபைலை பார்த்து அவன் கூட பேசுவது போல சொல்லிக்கொண்டு வந்தவள்,
“அய்யோ டெலிவெரி ஆகலியே” என அலறினாள்.
“முண்டம் அவர் பிளைட்டுக்குள்ளே இருக்க எப்படிடி?” என கேட்டது அடக்கி வைத்த மனசாட்சி.
“ஸ்ஸ்ஸ்.. ஸ்ஸப்பா… கைக்கு எட்டுற தூரத்தில இருந்தும், உன்னை கோட்டை விட்டேன் பாரு! எனக்கு வேணும் தான்!” என தனது கன்னத்தில் அடித்தவள், மொபைலில் Flight Tracking Apps தரை இறக்கி, அதில் பாரிஸுக்கு எந்த விமானம் போகிறது? என ஆராய்ந்தவள் அக்ஷ்ரன் செல்லும் விமானத்தின் நேரம் பார்த்து,
“எப்போடா விடியும்ன்னு இருக்கே. அலோ பைலட்! சீக்கிரம் கொண்டு போய் பாரிஸுல லேண்ட் பண்ணுடா! என்னோட அவஸ்தை தெரியாம” என அந்த ஆப்ஸில் ஊர்ந்த விமானத்தைப்பார்த்து சொன்னாள்.
விடியலுக்கு இன்னும் சில நொடிகளே இருக்கவும் கடனே என கட்டிலில் புரண்ட சஸ்விஹா, சூரிய பகவான் முகத்தில் முத்தமிட்டு பார்க்க, அடுத்த நொடியே துள்ளி எழுந்தாள். முதல் வேலையாக மொபைலை தூக்கி பார்த்தாள். அக்ஷ்ரனுக்கு அவள் அனுப்பிய வாட்சப் மெஸேஜ்ஜுக்கள் நாங்கள் இன்னும் பிரசவிக்கவில்லை என ஒற்றை கொடி காட்டியது. பொறுமை குறைய அந்த Apps விமானம் தரையிறங்க இன்னும் சில மணித்தியாலங்கள் இருப்பதாக சொல்லியது.
“டேய் பைலட் ஸ்லோமோஷனுக்கு போறவனே! சீக்கிரமா லேண்டட் பண்ணேண்டா” என கத்திவிட்டு தனது காலைக்கடன்களை முடித்தாள். அதுவும் எப்படி? மொபைலில் இருந்து கண் எடுக்காது.
மனதும், மூளையும் நாங்கள் ஒரு நிலையில் உன்னை இருக்க விடமாட்டோம் என கொக்கரித்தன.
“ஸ்ஸப்பா..என்னால் ஏன் அமைதியாக இருக்க முடியல? டீ சஸ்வி! கூல்! கூலா இரேண்டி!” என தன்னைத்தானே அதட்டினாள். எங்கே முடிந்தால் அல்லவா?
“வேணாம்டா சாமி! வந்துடுறேன் உன் சந்நிதானத்துக்கே வந்து கன்னத்துல போட்டுடுறேன். அதுக்கு அப்புறமாகத்தன்னும் என்னை அமைதியாக்கு பார்ப்போம்” என கடவுளிடம் பேரம் பேசியவாறு, சட்டென்று புடவைக்கு மாறி, பூஜைத்தட்டுடன் கண்ணாடி முன் வந்து நின்று பார்த்தாள்
“ம்ஹூம்…உன் மூஞ்சில ஏகத்துக்கும் டென்ஷன் டான்ஸாடுதுடி! சாந்தமான சஸ்விஹாவா நீ!” எனக்கேட்டு திட்டவும்,
“சிம்ப்ளி சூப்பராகத்தாண்டி இருக்கே” என வித்யா குரல் பின்னால் வந்தது. இவள் திரும்பி,
“வாடி! வா! இல்லாதது, பொல்லாதது எல்லாம் சொல்லி, என்னை பிறையின் வாஷ் பண்ணின குஷி, உன் முகத்துல நல்லாவே களை காட்டுது” என முகம் கொள்ளா புன்னகையுடன் நின்ற தோழியைப் பார்த்து. செல்லமாக முறைத்தாள் இவள். அவளோ,
“உன்னோட அலங்காரம், உன் முகம், நமக்கு க்ரீன் சிக்னல் காட்டுதே” என ராகம் பாட,
“என் தூக்கத்தை கெடுத்துட்டு உனக்கு ராகம் பாட வருதா?” என அடிக்க கை ஓங்கினாள். அதைப்பற்றிய வித்யா, தோழியின் கன்னத்தில் வருடி,
“சஸ்வி பாசிட்டிவ் ரெஸ்பான்சு தானே சொல்லுடி!” என அவள் ஆவலாக கேட்கவும், மற்றவளும்,
“பாசிட்டிவ்வோ? நெகட்டிவ்வோ? எல்லாம் பாரிஸ் கியூட் பாய் வந்ததுக்கு அப்புறம் தான் சொல்லலாம்” என அவள் வித்யாவின் கன்னத்தில் தட்டவும்,
“ஹேய்!” என மற்றவள் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தாள்.
“ஏய் சீ” கன்னத்தில் முத்தமிட்ட தோழியின் முதுகில் செல்லமாக அடித்து, “கோயிலுக்கு போயிட்டு வரலாம் வா!” என அவள் அழைத்துக்கொண்டு வெளியே வர, பெற்றவர்கள் எதிர்கொண்டார்கள். அவளது முகமும், கோலமும் கண்டு ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துவிட்டு,
விநாயகமூர்த்தி மனைவியின் காதில் “நான் எதிர்பார்த்தேன்” என்றவர், மகளிடம்,
“என்னம்மா கோயிலுக்கு கிளம்பிட்டே போல? ஆண்டவா! என்னால் அக்ஷ்ரனை கட்டிக்க முடியாது. ஆனா அவருக்கு என்னைப்போல ஒரு பெண்ணைத்தேடி கொடுத்துடுன்னு! வேண்டுதல் வைக்க போறியா?” என அவர் வேண்டும் என்றே கேட்கவும், அவள் அவர் மகளாச்சே. அவருக்கு மேலாக,
“அப்பா! போதுமே என்னை ஆழம் பார்க்குறது. நான் ஒரு தடவைக்கு, பத்து தடவை யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்” என அவள் ஆரம்பிக்கவும்,
“வெறும் பத்து தடவைதானா? நைட்டு பூரா பல்பு எரிஞ்சுக்கிட்டு இருந்ததை பார்த்தா..” என தாய் கிண்டலாக மகளைப்பார்த்து இழுக்க, அவளோ,
“அமமா! என்னோட முடிவுக்கு நீங்க மட்டுமில்லை, யாரும் மறுக்க கூடாது!” அவள் பீடிகை போடவும், வித்யாவோ,
“முதல் நீ சொல்லு! அப்புறம் மறுக்கிறதா? இல்லை உன்னை வறுக்கிறதான்னு? நாங்க முடிவு பண்ணிக்குறோம்” என்றாள் ஒரு மார்க்கமான தொனியில்.
“வித்தி என்னைப் பேச விடுடி!” என அதட்டிவிட்டு தொடர்ந்தாள்.
“நான் அக்ஷ்ரனைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா ஒரு கண்டிஷன்” என தொடங்கவும்,
“அப்பாடா! கேட்டதும் சட்டுன்னு பாலாபிஷேகம் எங்க தலையில நடக்குறது போல இருக்கு. சொல்லு என்ன கண்டிஷன் போட்டு கழுவி ஊத்தப்போறே?” தாய் முறைக்க, அவளும் மெல்ல புன்னகைத்து விட்டு,
“நான் அக்ஷ்ரனை மறுத்ததால் அவருக்கு வேறு ஒரு பெண் மனைவியாக வர சான்ஸ் இருக்கு. அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாதுன்னு புரிஞ்சுடுத்து. அவருக்கு நான்தான் மனைவி! என்னைத்தவிர வேறு யார் கழுத்திலும் தாலி கட்ட நான் அனுமதிக்க மாட்டேன்”. அவள் தீர்க்கமாக சொல்லவும்
“இது பேச்சு” என வித்யா கைதட்டினாள்.
“இருடி!” என அவளை மீண்டும் அடக்கிவிட்டு, பெற்றவர்களை பார்த்து ”உங்களையும் விட்டுட்டு என்னால் பாரின் போய் வாழ முடியாது”
“அப்போ அவரை இங்கே வர சொல்லப்போறியா?” வைதேகி அவசரமாக கேட்கவும், அவள் மறுப்பாக தலையாட்டி,
“ம்ஹூம்.. அதுக்கு அகல்யாம்மா ஒருகாலமும் சம்மதிக்க மாட்டாங்க”
“அப்போ?” என வித்யா இழுக்க,
“எனக்கும், அக்ஷ்ரனுக்கும் கல்யாணம் நடந்ததும், அவர் பாரின் போகட்டும். நான் இங்கே உங்க கூடவே இருந்துக்கப்போறேன்” என அவள் சொன்னதும் மூவரும் சேர்ந்து,
“இதுதான் அந்த பத்து தடவை பூட்டிய அறைக்குள்ளே பல்பு எரிஞ்ச விஷயமா?” என கோரஸாக கேட்கவும், அவள் காதுகளை பொத்தி,
“அச்சோ! என்னைத்தவிர வேறு யாரும் அவருக்கு மனைவியாக வருவதை தடுக்க இது தான் பெஸ்ட் வழி” என சொல்ல,
“ஏண்டி அப்போ நீ அக்ஷ்ரனை பாரிஸ் லூசுன்னே முடிவு பண்ணிட்டியா?” வித்யா கோபம் கொப்பளிக்க கேட்டாள்.
“ஏய் !” என மற்றவள் அதட்டினாள்.
“பொறுடி வெண்ணெய்! இதுக்கு அவர் ஒத்துக்குவாரா? இல்லை அவர் அம்மா தான் ஒத்துக்குவாங்களா?” வித்யா சூடாகவே கேட்கவும், பெரியவர்களுக்கும் அதே கேள்வி எழாமல் இல்லை. மகளை அவர்கள் முறைத்துப்பார்த்த வண்ணம் நிற்க, அவளும்,
.
“அவர் ஒத்துக்குவார். அப்புறம் அவரே அகல்யாம்மாவை சரி செய்துடுவார்” என்றாள்.
“போட்டேன்னா” வைதேகி அடிக்க கை ஒங்க, தாயின் கரத்தைப் பிடித்து,
“அம்மா இதுல ஒரு பிரச்சனையும் இல்லை. உன் பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடும். அதுவும் அவ விரும்பினவன் கூட. உன்னருகே இருக்கப் போறா, அவ விருப்பப்படியே. அப்புறம் என்ன?” அவள் வினாவவும்
“உஸ்ஸ்ஸ்.. படிச்ச கோல்டு மெடலிஸ்ட் பேசுற பேச்சாடி இது? புடிச்ச புளிய மரத்துல ஏறி நிக்குற ஏதோ ஒண்ணு பேசுறது போல இருக்கு.” வித்யா நொந்து கொண்டாள்.
“இதப்பாரும்மா! நீ பேசுறது உனக்கு நல்லா இருக்கலாம். ஆனா பெத்தவங்க எங்களுக்கு அது சுத்தமா விவரம் கெட்டத்தனமா இருக்கு. நாங்களே ஒத்துக்க மாட்டோம். அக்ஷ்ரன் எப்படி ஒத்துக்குவார்ன்னு நீ நினைக்குறே?” விநாயகமூர்த்தி சிறு கோபம் எட்டிப்பார்க்க கேட்டதும்,
“அவர் அண்டர்ஸ்டான்ட்டிங் பர்சன்” என்றாள் மெல்லிய குரலில்.
“நீ கோயிலுக்குத்தானே போறே? போயிட்டு வா! இந்த விஷயத்தை அக்ஷ்ரன் கிட்டே பேசிடாதே!”
“அப்பா!”
“அவர் ஒத்துக்கலைன்னா என்ன பண்ணுவே? மறுபடியும் ஓடுடா பாரிசுக்கு என்று விரட்டி விடுவியா? இல்லை அவர்கிட்டே சொல்லாம மறைச்சுட்டு, கல்யாணம் பண்ணிய கையோடு ஓடு! நான் உன் கூட வாழ உன்னை கட்டிக்கவில்லை! நீ எவளையும் கட்டிக்க கூடாதுங்குறதுக்காத்தான் உன் கையால் தாலி வாங்கினேன்னு சொல்லப் போறியா? இதுக்கு பெரியவங்க, உன் தோழி, நாங்க உடந்தை இருக்கப் போறோமா? எவராலும் ஏற்றக்கொள்ள முடியாத கண்டிஷனைத்தான் நீ இரவிரவாக எரியுற விளக்குல யோசித்து முடிவு எடுத்தியா?” அவர் சராமரியாக கேட்கவும், அவளுக்கும் என்ன பதில் சொல்ல எனத் தெரியாது மவுனம் காத்தள்.
***
“நான் ஒண்ணு சொல்லட்டா?” தந்தை கேட்கவும் அவள் தலை குனிந்தவாறே,
“ம்” என்றாள்.
“சுயநலமற்ற பெண் என வியந்தேன்னு சொன்னாரே உன் அக்ஷ்ரன். இப்போ நீ எடுத்த முடிவை கேட்டா, உன் குடும்பம், உன் அப்பா, அம்மா, உன் சந்தோஷம், இது தான் உனக்கு முக்கியம் என்றால், எதற்கு என் வாழ்க்கையை பலியாடு ஆக்குறே? பாழாக்க முனைகுறே? உன்கிட்டே இருந்து இப்படி ஒரு சுயநலமான கண்டிஷனை நான் எதிர் பார்க்கவேயில்லை, என சொன்னா, எங்கே போய் வைப்பே உன் முகத்தை?”தந்தை அக்ஷ்ரன் போலவே பேசவும்,
“அப்பா! அவர்..” என இவள் திக்க,
“என்ன இப்படி பேசமாட்டாருன்னு சொல்ல வரியா? இங்கே இருந்த கொஞ்ச நேரத்திலேயே அவர் எத்தனை விதமாக பேசி ஜெயிக்க கூடிய ஆள்ன்னு நான் எடை போட்டதால் சொல்றேன்..”
“…”
“இவ்ளோதானா உன் காதல் என் மேல? இல்லை நீ நிஜமாகவே என்னை காதலிக்குறியான்னு? எனக்கு சந்தேகம் என்று சொன்னா, என்ன பதில் உன்னிடம்?” அவர் கேட்ட உண்மை உறைத்தது. பூஜைத்தட்டை வைத்து விட்டு, அவள் ஜன்னலின் தூணில் அமர்ந்து கொண்டாள். அவளது மனதுக்குள் போராட்டம் ஆரம்பமானது.
“வாடி! முதல்லே கோயிலுக்கு போலாம். இந்தபேச்சை இத்தோடு விட்டுடு! இல்லையா? அங்கிள் இப்பவே அக்ஷ்ரனுக்கு மெசேஜ் போட்டுடலாம். அங்கேயே இருந்து கொள்ளுங்க இங்கே வந்துடாதீங்கன்னு” என அவள் விநாயகமூர்த்திக்கு கண் ஜாடை காட்டிவிட்டு தோழியிடம் சொல்ல, அவளோ முறைத்தவாறு,
“எல்லோரும் சேர்ந்து என் பலவீனத்தில் அடிங்க! எங்கே அடிச்சாலும் வலியில் துடிக்கப்போறது நான் தானே? வரேன்” என அவள் பூஜைத்தட்டை எடுத்துக்கொள்ள, வித்யா கட்டை விரல் தூக்கி காட்டிவிட்டு, ஸ்கூட்டியை உதைத்தாள்.
“பார்த்துப்போங்கம்மா! அந்த தறுதலை வந்தா நீங்க” என விநாயகமூர்த்தி பதட்டமாக ஆரம்பிக்க,
“அப்பா அவன் வந்தா நான் பார்த்துக்கிறேன். நீங்க அவன்கிட்டே ஜாக்கிரதையாகவே இருங்க” என்றுவிட்டு கிளம்பிப்போனாள்.
117
சஸ்விஹாவுக்கும் முதல் அக்ஷ்ரன் வரட்டும். அவனிடமே விட்டுவிடலாம் தனது கேள்விகளை என நினைத்தவள், அதன் பின் அமைதியாகி, உருகி பிரார்த்திக்க ஆரம்பித்தாள். கோயிலில் இருவரும் வாயே திறக்காது பூஜை முடித்து, படிக்கட்டுகளில் இறங்கினார்கள். சஸ்விஹாவுக்கு,
´இப்படித்தானே நான் கும்பிட்டு படி இறங்கவும் என் எதிரே வந்து தரிசனம் தந்து, எனக்கு ஷாக்கடிக்க வைச்சே! இப்போ அதே மாதிரி வரமாட்டியா? வந்து எனக்கு இன்ப அதிர்ச்சி தரமாட்டியா?’ என மனதுக்குள் ஏங்கியவாறு அக்ஷ்ரன் முன் தினம் நின்று இருந்த இடத்தில், ஒரு கணம் கண்களை மூடி நின்று கொண்டாள். தோழியைப்பார்த்த வித்யா,
“சரியான அழுத்தக்காரிடி நீ! ஆனா ஒண்ணு கல்யாணம் பண்ணிகிட்டத்துக்கு அப்புறம், உன் புருஷனை இந்தக் அழுத்தக்குணத்தால் அலறவிட்டுடாதே” என திட்டவும்,
“அடி வாங்கப்போறே! வா! அவர் அருகே இருந்தா எனக்குள் எல்லாமும் ஆட்டம் காணும்” என அவள் சொல்லும் போதே, அவளின் முகம் சிவந்த அழகை அக்ஷ்ரன் பார்த்திருக்க வேண்டும். ஒரு அவசர கவிதையையே வடித்து இருப்பான்.
வித்யா தோழியின் கரம் பற்றி அழைத்து வந்து, கோயிலின் இடது புறம் இருந்த அரசமர நிழலின் படிக்கட்டில் அமர வைத்து, தானும் அமர்ந்து கொண்டாள்.
“ஏண்டி வீட்டுக்கு போகாம இங்கே சாமிக்கு காவல் இருக்க போறியா?” என சஸ்விஹா கிண்டலாக கேட்கவும்,
“இருடி! என்ன அவசரம்? கொஞ்சம் பேசலாம்” என்றாள்
“அவசரம் தான்” என தோழி நகம் கடித்தவாறே முணுமுணுக்கவும், அவளை புன்சிரிப்போடு பார்த்த மற்றவள்,
“சஸ்வி! நீ கூலா இருப்பது போல காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள்ளே நீ உதறலுக்கு உலை வைச்சுக்கிட்டு தான் இருக்கே” என சொல்லவும்
“வித்தி!” என அவள் கவலையுடன் பார்க்கவும்,
“புரியுதுடி! அக்ஷ்ரன் லேண்ட் ஆனதும் உன் மெசேஜ் பார்த்துட்டு உனக்கு கால் பண்ணத்தான் போறார். நீ இப்படி இராதே!” என தோழியை அணைத்தவாறு சொல்லவும், அவள் மவுனமாக தலையாட்டினாள்.
“அப்புறம் நீ எடுத்த முடிவை கழுவி ஊத்திடு! அதை விட்டு அக்ஷ்ரனை கல்யாணம் பண்ணிக்கிட்டு, அப்புறமா நீ பிளே பண்ற ஐடியா இருந்தா, தயவு செய்து அவரை வரவும் சொல்லாதே! கல்யாணமும் பண்ணாதே!”
“…”
“என்ன பார்க்குறே? உன் மனச தொட்டு சொல்லு! அக்ஷ்ரன் தாலி கட்டியதும் போன்னு உன்னால சொல்ல முடியுமா? இல்லை அவர் தன்னும் சம்மதிப்பாரா?”
“…”
“ஆமா தாலி மட்டும் தானா? இல்லை பர்ஸ்ட் நைட் முடிச்சுகிட்டத்துக்கு அப்புறமாவா?” என அவள் கேட்க சஸ்விஹா முகம் சிவக்க,
“என்ன தொனியில் நீ கேட்குறே?” என முறைத்தாள்.
“இல்லை தாலி கட்டி, பர்ஸ்நைட் முடிச்சிட்டதுக்கு அப்புறம் தான், நீ போலாம்ன்னு சொல்றதா இருக்கியா?” என கேட்டதும், சஸ்விஹா தலையில் கை வைத்து,
“ஏண்டி என்னை படுத்துறே?” என நொந்து கொண்டாள் .
“படுத்துறேனா? அப்படி ஒரு விவரம் கெட்ட முடிவை அலசி ஆராய்ந்து, அறிக்கை தரும் நிலைக்கு தாங்கள் தள்ளிவிட்டீர்கள்.” என அவள் அக்ஷ்ரன் பேசும் தொனியில் பேசவும், சஸ்விஹா அவளது காதினைப்பிடித்து,
“ஆளாளுக்கு அவரைப்போலவே பேச ஆரம்பிச்சுட்டீங்களா?”
“ஸ்ஸ்ஸ்ஸ் விடுடி! என்ன இருந்தாலும் உன் ஆளு போல வராதாம்” என சொல்லவும் சஸ்விஹா முகம் பூரிக்கவும்,
“அவரோட ஒவ்வொரு செயலையும், நீ ரசிக்கிறேன்னு உன் பூரிப்பே சொல்லுதுடி” தோழியின் கன்னத்தை வருடிவிட்டாள். அவள் மொபைலில் விமானம் தரை இறங்கியதுக்கான நோட்டிபிகேஷன் வரவும்,
“போதும் கிளம்பலாம்” என சொன்னவளுக்குள் ஓர் பரவச ஊற்றுடன் படபடப்பும் ஆரம்பமானது.
“கிளம்புறதா நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கல” என மற்றவள், எழுந்தவள் கரம் பிடித்து, உட்கார வைத்தாள்.
“என்னடி பேசப்போறே? சீக்கிரமா பேசித் தொலை!” என அவள் கடுப்பாகவும்,
“நான் கேட்ட கேள்விக்கு பதில் நீ சொல்லாம, ஒரு முடிவுக்கு வராம, இங்கே இருந்து கிளம்புறதா இல்லை.” என அவள் மறுக்கவும், சஸ்விஹா மீண்டும் நகம் கடித்தவாறு, மொபைலை பார்ப்பதும், தோழியைப்பார்ப்பதுமாக,
“சொல்லி முடிடி! உனக்கு புண்ணியமாக போகும்” என்றாள் இருப்புக்கொள்ளாது. அவளின் அவஸ்தையைப் பார்த்து புன்னகைத்த வித்யா,
“நீ தான் சொல்லணும் அக்ஷ்ரன் கூட பர்ஸ்ட் நைட்டை முடிச்சுட்டு, அவரை அனுப்பப் போறியா? இல்லை தாலி காட்டியதும் மண்டபத்திலிருந்து விரட்டப் போறியா?” அவள் விஷமத்துடன் கேட்கவும்,
“என் நேரம்டி! தெரியாம என்னோட பிளானை உங்ககிட்டே சொன்னேன் பாரு! என்னை உதைக்கணும்! நான் அவர்கிட்டேயே பேசிக்குறேன். நீ ஆளை விடு” என அவள் கை கூப்பி எழுந்து கொள்ளவும்,
“ஏறு ஸ்கூட்டியில!” என மற்றவள் சிரிப்புடன் சொல்ல, சஸ்விஹாவும் முறைத்தவண்ணமே ஏறினாள். வித்யாவும்,
“நீ பர்ஸ்ட் நைட்டை முடிச்சுட்டு அடுத்த நாள் போன்னு சொல்லித்தான் பாரேன். அதுக்கப்புறம் தான் தெரியும் புருஷனோட அருமை” என அவள் விடாது வறுக்கவும், அவளின் முதுகில் ஒன்று வைத்து,
“பாட்டியாடி நீ !?” என கேட்டாள்.
“உனக்கு மட்டும்” என்றாள் அவள் விடாது. சஸ்விஹாவோ அக்ஷ்ரன் மெசேஜ் பார்க்கவில்லை என அறிந்து
“அடேய்! மொபைலை ஓப்பன் பண்ணவே மாட்டியா?” என தன்னை மறந்து கேட்கவும், வித்யா சிரித்தவாறு,
“கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடுன்னு விரட்டுறதுக்கு இவ்ளோ அவசரம் கூடாதுடி!” என கிண்டலடிக்கவும்,
“வித்தி! கடுப்பைக் கிளப்பாம வண்டியை ஒட்டுடி” என அவள் மீது எரிந்து விழுந்தாள். மற்றவளோ,
“ஹலோ அக்ஷ்ரன் சார்! நீங்க இவ மெசேஜும் பார்க்க கூடாது. இவளை கட்டிக்க வரவும் கூடாது. அவ பிளான் என்னென்னு தெரியாம, வந்து மாட்டிக்காதீங்க!” என இல்லாதவனை கூப்பிட்டு சொல்லவும், சஸ்விஹா அவளது முதுகில் மொத்து மொத்து என மொத்தியவாறே வந்தாள்.
அதே நேரம் சத்தியன் வீட்டில்.
மீனாட்சிக்கு மகன் சொன்னதைக்கேட்டதும் தமையன் குடும்பத்தின் மீது இருந்த கோபமெல்லாம் புதிதாக வந்து முளைத்த அக்ஷ்ரன் மீதி திரும்பியது.
சசிரேகாவுக்கு தன் உடன்பிறப்புக்கு வந்த வாழ்க்கையையும், வசதியையும் கேட்டு, நெஞ்சு பொறாமையால் எரிஞ்சு, இந்தா இப்பவே சாம்பலாக்கிடட்டுமா? என பதறியது. தன்னை ஒதுக்கிவிட்டு, சின்ன மகளுடன் பெற்றவர்கள் போனதும் இல்லாது, இப்பொழுது எல்லாவிதத்திலும் சிறந்த ஒரு வாழ்க்கைக்கு அவள் நுழையப்போகிறாள். என்றதும், அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாது போனது. விளைவு சிறுவயதில் இருந்து சஸ்விஹாவின் மீது இருந்த வெறுப்பு, இன்று அவளது வாழ்க்கைக்கு உலை வைக்கும் தீயாக மாறி, சத்தியன் முன் வந்து நின்றது.
“சத்தியா! அந்த பாரீன்காரனை சும்மாவே விடக்கூடாது. உன் சஸ்விஹாவை மயக்கி வைச்சு இருந்திருக்குறானா அவன்? அவனுக்கு யாருன்னு நீ காட்டுறே! உன் பொண்டாட்டிய தூக்கிட்டுபோய் தாலி கட்டுவியோ? இல்லை வைச்சு இருப்பியோ? உன் திறமை. ஆனா உன்னை அவமானப்படுத்தியவன், என் அத்தையின் முகத்துல கரி பூசிய அந்தக்குடும்பத்துக்கு ஒரு பாடம் கொடுக்கணும்” என அவள் பேசவும், அருள் பயந்து போய் பார்த்தான்.
“கொடுத்திடலாம் அண்ணி. அவனுக்கு சரியான பாடம். இவள் சஸ்விஹாவுக்கு ஒரு தண்டனை கொடுக்கணும். இல்லைன்னா நான் சத்தியன் இல்லை” என அவன் கர்ஜிக்கவும், மீனாட்சியிடம் வந்த அருள்,
“அம்மா நான் விசாரிச்ச வரையில் அவனுக்கு பாலிடிக்சில் இருந்து, பாதாளம் வரை பவர் இருக்கு. சத்தியனை அடங்க சொல்லுங்க! எனக்கு பயம்மா இருக்கு” என அவன் சொல்லவும், அவருக்கும் யாருக்காகவும் தன் பிள்ளையை இழக்க மனது இல்லாதவர்,
“சத்தியா! அவங்க எப்படியும் இருந்துட்டு போகட்டும். எல்லாத்தையும் தலை முழுகிட்டு, நீ மறந்து ஒரு வாழ்க்கைக்கு தயாராகிக்கோ! உனக்கு வேற பொண்ணு பார்த்து கட்டி வைக்கிறேன்” என சொல்லவும், அவனா கேட்பான்? தாயை அடித்தே வீழ்த்தி இருப்பான் அருள் பிடித்து இழுக்காது போயிருந்தால். மீனாட்சி வெலவெலத்துப்போனார்.
“என்ன கிழவி எனக்கு வேறு ஒருத்தியை கட்டி வைக்கப் போறியா? அவ தான் எனக்கு வேணும்! ஒண்ணு என் கூட வாழணும்! இல்லை எவன் கூடவும் அவ வாழவே கூடாது!”அவன் கர்ஜனையை கேட்டு காட்டு சிங்கமே அலறிவிடும். மீனாட்சி எம்மாத்திரம்?
“அந்த பாரிஸ் காரன் இருக்குற தெனாவெட்டுல தான் துள்ளிக்கிட்டு இருக்காள். பார்த்துடுறேன் அவன் எப்படி இருக்கப்போகிறான்னு?” அவன் உறுமவும், அருள் தாய்க்கு கண்ணை காட்டிவிட்டு, அடங்காது மூர்க்கமாக மாறிப்போன தம்பியை இழுத்துக்கொண்டு, வெளியே போனான்.
மீனாட்சிக்கு முதல் முறையாக மகனின் அளவுக்கு மீறிய சஸ்விஹா மீதான ஆசை பயத்தைக்கொடுக்க ஆரம்பித்தது.
“அத்தை சத்தியனை தடுக்காதீங்க! அவளுக்கு ஒரு பாடம் புகட்டணும்” என சசிரேகா குரோதத்தோடு சொல்லவும்,
“வாயை மூடுடி! அவ வேணாம்ன்னு போனா.. இவன் விட்டு தொலைக்காம.. எங்கே அழிஞ்சுடப்போகிறானோன்னு? எனக்கு பதறுது. நீ எண்ணெய் ஊத்திக்கிட்டு குளிர் காயப்பார்க்குறியா?” என அவளிடம் சீறவும் சசிரேகா,
“நம்ம குடும்பத்துக்காகத்தானே நான் பேசினேன்” என மூக்கை சிந்தவும்,
மீனாட்சி ஏற்கனவே இளையமகனை சஸ்விஹா தூக்கி எறிந்ததை தாங்க முடியாது இருந்தவர், மூளை படு வேகமாக கணக்கு போட்டு பார்த்துவிட்டு, பின் முகம் மலர, தலையை ஆட்டியவர்,
“நம்ம குடும்பத்துக்காகத்தானே பேசினே? ம்..பேச்சு மாறமாட்டேல்லே?” அவர் கேட்க, அவளோ பவ்யமாக,
“என்னத்தே என் மேல?” என அவள் அழ ஆரம்பிக்க,
“சரி சரி வடிக்காதே! நேரம் வரும் போது, பேச்சு எப்படி மாறாம இருக்கேன்னு பார்க்குறேன்” என அவர் சொல்லிவிட்டு போகவும், சசிரேகா புரியாது முழித்தாள். பேசாது போகும் அத்தைக்காரி இரு நாட்கள் கழித்து தன் மூச்சை அடைக்க வைக்கப்போவது தெரியாது.
118
அந்திமாலையில் அவசரமாக எட்டிப்பார்க்கிறது உன் முகம்!
அழிக்கவோ, அணைக்கவோ, முடியாது விம்முகிறது என் விம்பம் !
விழிகளின் சாரலில் வீழ்ந்து உருளுகின்றது உயிர் வருடும் உன் காதல்!
ஒளியிழந்த ஓவியம் போல துருப்பிடிக்கிறது என் காதல்!
துருப்பிடிக்கும் காதலை உயிர்ப்பிக்கும் மருந்து நீ!
முரண்டு பிடிக்கும் என் மனதை கடிந்து இசைந்து விடும் நோக்கில் நான்!
நோகாமல், கொள்ளாமல், வேடிக்கை பார்க்குறது
நம் காதல் விரித்து வைத்த ஜன்னலில் !
வித்யா வேலைக்கு கிளம்பி போனதும் சஸ்விஹாவுக்கு கடிகாரம் சுத்துதா? இல்லை தன்னை அதுவும் வைச்சு செய்யுதான்னு? நொடிக்கொரு தடவை பார்த்து வெறுத்துப்போனாள்.
“முந்தாநேத்து சாயந்திரம் பிளைட் ஏறின பயல், மிஞ்சிப்போனா பன்னிரண்டு மணித்தியலாம் தான் டிராவல் அவர்ஸ். பாரிஸ் ஏர்போட்டிலிருந்து வெளியே வர ஒரு பத்து நிமிஷம். சரி அப்புறம் உன் வீட்டுக்கு போக வெறும் பதினைந்து நிமிஷம். அப்புறம் ஏண்டா இன்னும் என் மெசேஜ் டெலிவரி ஆகல? மொபைலை நீ தூக்கவே மாட்டியா? வாட்சப் மெசேஜ் எவளாச்சும் அனுப்பி இருப்பாள்ன்னு யோசிக்கவே மாட்டியா? இல்லை வந்தே வேகத்தில் நல்லா குளிருக்கு போர்த்திக்கிட்டு தூங்கிட்டு இருக்கியா?” சஸ்விஹா தனது மொபைலை மெத்தையில் வைத்து விட்டு, அதன் முன் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு, பேசிக்கொண்டிருக்கவும், பெரியவர்கள் கண்டும் காணாதது போல விட்டு இருந்தார்கள்.
பாரிஸ் அக்ஷ்ரன் வீடு,
காலை விமான நிலையத்திலிருந்து அவனே டாக்சியில் வந்து விட்டிருந்தான். அன்னை தூங்காத கண்களோடு அவனை எதிர்கொள்ளவும், அவரை கட்டியணைத்து,
“அலோ மிஸஸ் ஆனந்தகிருஷ்ணா! இதோ தங்களின் புத்திரன் பத்திரமாக வந்து சேர்ந்தாச்சு. இனியாவது தூங்கப்போங்களேன்” என அவன் செல்லம் கொஞ்சவும், அவரும் அவனது முகத்தினை வருடி நிம்மதியானவர், அவனை ஒரு சுற்று, சுற்றி வந்து, மேலும் மனதுக்குள் நிம்மதி பரவ,
“சாரிடா கண்ணா எனக்கு நீ திரும்பி வரும் வரை” என அவர் குரல் தழுதழுக்க,
“ம்மா.. ப்ளீஸ்! என்னை யாரும் எதுவும் செய்துட முடியாதும்மா. நீங்க இப்படி பயந்துகிட்டே” என தொடங்கியவன் அன்னையின் விழிகள் கலங்குவதைப் பார்த்து, கரங்களை மேலே தூக்கி சரணடைந்து,
“அம்மா எல்லாம் நாலு நாலா தெரியுது.. பிளைட் மிஸ்ட். தூக்கமே இல்லை.. நீங்க தூங்கப்போனா, ப்ளீஸ்மா நானும் தூங்கப்போயிடுவேன்” என அவன் கெஞ்சவும், அவரும் அவனது கேசத்தை சரி செய்து,
“நீ தூங்கு! எனக்கு press வேலை இருக்கு” என அவர் தனது ஆபீஸ் அறைக்குள்ளே போகவும், அவனும் தோள்களை குலுக்கிவிட்டு,
“ம்மா.. நல்லா தூங்கிட்டு வரேன். அப்புறமா முக்கியமான விஷயம் பேசணும்” என அவன் சொல்லவும், அவரும் ஆபீசில் இருந்தவாறே,
“சரிப்பா” என குரல் கொடுத்தார்.
அக்ஷ்ரன் தனது அறைக்குள் நுழைந்தவன் தூங்குவதற்கான ஆடைக்கு மாறி, தொப்பென்று மெத்தையில் விழுந்தான். மொபைலை எடுத்து சார்ஜில் போட்டுவிட்டு, அதன் பின்னால் ஒட்டி வைத்திருந்த பிரெஞ்சு சிம் கார்டை போட்டுவிடவும், பல நோட்டிபிகேஷன்.
“ஸ்ஸ்ஸ்.. இத்தனை நோட்டிபிகேஷன்? யப்பா எனக்கு தூக்கம் வருது. அப்புறமாத்தான் உன்னை ஸ்க்ரோல் பண்றது. ஓகே?” என அதனிடம் சொல்லிவிட்டு, மெல்ல கண்களை மூடினான். சஸ்விஹாவே வந்து நின்றாள். அதுவும் கொலை வெறிப்பார்வையோடு. தலையை சிலுப்பியவன்,
“பாவி! கனவுல கூட கொலை வெறிப்பார்வை தானா?” என கேட்டு நொந்தவன், மெல்ல கண்கள் இழுக்கவும், மூடினான். சில நொடிகளே. அவனை அவனுக்குள் இருப்பவள் இழுத்துக்கொண்டாள். இதழில் புன்னகை தவழ கனவில் அவனுடன் அவள் வாக்கு வாதம் தான்.
“அழுத்தத்துக்கு விருது பெற்றவள்” என தூக்கத்தில் அவன் சொல்லவும், அவனது மொபைல் அலறியது. அவனுக்கு கேட்டதாக தெரியவில்லை. தன்னை ஆட்டுவிப்பவள் கூடவே அவன் சுவாரஸ்யமாக இருந்தான். மொபைல் விடாது அலற,
“பச் உனக்கு சிம்ம கார்டு தந்தது ரொம்ப தப்பு” என அதை திட்டியவன் மொபைலை டேபிள் லாம்பில் சரித்து, தான் பார்க்குமாறு வைத்து விட்டு, அரைக்கண்ணால் யாரென பார்த்தான். இலக்கமோ இந்தியா எனவும், வாட்சப் ப்ரொபைலோ இரு பறவைகள் தம்மை மறந்து கண் சொக்கி நிற்கும் படம்.
“யாரா இருக்கும்? டேய் சரவணா நம்பரை மாத்திட்டியா?” என வாய் திறந்து கேட்டவாறு குப்புற படுத்திருந்தவன், அந்த வீடியோ அழைப்பின் ஏற்றுக்கொண்டு, பக்கவாட்டில் திரும்பி,
“அலோ” என்றான். தூக்க கலக்கத்தில். எதிர்முனை திரையில்,
“ஷரா!” என கூவினாள் சஸ்விஹா. இவன் மெத்தையில் குடிகாரன் போல அரைக்கண்ணால் பார்ப்பதும், தான் கூப்பிட்டும் எந்த ரியாக்ஷனும் காட்டாது மறுபடியும் கண்ணை மூடுவதும், பார்த்து அவளோ துடிப்புடன்,
“டேய் புருஷா!” என கத்தினாள். அவனோ, கனவில் அவள் கூட வாக்குவாதத்தில் இருந்தவன், அவளின் குரல் கனவில் தான் என எண்ணி, அப்பொழுதும் அசையாது,
“ஹேய் பேபி! சும்மா, சும்மா, என்னை மிரட்டாதே!” என அதட்டிவிட்டு, அவன் அடுத்த பக்கம் புரளவும், எதிர் முனையில் இருந்தவளுக்கு பொறுமை அவனது விஷயத்தில் சுத்தமாக இல்லை என நிரூபணம் ஆனது.
“டேய் அக்ஷ்ரா! எழுந்திருடா! ஒருத்தி இங்கே காட்டு கத்து கத்திக்கிட்டு இருக்குறது உன் கண்ணுக்கு தெரியலையா? மவனே எழுந்திரி!” என படபடப்பு, தவிப்பு, காதல், எல்லா உணர்வுகளும் படையெடுக்க, மொபைல் வழியாகவே அவனை எழுப்பி விடும் முயற்சியில், தோற்றுவிடுவேனோ? அவள் பதறினாள். அதன் விளைவு அவளையும் அறியாது அழுகை எட்டிப்பார்க்க,
“ஷரா! என்னைப்பாருங்க! சஸ்விஹாடா! உங்க விஹா பேசுறேன்! பாருங்க! பாருடா!” என அவள் வெடிக்கவும், அக்ஷ்ரன் அப்பொழுதுதான் திடுக்கிட்டு, தலையை உதறிக்கொண்டு, பட்டென்று எழுந்து, முழங்காலிட்டு, மெத்தையில் அமர்ந்தவன், சட்டென்று மொபைலை எடுத்து, கண்களை கசக்கி கொண்டு, பார்த்தான்.
திரையில் பரிதவிப்போடு கண்களில் அத்தனை காதலையும் தேக்கி, அவனது தேவதை தரிசனம் கொடுத்தாள். அவனுக்கு நம்பவே முடியவில்லை. பதட்டத்துடன் தனது அறையை சுற்று, முற்றும் பார்த்துவிட்டு, நேரத்தையும் பார்த்துவிட்டு, நிஜம் தான் என உறுதிப்படுத்தியவன் பின்,
“ஹேய் பேபி” என கூவினான். அவளோ செல்ல அழுகையுடன்,
“பாவி! எத்தனை போன் கால்டா? எத்தனை மெஸேஜ்ஜுடா? ஒண்ணு கூட உன்னை..” என அவள் குலுங்கி அழவும், அவன் உடைந்து போனான். அவள் அழுது பார்த்திராதவன் அல்லவா?
“யூ ..மீ ..மெசேஜ்..?” என அவன் முதல் முறையாக திணறவும்,
“எனக்கு நீ வேணும்! உனக்கு நான் வேணும்ன்னா வாடா!” அவள் சொன்னதும் அவனது உடல் முழுதும் ஒரு மின்சாரத்தாக்குதல். ஜிவ்வென ஏறவும், மெத்தையில் அவனது உயரத்துக்கு எழுந்தே நின்று,
“விஹா! நீ.. நீங்க.. நீ.. என்னை..” என்றவனுக்கு முதல் முறையாகவே வார்த்தைகள் தந்தியடித்தன. அவனது திணறலையும், அவன் நின்ற கோலமும், அவளது மனதினை புரட்டி போடவும், அவனை ரசித்தவாறே,
“முதல்லே நான் வாட்சப் பண்ண மெசேஜை படிப்பா!” என அவள் விழிகள் முழுதும் அவன் மீது இருந்த காதலை பிரசவித்தவாறு சொல்ல, அவன்,
“லைனிலே இரு..ங்..க.. இரும்மா!” என்றுவிட்டு பார்த்து, படித்தவன், பின்,
“பேபி!! ஐ லவ் யூ!!!” என கத்தினான். சஸ்விஹா தெறித்து விழுந் ஆனந்தக்கண்ணீருடன் அவனை பார்வையாலேயே கொள்ளை அடித்தாள். அவனோ, அவளின் பார்வைகள், அவளின் முகம், எல்லாம் புதிதாக தோன்ற ,
“விஹா!” என அவன் அழைக்கவும், கண்களை மூடி அந்தக்குரல் அவளை கனவில் காதலிப்பவனின் குரலே தான் என உணர்ந்து கொண்டாள். கனவில் அன்பால் தன்னை ஆட்டுவித்த ஆண்மைக்குரலுக்குரியவனேதான். உயிர் வரை ஊடுருவி, தான் துவளும் போதெல்லாம் தன்னை ஆட்கொண்டவன், தன்னால் படைக்கப்பட்டவன், இன்று கண்முன்னே காதலனாக, வருங்கால கணவனாக, அவளுக்கு நெஞ்சை அடைத்தது.
“விஹா! என்னைப்பாரேன்” என அவன் குரல் மீண்டும் அருகே கேட்கவும், அவளோ,
“மொபைலை முகத்துக்குகிட்டே கொண்டு போங்க” என்றாள் கண்கள் திறவாது. அவனும் அப்படியே செய்யவும், அவளும்,
“இப்போ உங்க நெற்றியில் வைங்க” எனவும் அவனும் வைக்க, அவள் கண் திறந்து இதழ் குவித்து, முத்தம் மொபைலில் வைக்கவும், அவன் அவள் என்ன செய்கிறாள் என புரிய, மொபைலை எடுத்து தனது உதட்டில் வைக்கப்போக, அவளோ முகம் சிவக்க,
“உதை விழும்” என்றுவிட்டு,
“ஷரா இப்போ ஒரு கண்டிஷன்.. எவ்வளவு குவிக்கா என் முன்னாடி நிற்க முடியுமோ? அவ்ளோ குவிக்கா வரணும்! இல்லைன்னா என் மனசு மாறினாலும் மாறிடும்” என அவள் மிரட்டவும்,
“அடிப்பாவி! ஒரு நாள் முழுக்க உன்னை நினைச்சுகிட்டு, பிளைட் மிஸ் பண்ணி, டுபாய் ஏர்போட்டையே டாபாய்ச்சுகிட்டு, தூங்காம வந்து மெத்தையில் விழுந்தா” அவன் முறைக்கவும்,
“அது எல்லாம் எனக்குத் தேவையிலலாத மேட்டர் திரு அக்ஷ்ரன் அவர்களே! அடுத்த விமானத்தில் தாங்கள் ஏறத் தவறும் பட்சத்தில், இந்த சஸ்விஹா காலம் முழுதும் செல்வி சஸ்விஹாவாகவே இருப்பதாக முடிவு எடுத்து விடும் அபாயம்” என அவள் சொல்லவும்,
“அய்யயோ.. ஏன்மா இப்படி?” என அலறியவாறு விழுந்தடித்துக்கொண்டு பாத்ரூம் ஓடினான். முகத்தில் நீரை அடித்து தூக்கத்தை விரட்டிவிட்டு, பின் அறைக்குள் ஓடி வந்து, மொபைலை டேபிளின் மீது வைத்து விட்டு, மேல் சட்டையை கழட்டி, சுழட்டி வீசினான். அவளோ அவனது செய்கையால் வெட்கம் பாதி, திகைப்பு பாதியாக,
“ஏய் என்னப்பா பண்றீங்க?” என அவசரமாக வினவினாள்.
“ம்.. ட்ரஸ் சேஞ்ச் பண்றேன்மா.. பிளைட் பிடிக்க வேணாம்?” என அவளுடன் பேசியாறு சட்டையை தேர்ந்தெடுக்க பீரோவை திறந்தான். அவனது வெற்று மார்பினை முகம் சிவக்க, கூச்சத்துடன் பார்த்தவள், கண்களை தாழ்த்தினாலும்,
´எனக்கு சொந்தமானவன்.. நான் பார்க்காது வேறு யார்?’ என மனது சொல்லவும், பின் விழிகள் தூக்கி அவனைப்பார்த்தாள். அவனின் மார்பின் அழகை அணுஅணுவாக ரசித்து விழி தூரிகை கொண்டு வரைந்தாள்.
அவன் ஒவ்வொரு சட்டையாக தன் மேல் வைத்து, வைத்து, எறிந்து விட்டு, ஒருவழியாக ஒரு சட்டையை அவளிடம் காட்டி “ஓகேயா?” என கேட்கவும், அவளோ,
“நீங்க எது போட்டாலும் ஸ்மார்ட் அண்ட் ஸ்டைலிஷ் தான்” என்றாள் புன்னகையுடன். அவனும் பறக்கும் முத்தம் அனுப்பியவாறு, எடுத்து அணிந்தவன், இடுப்பில் கை வைக்கவும், மறுமுனை பட்டென்று கண்களை மூடியவாறு,
“அய்யோ வீடியோவை ஹைட் பண்ணிட்டு மாத்துடா!” என கத்தியது. அக்ஷ்ரன் வாய் விட்டு சிரித்தவாறு, அவ்வாறே செய்தவன், பின் அவளிடம், தனது ஆடை “ஓகேயா!?” விரலால் கேட்கவும், அவளும்,
“ஷரா! உங்க ஆடைகளின் தேர்வுக்கு விருதே தரலாம்” என பாராட்டினாள். அவன் சல்யூட் ஒன்றை அவளை நோக்கி வீசினான். நன்றி சொல்லும் விதமாக. பின் அவள் தனது கடிகாரத்தைப்பார்த்து,
“திரு அக்ஷ்ரன் அவர்களே தங்களின் நேரம் இப்பொழுதிலிருந்து ஆரம்பமாகுறது. நான் சொன்னபடி நிற்காது போனால், நான் நினைத்தால் கூட என் முடிவு மாறிடாது” எனவும், அவனோ,
“பேசு பேபி! பேசு! இப்போ உன்னோட நேரம். நல்லா பேசு! எனக்கு வரும் அல்லவா? அப்போ இந்த அக்ஷ்ரனை நீ தாங்க மாட்டே” என மிரட்டிவிட்டு, அவள் கூடவே பேசியவாறு அவசரமாக படிகளில் குதித்தே ஓடவும், தாய் சத்தம் கேட்டு வந்து,
“கண்ணா என்னாச்சு? எங்கே கிளம்பிட்டே? தூங்கலை? மொபைலை ஆப் பண்ணலையா?” என அவர் கேள்விகள் கேட்டு களைக்க,
“அம்மா உங்களுக்கு மருமகள் வேணுமா? வேண்டாமா?” என அவன் பதில் சொல்லாது எதிர்கேள்வி கேட்க, அவர் புரியாது,
“நான் என்னிக்குப்பா வேணாம்ன்னு சொல்லி இருக்கேன்?” என கேட்டார்.
“இது நல்ல அம்மாவுக்கு அழகு” என அவரை கொஞ்சியவன், பின்,
“உங்க மருமகள் லைனில் இருக்கா அவகிட்டே போறேன். நீங்க பின்னாடி பிரசன்னா கூட வரீங்க. அங்கேயே மேரேஜ், அடுத்த பிளைட்டுல கம் பேக்” என அவன் பட, படவென சொல்லிக்கொண்டு போக, அகல்யாவுக்கு சந்தோஷம் ஒரு புறம், ஆனால் அவர் புரியாது,
“யாருப்பா?” என கேட்டுவிட்டு சட்டென்று, “சஸ்விஹாவா?” என எட்டிக்குதித்த சந்தோஷத்துடன் கேட்கவும்,
“ஆமா! அதே அழுத்தமான ராட்சசி தான்” என அவன் சொன்னதும், எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சஸ்விஹாவுக்கு ஒரு பக்கம் தயக்கம். மறுபக்கம் அகல்யாவின் குரலில் தெறித்த ஆர்வம், அவருக்கு தன்னை மருமகளாக்கி கொள்வதில் அளவு கடந்த சந்தோஷம் என உணர்ந்தாள்.
“ஹேய் பேபி! பேசு!” என அவளிடம் சொல்லி மொபைலை தாயின் பக்கம் நீட்டவும், அவளும் முதல் தினறி, பின் தயங்கி, பின் வணக்கம் வைத்தாள்.
“அடடா எனக்கு கால்கள் நிலத்தில் நிற்கவே மாட்டேங்குதேம்மா” என அவர் மகனுக்கு மேலால் பேசவும்,
“எனக்கு ஆல்ரெடி அந்தரத்தில் தான் மிஸஸ் ஆனந்தகிருஷ்ணா” என அவரின் தோளைக்கட்டிக்கொண்டு சொன்னான். சஸ்விஹா இருவரையும் கண்கள் கலங்க பார்த்து பொங்கும் சந்தோஷ அழுகையை வாய் பொத்தி அடக்கினாள்.
“அழக்கூடாதுடா! ரொம்ப நன்றிமா என் பையனை ஏற்றுக்கொண்டதுக்கு! நான் கடவுள்கிட்டே உன்னைப்போல மருமகள் வேணும்ன்னு தான் கேட்டேன். ஆனா அவர் உன்னையே தந்திருக்கார்” என அவர் நெகிழ்ந்து சொல்லவும், அவளோ திகைத்து, மறுப்பாக தலையாட்டி,
“நான் ரொம்ப கொடுத்து வைச்சுருக்கேன்மா” என்றாள் குரல் தழுதழுக்க. இவர்கள் பேசும் கணப்பொழுதில், அக்ஷ்ரன் அடுத்த மொபைலில் இருந்து பயணத்தை பதிவு செய்துவிட்டு,
“அலோ லேடிஸ்! நெக்ஸ்ட் பிளைட் ரெடி! நான் கிளம்பிடுறேன்.” என்றவன், “அமமா என்னோட லக்கேஜ் எதுவும் பிரிச்சுடலையே?” என கேட்டான். அவர் திகைத்து இல்லை என தலையாட்டவும்,
“குட் மா! வேலை மிச்சம்” என அவன் சூட்கேஸ் நின்ற இடத்துக்கு சென்று அதை உருட்டி வந்தவன், பாஸ்போர்ட் எடுத்து ஜாக்கெட்டில் வைத்து விட்டு,
“பேபி மற்றவை நேரில் பேசப்படும். நீ டைம் செட் பண்ணியா என்னை கூப்புடுறே? இந்த அக்ஷ்ரன்கிட்டே வான்டட்டா வந்து மாட்டிகிட்டே. வரேன்” என அவன் சொல்லவும், அகல்யா,
“கண்ணா நானும் வரேன்.. நீ தனியா..” என அவர் பதற ஆரம்பிக்கவும், அவனும்,
“அம்மா! நோ.. நோ.. கூல்! கூலாகுங்க.. பிரசன்னாகிட்டே எல்லாம் சொல்லிட்டேன். அவன் வந்து உங்களை அழைச்சுட்டு வருவான்.”
“….”
“ஒரு ரெண்டு நாள் தான்.. கிளம்புறேன்மா” என அவன் வாசலுக்கு வரவும், அகல்யா கலக்கத்துடன் பின் தொடர்ந்து,
“அக்ஷ்ரா! என்னால” அவர் குரல் உடையவும், கேட்டுக்கொண்டிருந்த சஸ்விஹாவுக்கு ஒரு மாதிரியாகிப்போனது. தான் தப்பு செய்து விட்டோமோ? என யோசித்தவள், சட்டென்று,
“என்னங்க நீங்க அம்மா கூட சாவகாசமாக வந்து சேருங்க” என சொன்னாள். அவனோ,
“ஒருத்தன் ஒரு ராட்சசிகிட்டே தான் மாட்டிக்கலாம். இங்கே நான் ரெண்டு பேர்கிட்டே. இப்போ நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணித்தான் ஆகணுமான்னு? எனக்கு லேசா டவுட்டு எட்டிப்பார்க்கிங்” என்றான் குறுக்கு நெடுக்காக நாலு நடை நடந்து. இரு பெண்களும் பதறிப் போனவர்களாக,
“என்னப்பா முதலுக்கே மோசமா? நீ கிளம்பு! கிளம்பு! அம்மா பின்னாடி பிரசன்னா கூட வரேன். நல்ல நாள் பார்த்து, சஸ்விஹா பெத்தவங்க கூட பேசி, கல்யாணத்தை ஜாம், ஜாம்ன்னு நடத்திடலாம்” என அகல்யா சொல்லவும்,
“இது மிஸஸ் ஆனந்தகிருஷ்ணாவுக்கு அழகு” என அவன் அன்னையை கொஞ்சிவிட்டு கிளம்பினான். சஸ்விஹாவும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு,
“அத்தை! நான் இருக்கேன் உங்க பிள்ளையை கண்ணுல பெட்ரோல் ஊத்திக்கிட்டு பார்த்துக்க. நீங்க கவலைப்படாம வந்து சேருங்க” என தைரியம் கொடுக்கவும், அவனோ
“ஆக மொத்தத்தில் ஏதோ ஒண்ணுக்கிட்டே இருந்து தப்பி ஏதோ ஒண்ணுக்கிட்டே மாட்டிக்கிட்டேடா நீ” என சொல்லிக்கொள்ள பெண்கள் சிரித்தார்கள்.
***
விமானம் கிளம்பும் வரை சஸ்விஹா லைனிலே இருந்தாள். அவனும் காதில் மாட்டி இருந்த Bluetooth வழியே தனது நடவடிக்கைகளை சொல்லிக்கொண்டிருந்தான்.
“அவனவன் காதலை எப்படியெல்லாம் ப்ரொபோஸ் பண்ணி இருக்கான். நான் எவ்ளோ பிச்சை கேட்டேன். கொஞ்சமாவது கருணை காட்டினியா? போ! போன்னு விரட்டிவிட்டு, பின்னாடியே மெசேஜ், கால் பண்ணி, இப்போ டைம் செட் பண்ணி, டார்ச்சரா? இரு! இரு! எல்லாத்துக்கும் வந்து உன்னை வைச்சுக்குறேன்” என அவன் செல்லமாக எச்சரிக்கவும், அவளோ பழிப்புக்காட்டிவிட்டு,
“வாடா வா!” என சண்டைக்கு தயாராகுபவள் போல நின்றாள்.
“ஹேய்! நானும் நோட் பண்ணிக்கிட்டு இருக்கேன். என்ன தி க்ரேட் அக்ஷ்ரனை வாடா, போடா, என மரியாதையை தேஞ்சு தொங்க விடுறே?” என அவன் வேண்டும் என்றே குரல் மாற்றத்துடன் கேட்கவும், அவளும் முகம் மாற,
“சாரிங்க! நான் அப்படி உரிமையா கூப்புடுறது உங்களுக்கு புடிக்கலையா?” என குற்றம் செய்தவள் போல வினாவவும், அவன் வாய்விட்டு சிரித்தவன்,
“எனக்கு ரொம்பவே புடிச்சு இருக்கு. என் சட்டையை உரிமையில்லாத போதும் பிடிச்சு உலுக்கிய உனக்குள் இருக்கும் ரவுடியை” என அவன் சொல்லவும், அவள் விழிகள் விரிய,
“அப்பொழுதே இருந்தே என் மீது நூலா?” என கேட்கவும் அவன் “ஆமாம்” என தலையாட்டி,
“ஹேய் பேபி! பிளைட் மூவ். வந்ததும் எல்லாம் நேர்ல பண்ணிக்கலாம்” என குறும்புடன் சொல்ல, அவள் புரியாது பார்த்தவள், பின் அவனது பார்வையில் உணர்ந்து முகம் சிவக்க,
“வைடா போனை!” என அவள் மிரட்டலுடன் முறைக்கவும், அவன் உதடு குவித்து முத்தம் அனுப்பியவன்,
“என்னுடைய உலகம் நீ!
உன்னுடைய ராச்சியம் நான்!
நமக்குள் இல்லை ரகசியம்!
காண்போம் ஓர் சுவாரசியம்!
காதல் வைத்துப்போனதோ
ஓர் வசியம்!
என அவன் சொல்ல, அவளும்,
“இப்படி கவிதையா பேசி என்னை கவிழ்க்குறது” என செல்லமாக முறைத்தாள். பதிலுக்கு ஒன்று சொல்லாவிட்டால், அவள் அவனுக்காக படைக்கப்பட்டவள் இல்லையே.
உருகும் நிலையில் உழன்று
கொண்டிருக்கிறது என் மனம் !
மறுகும் நிலையில் மண்டியிடுகிறது உன் காதல் !
பெருகும் நிலையில் உணர்வுகள்
பொங்கிப் பிரவகிக்கிறது !
இருந்தும்,
விலகும் நோக்குடன் என் விழிகள் கெஞ்ச,
எனையாளும் கிரகம் நீ,
ஒற்றை விரல் தீண்டி விண்ணப்பம் போட,
இறுமாப்புக்கொள்கிறது
நம்மை வெற்றிகொண்ட காதல்!
அவனைப் பார்வையால் பருகியவாறே சொல்ல அக்ஷ்ரன் தாளமாட்டாது, விமானம் என்றும் பார்க்காது, மொபைலை அவளது உதடு என பாவித்து அழுந்த முத்தமிட்டான். அவள் முகம் சிவக்க,
“எந்த பிளைட்? எத்தனை மணிக்கு வந்து சேருவீங்க?“ என அவள் கேட்கவும், அவனோ,
“இப்போதைக்கு ஒரு பிளைட். அது ஒரு நாட்டில் லேண்டாகும். அடுத்து அங்கிருந்து வேறு ஒரு நாட்டில். அப்புறம் உன் முன்னாடி. ரெண்டு, மூணு ட்ரான்சிட் இருக்குமா? இல்லையா? எனக்கே போகப்போகத்தான் தெரியும். ஏன்னா நம்ம அவசரத்துக்கு எந்த பிளைட்டும் காலியாக இல்லை” என்றான். அவள் முகம் யோசனைக்கு போகவும்,
“ஹேய் பேபி! நீ பீலாகாதே! நான் பிளைட் இறக்கையில தொங்கிட்டாவது வந்து சேர்ந்துடுவேன்” என சொல்ல, அவள் அவனைப் பார்த்து,
“எந்த அவசரமும் இல்லை.. பார்த்து.. ஷரா! பத்திரமா வந்து சேருங்க.. நீங்க என் கண் முன்னாடி நிற்கும் வரை எனக்கு நிம்மதியில்லை” என அவள் சீரியஸாக கலங்கத் தொடங்கவும்,
“விஹா! நீயும் அம்மா போல ஆகிட்டியா?” என அவன் முகம் மாறவும், அவளோ அவனது மனநிலை கெடுக்க விரும்பாது,
“சாரி.. சாரி.. பத்திரமா வந்து சேருடா என் மல்டிக்கலர் மன்னா!” என அவள் குறும்புடன் சொன்னதும் அவன் வியந்து “ஹேய்!” என்றாள். அவன் ஏதோ சொல்ல உதடு திறக்கவும், பணிப்பெண் மொபைலை அணைக்க சொல்லவும் அவனும் அணைத்தான்.
சஸ்விஹாவின் விதி இத்துடன் அவளை விட்டுவிடுவோமா? இல்லை மேலும் வைச்சு செய்வோமா? என யோசிக்க, அவளைப்படைத்த பிரம்மனோ போதும்! என சொல்ல, அதை ஏற்றுக்கொள்ளவா? வேண்டாமா? என விதி பரீசிலனை செய்ய ஆரம்பித்தது.
119
ஜன்னலில் வீசும் காற்றில் உன் சாயலின் கீற்று!
பார்த்த நானோ சற்றும் தயங்காது இதழ் குவித்தே ஓர் ஒற்று!
முற்றும் துறந்த முனிவன் கூட சுற்றம் மறந்து சுருதி மீட்டுவான்
காற்று வரும் ஜன்னலில் ஓர் காதலா என!
சஸ்விஹாவுக்கு இரவாகி விடிந்தும் போனது. அவளோ நிலை கொள்ளாது தவிப்பதும், வீட்டில் இருக்கும் பொருட்களை தேவையில்லாது அங்கே எடுத்து வைப்பதும், பின் அதை இங்கே மாத்துவதுமாக இருக்கவும், பெரியவர்களும் அக்ஷ்ரன் எப்போ வந்து சேருவான்? என காத்திருந்தார்கள்.
அவன் வந்ததும் முதல் வேலை “இந்தா பிடி! உன் பொண்டாட்டியை” என ஒப்படைத்துவிட வேண்டும் என எண்ணினார்கள். அந்தளவுக்கு அவர்களால் தம் செல்ல மகளின் தவிப்பை கண் கொண்டு காண முடியாது போனது, வித்யாவோ நன்றாக அவளை கலாய்த்துக்கொண்டே இருந்தாள்.
சஸ்விஹாவுக்கு என்னவோ தவறாக நிகழப்போகிறது? என அவள் உள் மனது எச்சரிக்கவும், ஒரு கட்டத்தில் அவளால் முடியாது போகவும், அமைதியாக இருக்க, பூஜை அறைக்குள் புகுந்து, அமர்ந்து, கண்மூடி மனதுக்குள் ஸ்தோத்திரம் சொல்ல ஆரம்பித்தாள்.
அக்ஷ்ரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை வந்தவன், நேராக தனது சென்னை வீட்டுக்கு சென்று குளித்து, பிரஷாகி, சஸ்விஹாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
அக்ஷ்ரன் தான் வந்திறங்கியதும் சஸ்விஹாவின் குடும்பத்தின் பாதுகாப்புக்கு சரவணனால் அமர்த்தப்பட்டிருந்த ஆளை வேண்டாம் என்றுவிட்டான். ஆனால் அது எவ்வளவு தவறான முடிவு என வர இருக்கும் மணித்தியாலங்களில் உணரப்போவது தெரியாது .
வெளியே மாமர நிழலில் அமர்ந்திருந்த பெரியவர்கள், அவனைக்கண்டதும் தம் பாரம் எல்லாம் விலக அவனை ஆசையோடு வரவேற்றனர்.
“வாங்க! வாங்க! எங்க பொண்ணு ரொம்பவும் படுத்திட்டாளா?” என விநாயகமூர்த்தி கேட்கவும், அவனும் அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவன்,
“நோ.. நோ.. அப்படியெல்லாம் இல்லை சா..”என அவன் எப்படி அழைப்பது எனது யோசிக்கவும், போன வேகத்தில் திரும்பியவனின் முகம் மாறுபட்ட காலநிலையால் ஒரு பக்கம் சிவந்து, பயணக் களைப்பே அவனிடம் இல்லாது இருப்பதை பார்த்து வியப்புடன்,
“மாமான்னு கூப்புடுங்க மாப்பிளை” என்றார் அவர் பெருமையோடு. அவனும் மெல்ல புன்னகைத்து,
“சரி மாமா! விஹா எங்கே?” என கேட்டான். அவரும்,
“அதை நீங்களே போய் பாருங்க! அவ ஒரு நிலையில் இல்லை. பூஜை அறையில் இருக்கா” என அவர் உள்ளே போக சொல்லி கை காட்டவும், அவன் காலணிகளை கழட்டினான்.
“நீங்க போங்க மாப்பிளை! நாங்க ரெண்டு பேரும் கோயிலுக்குப் போய், ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்துடுறோம்” என அவர் வைதேகிக்கு கண் ஜாடை காட்ட, அவரும் கணவரை பின் தொடர்ந்தார்.
அவனும் தம்மை தனியாக விடும் நோக்கில் தான் அவர்கள் கோயிலுக்குப் போகிறார்கள் என புரிந்து கொண்டான். அவர்களை கனிவுடன் பார்த்து,
“தாங்க்ஸ் மாமா!” என தலையாட்டி நன்றி சொல்லிவிட்டு, உள்ளே ஓசை எழுப்பாது நுழைந்தான். எது பூஜை அறை? என அவனுக்கு கண்டு பிடிக்க சிரமம் ஏற்படவில்லை. சத்தமில்லாது அறை வாசலில் வந்து நின்றான். சஸ்விஹா தன்னை மறந்து முணுமுணுத்தவாறு, கண்களை மூடி, கரம் கூப்பி ஸ்தோத்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் அழகு அவனை நெகிழ வைத்தது.
எந்தவித ஓசையுமின்றி அவளுக்கு முன்னாலேயே முழங்காலில் அமர்ந்து கொண்டு அவளையே ரசிக்க ஆரம்பித்தான். கண் மூடி இருந்தவளின் நாசியில் அவளின் சுவாசத்தோடு கலந்தவனின் வாசம் உணரவும், பட்டென்று கண்விழித்தாள். எதிரே இவளையே புன்னகை தளும்ப கண்களில் காதல் ஒழுக பார்த்துக்கொண்டிருந்தவனைக் கண்டதும், அவளுக்கு குப்பென்று வெட்கமும், சந்தோஷமும் ஒரு சேர,
“ஹேய்” என கூவியவாறு எழுந்து விட்டாள். அவனும் எழுந்து கொண்டவன், கைகளை கட்டிக்கொண்டு, அவளையே சைட் அடிக்கவும், அவனது பார்வையையும், முகத்தையும் பார்த்தவளுக்கோ, மொபைலில் அவனிடம் பேசியதுக்கும் நேர்ல எப்படி பேசுவது? என தயக்கமும், அதுக்கு மேலாக வெட்கமும் போட்டி போட திணறினாள்.
“மேடம் ஹாப்பியா இப்போ?” என அவன் குனிந்து கேட்கவும், அவளோ,
“எப்போ வந்தீங்க? ஒரு போன் கால் இல்லை” என மெல்லிய குரலில் முணுமுணுக்கவும்,
“அலோ சஸ்விஹா மேடம்! போனில் தான் அந்த ஒட்டு ஓட்டுவீங்களா? நேர்ல என்ன அதே தலையைகுனியும் ஓல்டு தாமரையா?” என அவன் கேட்கவும், அவளோ சிறு முறைப்புடன், குனிந்து விபூதி எடுத்தவள், அவனை நிமிர்ந்து பார்த்து,
“குளிச்சீட்டீங்களா?” எனக்கேட்டாள்.
“இல்லைன்னா குளிப்பாட்ட போறீங்களா?” என அவன் எதிர் கேள்வி கேட்கவும், அவள் முகம் சிவக்க,
“ஷரா! சாமி ரூம்” என்றாள் சிறு அதட்டலுடன். அவனும்,
“நான் பெட் ரூமுன்னு சொல்லலையே” என்றான் அவன் விடாது. மேலும் முகம் சிவந்து போனவள், விபூதியை தட்டில் போட்டுவிட்டு, காதுகளை பொத்தியவாறு அறையினை விட்டு வெளியேறினாள். அவனும் பின்னால் வந்தான். ஹாலுக்கு வந்தவள் அவனிடம்,
“ஏதாச்சும் குடிக்க தரட்டுமா?” என உபசரிப்புக்கு மாறவும், அவன்,
“நான் கேட்குறதை மேடத்தால் தரமுடிஞ்சா தரலாம்” என்றான் அவளது இதழ் மீது விழிகளை வீழ்த்தி. அவளோ வெட்கம் பாதி, முறைப்பு மீதியாக,
“சுத்தம்! கண்ணியமான அக்ஷ்ரன் எங்கே போனார்ன்னு? தெரியல” என்றாள் அவனை இப்பொழுது கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு முறைத்துப்பார்த்து, அவனும்,
“காதல் வந்தால் கண்ணியம் காலாவதியாகிடும் மேடம்” என்றான் கண்சிமிட்டி. அவளோ மேலும், மேலும் தன்னை சிவக்க வைப்பவனை இதழில் புன்னகை அரும்ப பார்க்கவும்,
“மேடம் நான் வந்த பாரிஸ் விமானத்தின் சூடு இன்னும் ஆறவில்லை. தாங்கள் இடைவெளி பேணுவதற்கும், எட்டி நிற்பதுக்கும் விருது வாங்க துடித்தீர்களானால், நான் வந்த விமானத்தில் திரும்பி விட நேரம் ஆகாது” என்றான் அவள் எட்டி நின்றே பேசுவதை குறிப்பிட்டு. அவளோ திகைத்து, பின்,
“ஓஹோ! எட்டி நின்று பேசினால் என்னோட காதல் மீட்டர் ஒன்றும் குறைஞ்சுடாது” என்றாள்.
“ஹேஹே! ஆனா எனக்கு ஒட்டி நின்று பேசினால் தான் உயிரே மீட்கும்” என சொல்லிவிட்டு அவளை நெருங்கவும்,
“ஹேய்! அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் வைச்சுக்கோங்க” என மிரட்டவும், அவனும்,
“ஜெனெரேஷனிலே தப்பி பிறந்தவன்னு சும்மா சும்மா ப்ரூவ் பண்ணிக்கிட்டு இருந்தா.. அப்புறம் நான் ரொம்ப கெட்ட பையனாகவே மாறிடுவேன்” என சொன்னவன் ஒரு எட்டில் இவளது மூக்கு நுனியினை தொடும் இடவெளிக்கு வந்து நின்றான்.
சஸ்விஹாவுக்கு எப்பொழுதும் அவனை தூரத்தில் எட்டி வைத்தே ரசித்தவளுக்கு, அவனது அருகாமை, இந்தளவு நெருக்கம், கிறக்கத்தை தருவோம் தயாராகிக்கொள் என்றது.
அவனோ கரங்களை பின்னால் கட்டிக்கொண்டு “எங்கே இப்போ என்னை பிடிச்சு உலுக்குங்க பார்க்கலாம்” என்றான் மெல்ல குனிந்து அவளது விழிகளில், காதுகளில், கழுத்தில், ஊதியவாறு அவளுக்கு உடலின் அத்தனை ரோமங்களும் சிலிர்க்க,
“ஷரா! ப்ளீஸ் கொ.. கொ.. ஞ்சம்.. த ..தள்ள” என அவள் கெஞ்சலுடன் அவனைப்பார்க்கவும், அவனோ மறுப்பாக தலையசைத்து,
“ஒரு நொடி தான் உனக்கு அவகாசம். அதுக்குள்ளே நீ என்னை தொடணும். இல்லையா? இப்படியே பின்னால் எட்டு வைத்து, திரும்பியும் பாராது, பாரிஸுக்கு பறந்துகிட்டே இருப்பேன். எப்படி வசதி?” என அவன் இதழில் குறும்பு கொப்பளிக்க கேட்டான்.
அவளுக்கு மட்டும் ஆசை இல்லையா? அந்த குறும்பு பேசும் இதழையும், காதல் கூத்தாடும் கண்களையும், என்னைத்தீண்டித்தான் பாரேன்! என அறை கூவல் விடும் ஆண்மையையும், சும்மா பக்கத்தில் வைத்துக்கொண்டு, ஏங்கி சாக அவளால் முடியாது போகவும், எட்டி அவனது சட்டையை கொத்தாகப் பற்றியவள்,
“என்ன மிரட்டலா? நாங்க பொம்பளைங்க முதல்லே அப்படித்தான் பம்முவோம்.. ஆனா திருப்பி அடிச்சா ஆம்பிளைங்க நீங்க சரண்டர் தான்” என அவள் பற்களுக்கு இடையே வார்த்தைகளை அரைத்து, சுட்டு விரலால் அவனது முகத்தில் வரைய ஆரம்பித்தாள்.
“என்றோ ஒரு நாள், ஒரு ரயிலில் இந்த உருவத்தைப்பார்த்தேனோ, அப்பவே என்னையும் அறியாது எனக்குள்ள வரைஞ்சு ஓவியம்டா இந்த மூஞ்சி!” என சொல்லியவாறு விரலால் நெற்றியிலிருந்து நாடி வரை வரைந்தாள். அவன் புன்னகைக்கவும்,
“இதோ இந்த உதடு இருக்கே.. இது புத்தகம் படிச்சுக்கொண்டு இருக்கும் போது, பூ மொட்டு ஒன்று விரியட்டுமா? இல்லை விடவா? என அபிநயம் பிடிச்சுதே.. அப்பவே, வா! என்னை வந்து முத்தம் கொடேன்! என சவால் விட்டது.” அவன் உதட்டில் அவளது சின்ன விரல் வானவில் போடவும், அவன் கண்கள் முழுதும் காதல் கிறக்கத்தை தரையிறக்கம் செய்தது.
“இந்த நாடியில நாலு விரலால் தாளம் போட்டுக்கிட்டு, பேசுற பொழுதெல்லாம் என் இதய நாளங்கள் எகுறிப்போகுமே” தனது நான்கு விரல்கள் கொண்டு அவனது நாடியில் பியானோ வாசித்தே சொன்னாள்.
“சினத்தின் மணம் அறியா இந்த மூக்கு நுனியில் ஒரு வாட்டியாச்சும் என் இதழ் பதிக்க மாட்டேனா? என ஏங்கியது தெரியுமா? அப்படி, இப்படி, என நடந்துகிட்டு முடிவு எடுப்பாயே.. அப்போ இந்த பக்கவாட்டு முகம்.. இதை எத்தவனாட்டி சைட் அடிச்சிருப்பேன்னு தெரியுமா? அப்புறம் இதோ! இந்த அசராத தோரணை.. உன்னோட ஸ்டைலான ஆண்மையை எத்தனை தடவை ஓரக்கண்ணால் ரசிச்சு இருக்கேன் தெரியுமா?” அவள் கேட்டு, கேட்டு சொல்லிக்கொண்டு வரவும், அவன் விழிகள் காதலின் எடையை ஏற்றிக்கொண்டு போனது.
“அப்புறம் இதோ இந்த தெனாவெட்டாக இருக்கே மார்பு! இதில ஒரு நொடி தன்னும் முகம் புதைக்க மாட்டோமா? என ஏங்கியது தெரியுமா?” எனக்கேட்டு அவனது சட்டை பட்டன்களை, அவள் இரு கைகளாலும் பிரித்து, அவனது வெற்று மார்பில், தனது பத்து விரலையும் வைத்து, வருடினாள். அவனால் தன்னைக் கட்டுப்படுத்தவே முடியாது போனது.
பின்னுக்கு கட்டி இருந்த கைகள் தாமாகவே அவளை இடையோடு சேர்த்து அணைத்து தன்னோடு இறுக்கியது. அவளும் மறுக்காது,
“நான் கனவுல படைச்சவன்.. நான் அங்குலம், அங்குலமாக ரசிச்சவன் நேர்ல வந்து.. எனக்கு சொந்தமாவான்னு நினைக்கலியே” என சந்தோஷ திக்குமுக்காடலுடன், சோகமாக சொன்னவள், அவனது முகத்தை தன்னை நோக்கி இழுத்தாள்.
“நான் தொட்ட முதல் ஆணும் நீதான்! நான் விரும்பிய முதல் காதலனும் நீதான்! என்னை அடிமையாக்கிய முதல் ஆண்மையும் நீதான்!” என சொல்லியவள், தானாகவே அவனது தவித்த இதழ் மீது தன் செவ்விதழ் கொண்டு இரு வரிக்கவிதையை வரைய ஆரம்பிக்கவும், அவனும் அவளது பேச்சில், செய்கையில் தன் வசமில்லாது போன உணர்வுகளையும், மனதையும் அவளிடமே சரணடையவிட்டான்.
120
சில நிமிடங்களின் பின் அவள் முகம் சிவக்க விலகவும், அவனோ அவளை விலக்க மனம் இல்லாது, தனது மார்பில் சாய்த்துக்கொண்டவன், கண்களை மூடி, அவள் எழுதிய இதழின் கவிதையை தனது நெஞ்சுக்கூட்டுக்குள் பதுக்கி பரவசம் கண்டான். சஸ்விஹாவும் கனவில் தன் காதலன் கூட ஒண்டிக்கொண்டு இருந்த அந்த சுகமும், அந்த தொடுகையையும் அவனிடம் உணர்ந்தாள்.
“விஹா!” என அவனது குரல் காதோரம். அவளோ அவனது மார்பிலிருந்து தலை தூக்காது கண்மூடியவாறு இருந்தவள்,
“ம்” என்றாள்.
”நீ பேசியதை கேட்டதும் எனக்கு ஆச்சர்யம், எப்படி எந்தவொரு உணர்ச்சியையும் முகத்துல, செயலில், வார்த்தையில் காட்டாது இருக்க முடிஞ்சுது?” அவன் வியந்து கேட்கவும், அவளோ,
“அது என்னோட நேச்சுரல்” என்றாள் அவனது நெஞ்சிலிருந்து தலை தூக்காது.
“ம்ஹூம் ரொம்ப தப்பான பொல்லாத நேச்சுரல் விஹா” என்றான் அவன். அவளோ தலை தூக்கிப்பார்த்து,
“என்னோட குணம் அது ஷரா! என்னால் எல்லாம் அடக்கித்தான் பழக்கம். எதையும் வெளியில காட்டுறது கிடையாது” என சொல்ல, அவனோ,
“இனி அப்படி இருக்காதே! இந்த பழக்கம் பலருக்கு டிப்ரெஷனை வரக்காரணமா இருக்கு” என்றான் குரலில் கவலையோட. அவளும்,
“உண்மைதான். உங்கமேல உள்ள காதலை நான் அடக்க, அடக்க எனக்கு டிப்ரெஷன் பிளஸ் நெஞ்சு வலி, எல்லாம் வந்திச்சு” என்றாள். அவனோ நெகிழ்ந்து போய் தன் நெஞ்சோடு இறுக அணைத்தவன், தலையில் முத்தமிட்டு,
“எனக்கு உன்னை பிடிச்சிருக்குடா! கல்யாணம் பண்ணிப்பியான்னு நேராகவே கேட்டு இருக்கலாமே?” என அவன் யோசனையுடன் கேட்க, அவளோ,
“சேச்சே! என் மானம், மரியாதை என்னாகுறது? என்கேஜ்ட் மென்ட் ஆனவள்னு அறிமுகமானவள், எந்த வாயால் ஒருத்தரை விரும்புறேன்னு சொல்ல முடியும்? அப்படி சொன்னா என்னை என்ன ரகம்ன்னு நீங்க நினைச்சு இருப்பீங்க?” என அவனது நாடியில் பிடித்து ஆட்டியவாறு கேட்டாள்.
“ம்ம்..நியாயமான கேள்வி தான், நீ என்னை பிடிச்சு உலுக்கிய நாள் உன்விரலில் மோதிரம் மட்டும் இல்லாதிருந்திருந்தால், நான் அன்றே உனக்கு ப்ரோபோசல் பண்ணி இருப்பேன்” என அவன் குறும்புடன் சொல்லவும், அவளும் காதலுடன் அவனைப்பார்த்து,
“க்கும்.. தி க்ரேட் அக்ஷ்ரனின் முகம் என் மேல காதல் இருக்குறது போலவா காண்பிச்சுது? உணர்ச்சிகளை உங்ககிட்டேயும் தான் காணக்கிடலையே.. பேச்சைப் பாரு” அவள் சிறு செல்ல முறைப்புடன் சொன்னாள்.
அவனும் முறைத்துக்கேட்ட இதழின் நெளிவில் தன் வசமிழந்தவன், அவசரமாக குனியவும், அவள் கரம் தடுப்பதற்கு உயரவும், அதை தனது கரத்துக்குள் சிறை வைத்தவன், அவளையும் தன் வசமிழக்க வைத்துவிட்டு நிமிர்ந்தான். சஸ்விஹா வேண்டுமென்றே செல்ல அடி அவனது கன்னத்தில் ஒற்றை விரல் கொண்டு தட்ட, அதைப்பற்றியவன்,
“எனக்கு ரீனா, லில்லி, பமீ போல உன்னை ரொம்பவே பிடிக்கும். ஆனா உன் மேல இருந்த பிடிப்பு வேற லெவல். உன்னை ரசிப்பேன் உன்னைப்போல சைட் அடிச்சது கிடையாது” அவளின் விழிகளை வருடிவிட்டு சொல்லவும்,
“ரசிக்குறதுக்கு இன்னொரு பேர் சைட் அடிக்கிறது தான் பாஸ்” என்றாள் செல்லமாக அவனது நெஞ்சில் குத்தி. அதையும் ரசித்தவன்,
“உன்னை என்னால் புரிஞ்சு கொள்ளவே முடியாம போகும். பல நேரம் திணறி இருக்கேன். முன்னுக்கு பின் முரணா இருக்காளேன்னு”
“க்கும்.. உங்க மேல உள்ள காதல் முட்டிகிட்டு நிக்கும் போதெல்லாம்..முன்னுக்கு, பின்னுக்கு, சைட்டுக்கு, பைட்டுக்கு, முரண்டுகிட்டு, முரண், அரண் எழுப்பாம இருந்தால் தான் ஆச்சர்யம்” அவள் நொந்து, கிண்டலாக சொல்ல, அவனோ
“ஹா.. ஹா..” என வாய் விட்டே சிரித்தான். சஸ்விஹா,
“நீ சிரிக்கும் போதெல்லாம், வெட்கமின்றி, என் பெண்மை, உன் மீது சாயும் சாபம் கேட்குறது” என அவன் முகம் வருடி சொன்னாள்.
“என் மீது சாயும் சாபம் கேட்கும் உன் பெண்மை கண்டு கட்டவிழ்கிறது என் தாபங்கள்” அவன் கிறக்கத்துடன் சொல்லியவாறு, அவளின் முகத்தோடு தன் முகம் வைத்து உரசவும், சஸ்விஹாவுக்கு நாணம் நாலா பக்கமும் அப்பிக்கொள்ள,
“அச்சோ ஷரா! என்னால முடியல” என சொல்லி அவனிடமிருந்து விலக முயன்றாள். அவனோ அவளை விலகிட இடம் கொடாது,
“என்னாலேயும் தான் முடியல விஹா ! தட் தாலி கட்டும் வரை வெயிட் பண்ண வேண்டாமே” என அவன் காதில் கிசு கிசுக்கவும், அவளோ,
“அலோ பாஸ்! டிசிப்ளின் வேணும்” என சொல்லி துள்ளி விலகி நின்றாள். அவன் கேசத்தை கோதியவாறு அவளை மயக்கும் பார்வை பார்த்து,
“பாவம் நல்லா சம்பாதிச்சுட்டேன். எப்படி சரிபடுத்தப்போறேனோன்னு ஓர் நாள் சொன்னாயே.. நினைவு இருக்கா?” அவன் கேட்கவும், அவளுக்கும் அவனை கம்பெனியில் விளாசிய சம்பவம் மறக்குமா என்ன?
“ம்ம்..” என்றாள் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு .
“இப்போதான் ரைட்ஸு இருக்கே.. சரிபடுத்தினா நான் என்ன தடுக்கவா போறேன்?” என அவன் சட்டை மீதி பட்டன்களை கழட்டவும், அவள் முகம் சிவக்க,
“ஷரா ப்ளீஸ்! முக்கியமான விஷயம் பேசிகிட்டு இருந்தீங்க. நான் கவிதைன்னுற பேர்ல கண்டதையும் கிளறிவிட்டுட்டேன். நீங்க பேசுங்க” என்றாள்.
“என் பீலிங்ஸ் உனக்கு கண்டதுமாக தெரியுதா?” அவன் செல்ல முறைப்பு முறைக்கவும், அவள் பழிப்புக்காட்டினாள். அவன் புன்னகைத்தவன் தொடர்ந்தான்.
“அன்று ஆக்சிடென்ட் ஆன போது நீ துடித்து, பதைத்து எடுத்த போன் கால் சம்பவம்.. அந்த சஸ்விஹா.. எனக்கு புதுசாக தெரிய ஆரம்பிச்சா” அவன் சொல்லிவிட்டு, அவளைக் காதலுடன் பார்த்தான்.
“என்னோட பிரண்ட்ஸ் கூடத்தான் துடிச்சு பதைச்சுட்டு இருந்தாங்க” என்றாள் அவனை குறும்புடன் பார்த்து.
“ம்..அவங்க கண்ணில் இருந்த ஒளியும், உன் கண்ணில, முகத்தில் இருந்த தவிப்பும், குரலில் தெறித்த பதைப்பும், புரிந்தவன் குழம்பி நிற்காது, கும்மியா அடிப்பான?” அவன் கிண்டலாக கேட்கவும்,
“ஹேய்” என அவள் சிணுங்க,
“இப்படி சிணுங்கி உன் மீது சிம்பொனி மீட்ட வைச்சுடாதே” என அவன் மார்க்கமாக மிரட்டவும், அவளோ திகைத்து, இரு கரம் மேல் தூக்கி, மறுப்பாக தலையசைக்க, அவன் சிரித்தவனாக தொடர்ந்தான்.
“என்னால் ஒரு முடிவுக்கு வரவோ, அந்த சஸ்விஹாவை மறக்கவோ முடியாது, வாட்ச் பண்ண ஆரம்பிச்சேன். ஆனா கூகிள் கூட எனக்கு கை கொடுக்கும். இந்த முகம்.. ம்ஹூம்.. ஒரு அகராதியும் கண்டு பிடிக்க முடியாதுடான்னு நொந்தது தான் மிச்சம்” அவன் நொந்துகொள்ளவும், அவள் ஒரு மூச்சு இழுத்து விட்டு ஜன்னலருகே வந்து நின்றாள். பின் பேச ஆரம்பித்தாள்.
***
“நானோ விரும்பாத விலங்கினை மாட்டிகிட்டு வந்து சேர்ந்தவள். நான் விரும்புறது போல ஒருத்தனை எனக்காக படைச்சு இருக்கக் கூடாதா? என நொந்து, அந்த படைத்தவனிடம் சண்டை போட்டு, எனக்கானவனை என் கனவுலகில் படைச்சு, அவன் கூடவே நான் வாழ்ந்து கொண்டிருக்க, வந்தான் பாரு ஒருவன் நான் விரும்புறது போல. என் கனவின் காதலனே நேரில் பார்த்தது போல” அவள் இடை நிறுத்தி அவனை பார்த்த பார்வையில் அவனை வெற்றி கொண்ட திமிர்.
அதை அவன் ரசித்தவாறே சுவற்றில் வலது தோள் சாய்ந்து, இடது கால் எல் வடிவில் சரித்து, பாக்கெட்டில் கைகளை விட்டவாறு பார்த்தான். அவனது தோரணையிலும், பார்க்கும் பார்வையிலும், சறுக்கும் மனதை மெல்ல தலையாட்டி நிமிர்த்தியவாறு,
“ஆனால் அவன் மீதோ ஆயிரம் கிரஷ். ஆயிரத்தில் ஒன்றாக நான் இருக்கவும் விரும்பவுமில்லை. அநியாயமாக என்னை அடிமையாக்க காத்திருக்கும் காதலுக்கு, நீர் ஊற்றி வளர்க்கவும் விரும்பவில்லை.”
“ஸ்மார்ட்” என்றான்.
“என்னோட கடமைகள், என் குடும்பம், அதுவே போதும். என என் உணர்வுகளுக்கு, கனவுகளுக்கும், நெருப்பு பற்றவைத்துவிட்டு, நான் ஒதுங்க, அப்பப்பா.. என்னை ஒதுங்கவோ, தூங்கவோ விட்டால் தானே. இந்த முகமும், இதனோட மோட்டிவேஷன் வார்த்தைகளும், பாரின் பேச்சும், என்னை மீண்டும், மீண்டும் அந்த பொல்லாத காதல் வலைக்குள்ளேயே மாட்டித்தான் விடுவோம். என ரவுண்டு கட்டி, என்னை உருகுலைக்க முனையவும்” என்றவள் சிறிது மூச்சு விட்டாள்.
“அன்னிக்கு என் வீட்டில நீ சொன்ன கவிதை என்னை நினைச்சுத்தானா?” அவன் மறக்காத அவளின் கவிதை வரிகளை, மீண்டும் சொல்லி கேட்க, சஸ்விஹா அவன் நாடியில் எட்டி முத்தமிட்டு,
“இப்போதான் இந்த பல்பு எரிய ஆரம்பிச்சு இருக்கோ?” என கிண்டலாக கேட்டவள், அவன் அணைக்க வர எட்டி, நின்று,
“அது என்னப்பா நீங்க கவிதை சொல்றதுன்னா என்னையே லுக் விட்டுகிட்டு கண்ணை மூடி பின்னுறது?” என அவள் தனக்குள் இருந்த பல நாள் சந்தேகத்தை கேட்டதும்,
“உன்னைப்பார்த்தாலே ரசிச்சு, கவிதையா கொட்ட தூண்டும் என் உணர்வுகள். ஏன்? எதற்கு? என புரிவதில்லை. ஆனா அப்புறமாத்தான் இந்த ஓவியம் எனக்குள் ஆழமாக மாட்டப்பட்டு இருக்குன்னு புரிஞ்சுது” கண்களில் காதல் ரசம் சொட்ட அவன் சொன்னதும், சஸ்விஹா,
“எனக்கு மட்டும் என்னவாம்? உன் மீது வீசும் காற்று, என் மீது வீசும் பொழுதெல்லாம் என் வசமிழப்பதும், உன் அருகாமையில் நான் என்னை மறப்பதும், அப்பப்பா நான் எனக்கான உலகத்தில் எப்படி இருந்தேன் தெரியுமா?” அவள் பரவசமானதை பார்த்தவன் தாளமாட்டாது,
“சோ சுவீட்” என்றவாறு அவளை நோக்கி எட்டு வைக்க,
“உதைப்பேன்! அங்கேயே நில்லுடா” என மிரட்டிவிட்டு தொடர்ந்தாள்.
“ஒரு கட்டத்தில் நான் போக முடியாத இடத்துக்கு, தவறான பாதையில், வழி தேடி களைக்குறேன் என புரியவும், போதுமடா சாமி! என்னோட அடக்கும் குணமே எனக்கு வியாதியை கொண்டு வந்து தரப்போகிறது என பயந்து போனேன்”. அவள் அந்த நேரம் அனுபவித்த வேதனையை குரலில் கொண்டு வந்து சொன்னதும், அக்ஷ்ரன் ஒரே இழுவையில் இழுத்து தன் மீது போட்டுகொண்டு அவளை மூச்சு முட்ட முத்தமிட்டான். திக்கு முக்காடியவள், பின் அவன் மீது சாய்ந்தவாறே,
“நான் என் பேரண்ட்ஸுக்கு முக்கியம். எனக்கு அவங்க முக்கியம். இடையில் இந்த உருவத்தை எனக்குள் அனுமதித்தது முட்டாள் தனம். முடிவில்லாத ஒரு வலிக்கு நானே வான்டட்டா விழுந்து விட்டேனோன்னு கோபம்” அவள் சொல்லிக்கொண்டு வரவும், குறுக்கிடாது அவளையே அணைத்துக்கொண்டிருக்கும் பிடியை இறுக்குவதும், இளக்குவதுமாக இருந்தான் அவன்.
“இது எல்லாத்துக்கும் மேல என்னோட மனதை இழுத்து பூட்டுறது போல, என்கிட்டேயே நேரடியாகவே கேட்டாரே ஒரு கேள்வி. என்ன என் மேல ஏதாச்சும் ஈர்ப்பு வந்திடுத்தா? தண்டவாளம் தடம் மாறிடுத்தான்னு?” சொன்னவள் விழிகள் கலங்கவும்,
“சாரிமா” என்றான் அதன் மீது இதழ் ஒற்றி,
“எவ்ளோ ஒரு மானம் போகுற, மரியாதை இழக்கும் அபிப்பிராயம் என் மேல வைச்சு இருந்தா.. இந்த கேள்வியை அவர் வாயால் கேட்குற அளவுக்கு என்னோட செயல் தூண்டி இருக்குன்னு? என் மேல அன்னிக்கு எழுந்த கோபத்தை அளக்கவே முடியாதுங்க” அவள் வேதனையுடன் சொல்லவும், அவனோ, தன் நெஞ்சோடு அணைத்து,
“நீ ஆமான்னு சொல்லி இருந்தாலும், நான் மறுத்திருக்கமாட்டேன் பேபி! ஒரு பெண் அத்தனை இலகுவில் ஒரு ஆணை மனதுக்குள் அனுமதிக்கமாட்டாள். அதையும் மீறி நீ அனுமதிச்சு இருக்கே என்றால் அந்த மோதிரத்தின் வில்லங்கம் எனக்கு புரியாமல் போயிருக்காது.”என அவளை அசரவைத்தான்.
“ஷரா!” குரல் தழுதழுக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் அவளின் நெற்றியில் இதழ் கோடு வரைந்து,
“ஆனா நீ ஏதோ ஒரு சூழ்நிலைக்கைதி என்று மட்டும் புரிஞ்சு கொண்டதால் தான். உன் வாயாலேயே தெளிவுப்படுத்தினா, நான் குழம்பிக்கிட்டே இருக்கத்தேவை வராது இல்லையா? அதான் வேண்டும் என்றே நேரிடையாகவே கேட்டேன்” அவன் விளக்கம் கொடுக்கவும், அவளும்,
“அந்த அதிரடி, என்னைப்போல ஒரு சூழ்நிலைக்கைதி எப்படி தங்குவாள்? பதில் தருவாள்? என்று இந்த க்ரேட் அக்ஷ்ரனுக்கு புரியாது ஏன் போனதோ?” அவனது மூக்கை நிமிண்டியவாறு கேட்கவும், அவன் அந்த நிமிண்டிய விரலில் தன் இதழ் ஒற்றினான்.
“சான்ஸ் கிடைச்சா பாஸ் ரொமான்ஸ் கில்லாடி தானோ?” என அவள் சிறு முறைப்புடன் கேட்கவும்,
“மேலே சொல்லும்மா!” என அவன் சிரிப்புடன் கூறவும், அவள்,
“ஷரா உங்க ஸ்டேட்டட் வேற, என்னோட நிலை வேற, ஈபிள் டவர்ல ஏறி அழகு உலகத்தை காணலாம். ஆனா அந்த ஈபிள் டவரை சொந்தம் கொண்டாட முடியாது இல்லையா?” என அவள் சொல்லவும், அவனும்,
“அலோ மேடம்! அந்த ஈபிள் டவர் கவர்மெண்டு பிராபர்டி. பிடிச்சவங்க பலவித சைசுல வாங்கி சொந்தம் கொண்டாடிட்டு தான் இருக்காங்க. ஆனா இந்த உயிருள்ள ஈபிள் டவர் தனியார் பிராபர்டி. இதை உரிமை கொண்டாட கடவுள் உங்களை எனக்கு அனுப்பி இருந்தா.. அதை யாராலும் மாத்த முடியாது” அவன் அவளது நெற்றியில் முட்டி சொல்லவும், மெல்ல புன்னகைத்தவள்,
“இந்தியா திரும்பியதும் தானே புரிஞ்சது. எனக்கு சொந்தமானதை வேறு யாருக்கோ நான் கொடுக்க போகிறேன் என. அது தாங்குற சக்தி சத்தியமா என்கிட்டே இல்லைன்னு உறைச்சதுக்கு அடுத்த நொடி, வாடான்னு சொல்லி கூவிட்டேனே” என அவள் முடிக்கவும்,
“நான் முன்னாடி சொன்னது போல உன் குடும்பத்தைப்பற்றி, முக்கியமாக சத்தியனைப்பற்றி, எனக்கு தெரிய வந்ததிலிருந்து நான் என் வசம் இல்லை.” அவன் சொல்ல, அவனின் கேசத்தை ஆசையாக தொட்டுப்பார்த்து விரல்களால் கோதினாள்.
“ஷரா! உங்ககிட்டே ஒண்ணு கேட்கணும் கேட்கலாமா?” சஸ்விஹாவின் குரல் தயங்கி ஒலித்தது
“ஒண்ணு தானா?” என அவன் கிறக்கத்துடன் கேட்டே, அவள் கழுத்தில் உதடு வைத்து முணுமுணுக்க,
“சீ..விடுப்பா!” என அவனைத் தடுத்து, விழிகளால் கேட்கவா? எனப்பார்த்தாள். அவனும் உதடு குவித்து முத்தம் அனுப்பி “ம்ம்” என்றான்.
“நான் பாரிஸ் வந்த அன்று, அவுட்டோர் நைட் போன அன்னிக்கு, அப்பா உங்க கூட பேசினார் இல்லையா?” என அவள் நினைவு கூறவும், அவன் மெல்ல புன்னகைத்தவன்,
“என்ன அவர் என்கிட்டே என்ன பேசினார்? நான் கழுத்து சுளுக்குள் ஏன் விழுந்தேன்னு தெரிஞ்சுக்கணுமா?” என அவன் அன்று தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்ததை குறிப்பிட்டு சொல்லவும், அவனின் பேச்சை ரசித்தவாறே தலையாட்டினாள்.
“நீ என்ன சூழிநிலையில் பாரின் வேலைக்கு வந்திருக்கே..உன்னைப் பாதுகாக்கவும், பத்திரமாக திருப்பி அனுப்பவும் கேட்டுக்கொண்டார்.” என்றான் அவன். அவளோ,
“இதுக்கு ஒரு நிமிடம் போதும் ஷரா! பதினைந்து நிமிடங்கள் எதுக்கு? அப்புறம் நீங்க என்னை திரும்பியும் பாராது முகம் திருப்பிப்போனது. வேறு என்னவோ சொல்லுதே” என்றாள் அவள் விடாது. அவனோ அவளின் மூக்கை நிமிண்டி,
“விடமாட்டியா?” எனக்கேட்டு, பின் சொன்னான்.
“நீ சத்தியனின் வருங்கால மனைவின்னும்.. எந்த ஆம்பிளையும், உன்னை எதுவும் செய்திடாதவாறு பார்த்துக்கொள்ள சொல்லியும் கேட்டார்” என்றான். அவளோ,
‘சத்தியனின் விஷம் கலந்த அன்றைய பேச்சினை அப்பா பிடித்துக்கொண்டு, அக்ஷ்ரனிடமே சத்தியனின் வருங்கால மனைவின்னு பேசியதை என்னால் சகிக்கமுடியாது இருக்கும் பொழுது. அவன் மட்டும் என்ன நினைத்திருப்பான்?’ மனதுக்குள் கேட்டவாறு அமைதியாக இருந்தாள்.
“நீ இங்கே வந்ததுக்கு அப்புறம் தான். எனக்குள் நீ என்ன பாதிப்பு தந்துவிட்டு போயிருக்கேன்னு எனக்கு உறைச்சுது.” அவன் குரல் வர சிந்தனை கலைந்து.
“அப்போ உங்களுக்குள்ளே என் மேல காதலை வைச்சுக்கிட்டு.. அது காதல் தான்னு தெரிஞ்சுக்க முடியாது.. அம்மா பார்க்குற பொண்ணுங்களையெல்லாம் போய் பார்க்குறது என்ன? பேட்டி கொடுக்குறது என்ன? அப்படியே அம்மாகிட்டே வந்து கிளிப்பிள்ளை போல கீச்சுடறது என்ன? எப்படிடா முடிஞ்சுது? அவள் காதலுடன், கோபம் கலந்து, எகுறவும், அவனோ வாய்விட்டு சிரித்தவன், அவளை தூக்கி ஒரு சுற்று சுற்றிவிட்டு இறக்கினான்.
“நீங்க மட்டும் சும்மாவா இருந்தீங்க மேடம்? எனக்கு பொண்ணு பார்க்குறதுக்கு அசிஸ்டென்ட் வேலை பார்த்த ஆளாச்சே இந்த மேடம். அந்தவேலை பார்க்கும் போது இந்த அப்பாவி எப்படி உங்க ஜாதகத்தை தான்னு கேட்குறதாம்?” என அவன் பதிலுக்கு வேண்டும் என்றே எகுறவும், அவளோ, அவனது நெஞ்சில் மெல்ல சாய்ந்து,
“அந்த நெஞ்சத்தின் அறைகளை அடித்து நொறுக்கும் வலி, யாருக்கும் கொடுத்திடாதேன்னு நான் உள்ளுக்குள்ளே வெந்தது. எனக்குத்தான் தெரியும்.” என அவள் குரலில் வேதனையின் வலி தெரியவும், அவன் குனிந்து அவளது முகத்தின் மீது தன் முகம் வைத்து,
“விஹா பேபி! மை சுவீட் பேபி! பேசிக்கிட்டே தான் இருக்கப்போறோமா? அடுத்த கட்டத்துக்கு போலாமா?” என அவன் மென்மையான குரலில் கேட்கவும், அவளோ அவனை பின்னுக்கு தள்ளி நிற்க வைத்து,
“அலோ பாஸ்! நமக்கு கல்யாணம் இன்னும் ஆகலை” என்றாள் ஒரு மிரட்டலுடன். அவனோ புரியாது, பின் புரிந்து,
“அடிப்பாவி என்னை பேட் பாய்ன்னு நினைச்சுட்டியா? அடுத்த கட்டத்துக்கு போலாம்ன்னு கேட்டது, உன்னை இப்பவே இங்கேயே பெட்டில தள்ளுறதுக்கு இல்லை. பெரியவங்ககிட்டே சொல்லி மேரேஜ் அரேஞ் மெண்ட்ஸ் பார்க்க சொல்லணும். அடுத்த டேட்டிலியே மேரேஜ். நெக்ஸ்ட் பிளைட்ன்னு என்னோட புரோகிராம் சொல்ல வந்தா.. நீ” என அவன் செல்லமாக முறைக்கவும், அவளோ நாக்கை கடித்து,
“சாரிப்பா” என்றாள்.
“ஏன் சொல்லமாட்டே? ஆனா நீ இப்படியொரு ஐடியாவை தந்ததுக்கு அப்புறம், நான் உன்னை ஒண்ணுமே பண்ணாம போனா தான் தப்பு. வா” என அவளை அலேக்காக தூக்கவும், அவளோ திகைத்து, பின் வெட்கி, பின் பதட்டமாகி,
“அச்சோ ஷரா! விடுங்க என்னை!” என சிணுங்கினாள். அவனோ கேட்காது,
“மூச்!” என்றுவிட்டு அவளை தூக்கிக்கொண்டு வந்து தனது வண்டியில் ஏற்றி அதை எடுத்தான்.
121
“யப்பப்பா எங்கேடா போறோம்?” என அவள் புரியாது வினாவவும்,
“போறோமா? சிறு திருத்தம்! திஸ் பாரிஸ் மல்டி கலர் மன்னன், இந்த பியூட்டியை கிட்நாப் பண்ணிக்கிட்டு சம்திங்க் செய்ய போகுறானாம்” என அவன் சீரியஸாக சொல்லவும், சஸ்விஹாவோ முறைத்தவண்ணம்,
“ஏய்! சீ சீரியஸா பேசுறேன்னு சில்லித்தனமா பேசாதீங்க ! ” என்றாள்.
“அலோ! யாரு சில்லித்தனமா பல்லிக்கு பல்லு விளக்குறது ? நான் பிக்ஸ் பண்ணிட்டேன். எனக்கு இப்போ வந்திருக்குற மூட்’க்கு எப்படி தாக்கு பிடிக்கலாம்ன்னு, உங்களை ப்ரிபேர் பண்ணிக்கோங்க” அவன் சொல்லியவாறு வண்டியை ஒட்டவும், சஸ்விஹா அவனது குறும்பினை ரசித்தவளாக,
“அந்தளவுக்கு எல்லாம் துணிச்சலா? பார்த்துடலாம்” என அவள் ஆசுவாசமாக இருக்கையில், வசதியாக அமர்ந்து கொண்டாள்.
“அடடா பரவாயில்லையே படக்கென்று ரெடியாகிட்டீங்க போல”
“அநியாயமாக என்னை ரவுடியாக்காதீங்க !” என்றாள் மீண்டும் ஒரு மிரட்டலுடன்,
“நீ ரவுடியானால் நான் கேடியாவேன்” என சொல்ல,
“ஷரா!” என அவனது தோளில் செல்ல அடி கொடுக்கவும்,
வண்டி ஒரு காம்பவுண்டுக்குள் நுழைந்து, போர்டிகோவில் வந்து நிற்கவும், இறங்குமாறு கதவை திறந்து விட்டான். அவளும் இறங்கியவாறு நிமிர்ந்து பார்த்தாள்.
‘நல்வரவு அக்க்ஷய இல்லம்’ என கற்களால் அழகாக பொறிக்கப்பட்ட வாசகம் அவளை வரவேற்றது. அவனது சென்னை பங்களா என புரியவும்,
“ஷரா உங்க வீட்டுக்கு முதல், முதல் வரேன். முன்னாடி சொல்லி இருக்கலாமேப்பா..”
“ஏனோ?” என அவன் தலை சரித்து ஸ்டைலாக கேட்ட அழகில் தாளமாட்டாது, அவளும் தலை சரித்து இதழ் குவித்து முத்தம் பறக்க விட்டவாறு,
“நான் ஏதாச்சும் வாங்கி கொண்டு, இல்லை மங்கல பொருட்களை எடுத்துக்கிட்டு வந்திருப்பேன்” என அவனை திட்டவும் முடியாது, கோபிக்கவும் முடியாது சங்கடத்துடன் பார்த்தாள். அவனோ,
“நீ வாங்கிட்டு வர்றதை வாங்க போறதே நான் தான். வேறு யாரும் இல்லை. அப்புறம் மங்கல பொருட்களா ? உன்னை விடவா? வா !” என அவன் எட்டி வந்து, அவளை தூக்கினான், அவளோ,
“ஷரா! இறக்கி விடுங்க ப்ளீஸ்!” என அவள் கெஞ்சவும், அவன்,
“ஏன்மா ?” என குரல் மாறக் கேட்டான். அவளோ அதைக்கவனித்தவள்,
“உங்க மேல நம்பிக்கை இல்லாமல் இல்லை. நான் வரேன்.. ஆனா முதல் முதலில் வர்றவ வலது காலை எடுத்து, நானே நடந்து வரணும்ன்னு ஆசைப்படுறேன். அதுக்கு பர்மிஷன் ப்ளீஸ்ப்பா” என அவனது நாடியை பிடித்து ஆட்டவும், அவனும் ஒத்துக்கொண்டான்.
இறங்கியவள் புடவையை சரி செய்து கொண்டு, அவனது கரம் பற்றி, “வாங்க !” என உள்ளே வலது காலை தூக்கி வைக்கவும்,
“ஆனாலும் தமிழ் பண்பாடு, உன்னையும் அம்மாவையும் ரொம்பத்தான் படுத்துது. அதை என்கிட்டே அத்திப்பூ பூப்பது போல கூட எதிர்பார்க்க முடியாது பேபி” என அவன் சந்தடி சாக்கில் சொல்லியும் விட,
“ஓஹோ? இங்கே அத்தி பூக்காதாமோ? நல்லா மொத்தி, பண்பாடு இல்லாமல் இருந்தா, ரெண்டு பெண்களும் உங்களை ஒரு பாடு படுத்தி விடுவோம். ஜாக்கிரதை” என அவள் மிரட்டிவிட்டு நேராக பூஜை அறைக்குள் நுழைந்தாள்.
அவள் விளக்கு ஏற்றிவிட்டு சில நிமிடம் கண்களை மூடி வணங்கினாள், அக்ஷ்ரன் தாய்க்கு தகவல் அனுப்பிக்கொண்டிருந்தான்.
“அம்மா நீங்க சொன்னது போல உங்க மருமகள் நம்ம வீட்டுக்கு விளக்கு ஏற்றி வைச்சுட்டாள்” என. சஸ்விஹா வெளியே வந்தாள்.
“அம்மா எனக்கு மெசேஜ் பண்ணி இருந்தாங்க படி” என தனது மொபைலை அவளிடம் நீட்டினான். கண்களில் தெறித்த ஆச்சர்யத்துடன் வாங்கிப் படித்தவள், நெகிழ்ந்து போனாள். அதில்,
“முதல் சஸ்விஹாவை பார்த்ததும் அழைத்துக்கொண்டு அக்ஷ்ய இல்லம் போப்பா! அவ கையால் பூஜை அறையில் விளக்கு ஏற்ற சொல்லுப்பா! பல வருஷமாக இருண்டு கிடக்கும் இல்லம். என் மருமகள் ஒளி பெற்று, உயிர் திரும்பட்டும். இனி எங்களுக்கான ஒளி சஸ்விஹாதான். அவளை மருமகளாக கொண்டு வந்த அந்தக்கடவுளிடம் கேட்டுக்குறேன். அக்ஷ்யாவே அவ வயித்தில் உதிக்கட்டும் என. அதன் பின் என் உலகம் நிறைவு பெறும்” என இருந்தது. அவள் கண்கள் கலங்க மவுனமாகவே அவனிடம் மொபைலை நீட்டினாள். வாங்கியவன்,
“விஹா..உனக்கு அக்ஷ்யா யாருன்னு கேட்கத்தோணலையா?” என கேட்டான். அவன் அதை கேட்கும் போதே, அவன் குரல் உடைந்தது. சட்டென்று பின் பிடரியில் கை வைத்து, பற்களை கடித்து, கொதிப்பேன் என நெஞ்சு எச்சரிக்க, அவன் வேகமாக வந்து பால்கனியில் நின்றான், முகத்தில் மோதிய காற்றினை உள் வாங்கி கண்களை மூடினான் .
சஸ்விஹா எல்லாம் தெரிந்தவளாகையால் காட்டிக்கொடுக்காது, பின்னால் அவனை கட்டி அணைத்தாள். முதுகில் அவள் முகம் புதைத்து, இதழ் பதிக்க, அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த எரிமலை அவளது தீண்டலால் அணைய, திரும்பாமலேயே,
“விஹா நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலையே” எனவும், அவள் புதைத்த முகத்தை எடுக்காது,
“ஷரா! எனக்கு எல்லாம் தெரியும். எப்படி என்று கேட்காதீங்க! எனக்கு இப்படி அப்செட் பாஸ் சுத்தமா பிடிக்கலை.” என்றாள். அவன் அமைதி காத்தான்.
“எந்த காலத்திலும் இப்போ பார்க்குற மிஸ்டர் அக்ஷ்ரனை நான் பார்க்கவே கூடாது” அவள் கண்டிப்பான குரலில் சொல்ல, அவனும் ஒரு ஆழ்ந்த மூச்சினை இழுத்து விட்டு, மேலும் முடிந்து போன சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வந்து, தனது மன நிலையையும், அவளின் சந்தோஷத்தையும், கெடுக்க விரும்பாதவனாக, சட்டென்று திரும்பி,
“அம்மா சொன்னது போல விளக்கேற்றிட்டே. இப்போ நான் சொன்னது போல சம்திங் பண்ணலாம் வா!” என அவளை தூக்க முனைய, அவளோ தள்ளி நின்று,
“சம்திங் பண்ணப்போய் சரமாரியா வாங்கி கட்டிக்காதீங்க! அதுவும் பார்க்கவே பாவமா இருக்கு. அநியாயமாக அடி தரவே மனசு வராதாம்” என அவள் பாவம் பார்த்தாள். அவன் வாய் விட்டு சிரித்து,
“விஹா இங்கே நாம ரெண்டு பேரும் மட்டும் தான். நான் உன் மீது ரொமான்ஸ் வயலின் மீட்ட நினைச்சா..நீ என் மீது வயலென்ட் டான்ஸ் ஆடப் பார்க்குறே! போ! போ! இந்த அக்ஷ்ரன் ரொமான்ஸ் அனுபவிக்க உனக்கு கிடைச்ச சான்ஸ் நீ மிஸ்ட்” என அவன் முறைப்புடன் சொன்னதும், அவள் எட்டி அவனது சட்டையை கொத்தாக பற்றி,
“நீ ரொமான்ஸ் வயலின் மீட்டும் நேரம் வரும், அப்போ உன் திறமையால் என்னை திணற வை! இப்போ கொஞ்சம் அடக்கி வாசி!” என மிரட்டலாக சொன்னாள்.
“இவ்ளோ ஒட்டிக்கிட்டு மிரட்டினா அடக்கியெல்லாம் வாசிக்க முடியாதும்மா” என்றான் அவளை கிறக்கமாக பார்த்து.
“ஷரா செல்லம்! முகம் ரொம்ப களைச்சு இருக்குப்பா. நீங்க தூங்கி எழுந்துக்கோங்க. நான் லஞ்சுக்கு இங்கே குக் பண்ணட்டுமா?” என அவள் அக்கறையுடன் கேட்கவும்,
“ம்ஹூம் நான் சாப்பிட மாட்டேன் விஹா! பிளைட்டுல தொடர்ந்து டிராவல். வயிறு அப்செட். நீ டைம் வேஸ்ட் பண்ணாதே! நான் தூங்கணும் தான். அதுக்கு முன் உன்னை டிராப் பண்ணிடுறேன்” என அவனும் குறும்பினை விட்டு அக்கறையுடன் சொன்னான்.
“நான் ஆட்டோவில் போய்க்கிறேன். நீங்க..” என அவள் தொடங்க, அவன் மறுத்து,
“வா! உன் பேரன்ட்ஸ் எங்க பொண்ணை என்னடா பண்ண கூட்டிப்போனேன்னு? கேட்க முதல், இந்தாங்க உங்க பொண்ணு! நான் எதுவும் பண்ணல.. பண்ணா உங்க பொண்ணு என் உயிரை எடுத்துடுவான்னு சொல்லி ஒப்படைக்கணும்” அவன் விளையாட்டாக சொன்னது சஸ்விஹாவுக்கு சுடவும்,
“ஷரா! கண்ணியமான காதல் செத்து போயிடுத்து. கண்ராவியான காதல் தான் கண்ணுல படுது. என முகம் சுழித்தவள் நான். நானே எப்படி? கல்யாணத்துக்கு முன்.. உங்க கூட..” என இடை நிறுத்தி, முகம் மாற அவனைப்பார்த்தாள். அவன் மெல்ல இதழ் விரித்து,
“என்னோட காதல் கண்ராவியான காதல்ன்னு சொல்றியா?” அவன் கேட்டவாறே வண்டியை நோக்கி போகவும், அவள் எட்டி, அவன் கரம் பற்றி, நிறுத்த, அவன் திரும்பியவன் அதிர்ந்தான். சஸ்விஹாவின் விழிகள் நிறைத்த நீர் பார்த்து.
“ஹேய் பேபி” என அவளை இழுத்து தன் மார்பில் போட்டவன்,
“உன்னை நான் சீண்டாமல், வேறு ஒருவன் வந்து சீண்டுறதுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுக்கவா?” என கேட்கவும், அவள் அவன் நெஞ்சில் குத்தி, விம்மியவாறு,
“இன்னொரு தடவை உன்னோட காதல் கண்ராவின்னு பேசு! பேசுற வாய்க்கு..” என அவள் தலை நிமிர்த்தி முறைக்க,
“என்ன ரெண்டு அடியா? இல்லைன்னா நாலு முழ டேப்பா?”
“ம்ஹூம்” என்றுவிட்டு அவன் முகம் இழுத்து, இதழ் மூடினாள். அவன் திகைத்து, பின் அனுபவித்தான். அவள் அவனை விட்டு, வேகமாக விலகி, முன்னே நடந்து வந்து காரில் ஏறினாள்.
“அடடா இப்படி ஒரு பனிஷ்மென்ட் தருவீங்கன்னு தெரியாம போச்சே. நான் நாலாயிரம் தடவை கண்ராவி.. கண்ராவி காதல்ன்னு கூவிக் கூவியே சிவக்க வைச்சு இருப்பேனே” அவன் உதட்டின் மீது விரல் வைத்து பரவசத்துடன் சொல்லியவாறு வண்டியை எடுத்தான். அவள் முறைத்தவள்,
“ஷரா கல்யாணம் பண்ணதும் நேராக இங்கே வந்து தானே விளக்கு ஏத்தப்போறேன். அத்தை எதுக்கு இன்னிக்கு செய்ய சொன்னாங்க?” என அவள் அதுவரை மனதுக்குள் இருந்த கேள்வியை கேட்கவும், அவன் மெல்ல புன்னகைத்து,
“அம்மா வந்ததும் தாலி கட்டுறது. கட்டிய கையோடு பாரிஸ் பிளைட்டுல ஏறுறது. பாரிசில் லேண்டாகுறது. அப்புறம் தான் மூச்சு நிம்மதியாக விடுறதுன்னு. மெசேஜ் போட்டு இருக்காங்களே. நீ அதை படிக்கலையா?” என கேட்டதும், அவளோ அதிர்ந்து, பின் முகம் மாற, கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு, அமைதியாகிப்போனாள்.
அவனின் தாயின் பயம் அறியாதவள் அல்ல. ஆனால் அவள் என்ன திட்டம் வைத்திருந்தாள்? அதை அவனிடம் பேசவும், அடுத்த கட்டத்துக்கு போகவும் சந்தர்ப்பம் வாய்க்காது போய்விடும் போலிருக்க, அதுவரை அவனுடன் இருந்த பரவச உணர்வுகள், காதல், எல்லாம் கலக்கத்துக்குள் வீழ்ந்தது. வேண்டும் என்றால் நாங்கள் உன்னை உன் விதிக்குள் விழுத்திவிட்டு விலகி விடவா? என கேட்டு நக்கல் செய்தது. தீடிரென அவள் அமைதியானதை புரியாது பார்த்தவன்,
“ஹேய் பேபி என்ன அமைதிக்கு விருது வாங்கும் எண்ணமா?” வலது கரத்தால் அவளது தலையை வருடி கேட்டான். அவள் எதுவும் சொல்லாது அமைதியாகவே இருக்கவும், அவன் கொஞ்சம் குழம்பி,
“விஹா என்ன மனசுல வைச்சுக்கிட்டு இப்படி சைலண்டா யோசிச்சுகிட்டு இருக்கே? இனியும் உனக்குள் வைச்சுக்கிட்டு, பிரஷரை ஏத்துற இந்த கெட்ட பழக்கம் வேண்டாம். அது உன்னை மட்டுமில்லை, என்னையும் பாதிக்கும்” என அவன் குரல் மாற்றத்துடன் சொல்லவும், அவளோ இயலாமை, அவனை இழக்க முடியாத கொடுமை, ஒன்று சேர,
“கடவுளே! ஏன்தான் உங்களை காதலிச்சு தொலைச்சேனோன்னு இருக்கு.” என்றாள் விழிகளில் மீறிய நீரை அடக்கி. அவனோ அதிர்ந்து, திகைத்து பின்,
“எனக்கும் தான் இருக்கு உன்னை இப்படி பேசவிட்டு பார்த்துகிட்டு ஏன்தான் இருக்கேனோன்னு” என்றான் அவன் செல்லமாக முறைத்தவண்ணம்.
“…”
“ஏம்மா என்னால் உனக்கு என்றும் பிரஷர் வராது. என்னைப்பத்தி தெரிஞ்சு இருந்தும் எப்படி உன்னால் பேச முடியுது?” என அவன் குரலில் ஏகத்துக்கும் வருத்தம் இளையோடவும், சஸ்விஹா பேச முடியாது, அவனை பார்த்து பெருமூச்சினை விட்டவள்,
“சாரிங்க நான் கொஞ்சம் பேசணும். ஆனா நீங்க முதல் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க” எனவும்,
வீடு வந்து விட்டிருந்தது. அவன் தலையாட்டி, “எதுவா இருந்தாலும் ஓப்பனா என்கிட்டே பேசும்மா! ப்ளீஸ்” என கெஞ்சிவிட்டு இறங்க கதவை திறக்கவும், அவளோ எட்டி அவனது கரத்துக்குள் தன் கரம் வைத்து,
“உன் குணத்தால் தான் சாகுறேன்” என குரல் உடைய சொல்லிவிட்டு, அவனது கரத்தை தன் இதழில் வைத்து, முத்தம் ஒன்றை வழங்கிவிட்டே இறங்கினாள்.
வாசலில் பெரியவர்கள் பிரசாதத்தோடு காத்து நின்றார்கள். இருவரையும் ஜோடியாக பார்த்தவர்கள், கண்கள் பனிக்க, பிரசாதத்தை நீட்டவும், அக்ஷ்ரனும் மறுக்காது எடுத்து வாயில் போட்டவன்,
“சாரி மாமா! உங்ககிட்டே சொல்லாம விஹாவை என்னோட வீட்டுக்கு அழைச்சுட்டு போயிட்டேன். அம்மா கேட்டாங்க. விஹா கையால் விளக்கை ஏற்றிவிட்டு தான், அடுத்த வேலை பார்க்கணும்ன்னு” என அவன் சொல்லி, மன்னிப்பு கோரவும், சஸ்விஹாவும் அவன் தவறு செய்தவன் போல பேசுவதை விரும்பாதவளாக,
“ஷரா என்னோட பேரன்ட்ஸ் உங்களை எதுவும் சொல்ல மாட்டாங்க. நீங்க சும்மா இருங்க” என அவனை உரிமையாக அதட்டிவிட்டு, பெற்றவர்களிடம் திரும்பி, பிரசாதத்தை எடுத்து தன் வாயிலும் வைத்தாள்.
அவனும் அடுத்து என்ன செய்யவேண்டும் என சிறிது பேசிவிட்டு கிளம்பவும், சஸ்விஹா பின்னால் வந்து அவனை வழியனுப்ப மனதில்லாது, வழி அனுப்பவும், அவன் புரிந்து கொண்டவன்,
“உன்னோட மொபைலை தாம்மா!” என கேட்கவும், அவள் புரியாது நீட்டினாள்.
“பாஸ்வேர்ட்!” என அவன் அவளிடம் நீட்ட, அவளோ அன்று ஒருநாள் அவனிடம் தான் கேட்ட வார்த்தை. ஆனால் இன்று வேறு வித தொனியில் அவளிடம் அவன். புன்னகை மலர, அவனிடம் தனது பாஸ்வேர்டை சொன்னாள்.
“இந்த ஆப்ஸ் என்னோட வீட்டு கேமரா அலாரத்தோடது. இதோ இந்த பட்டனை பாரு! இதை அழுத்தினா நீ என்னை பார்த்துகிட்டு இருக்கலாம். இது அழுத்தினா என்னை எழுப்பியே விடலாம்.” என சொல்லி அதை பாவிக்கும் முறையையும் சொல்லிக்கொடுத்தான்.
விநாயகமூர்த்தி தம் மகளை பார்த்து, “இப்படி அவரை பிரிய யோசிக்குறவ.. எப்படிம்மா?” என தொடங்கவும், அவள் தந்தை எதை சொல்ல வருகிறார் அதுவும் அக்ஷ்ரன் முன் எனப்புரியவும் பதறியவள்,
“அப்பா ப்ளீஸ்” என அவள் தந்தையைப்பார்த்து கண்களால் கெஞ்சவும், அவரும் மெல்ல புன்னகைத்து,
“நல்ல பொண்ணும்மா” என்றவர்,
“மாப்பிள நீங்க கிளம்புங்க” என அவனை வழியனுப்ப, அவன் தலையசைத்து விட்டு காரில் ஏறியவன், சஸ்விஹாவுக்கு மட்டும் கேட்கும் வண்ணம்,
“உனக்கு போரடிச்சா.. என் கூட ரொமான்ஸ் பண்ணணும்ன்னா.. என்னை அலரத்தால் அலறியடிச்சு எழுப்பு!” என அவன் கிசுகிசுத்துவிட்டு அவளை சிவக்க வைத்துவிட்டே போனான். அடுத்தடுத்த மணித்தியாலங்களில் அது தான் நடக்கப்போகிறது என அறியாதவனாக.
அவளோ சிவந்த முகத்தை சிரமப்பட்டு மறைக்க, தலை குனிந்தவாறே, ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் நுழைந்தாள். பெரியவர்கள் பின்னால் சிரித்துக்கொண்டார்கள்.
122
சஸ்விஹா முகத்தினை நீர் கொண்டு அடித்து கழுவியவள், மெல்லிய பாடல் ஒன்றை முணுமுணுமுத்தவாறு வித்யாவுக்கு மெசேஜ் போட்டாள்.
“எப்போ வேலை முடியுது?” என. அவள்,
“உன்கூட லூட்டியடிக்க எடுத்த லீவு எல்லாம் செய்து கொடுத்தே ஆகணும்ன்னு ஆர்டர்” என முறைக்கும் ஸ்டிக்கரை போடவும், அவளும் அக்ஷ்ரன் வந்ததும், தான் அவன் கூட போனதையும், ஒலிப்பதிவில் சுருக்கமாக பதிவு செய்து அனுப்பிவிட்டு, மதிய சமையலுக்கு அன்னைக்கு ஒத்தாசை செய்ய சமையலறைக்குள் விரைந்தாள்.
மனமோ அக்ஷ்ரனிடமே. அவன் காட்டிக்கொடுத்தது போல அந்த ஆப்ஸில் பார்த்தாள். அவன் காலுக்கு இரண்டு, கைகளுக்கு, இரண்டு, தலைக்கு ஒன்று, என தலைகாணியை கட்டிக்கொண்டு அசந்து தூங்கிக்கொண்டிருந்தான்.
‘அடப்பாவி நீ தூங்குற அழகை பார்த்தாலே.. எனக்குள்ளே என்னவெல்லலாமோ நிகழுதே! இதுக்குத்தான் இந்த ஆப்ஸை என்னோட மொபைலில் டவுன்லோட் பண்ணிட்டு போனியா? போடா!’ என மனதுக்குள் பேசியவள், அதை நிறுத்தப்போனவள் மனசு கேட்காது, மறுபடியும் அதையே பார்க்க சொல்ல, அவளால் தாய்க்கு ஒத்தாசை செய்ய முடியாது போனது. மகளை கவனித்த வைதேகி,
“இந்த தவிப்பு தவிக்குறவளுக்கு, அந்த பிளான் எப்படி போட மனசு வந்திச்சோ?” என அவர் ராகம் பாடியவாறு தக்காளியை கீறினார். அவளோ நெற்றியில் தட்டிவிட்டு,
“அம்மா! பிளானில் மாற்றம் இல்லை” என சொல்ல, வைதேகி ஏதோ சொல்ல வாயெடுக்க, விநாயகமூர்த்தியின் கோபக்குரல் வெளியே கேட்கவும், இருவரும் சமையலறையை விட்டு வெளியே வந்தவர்கள் அதிர்ந்தார்கள்.
சத்தியன் விநாயகமூர்த்தியின் சட்டையைப்பிடித்து உறுமிக்கொண்டு இருந்தான். சஸ்விஹா பாய்ந்து வந்து,
“டேய் விடுடா!” என அவனிடம் இருந்து தந்தையை இழுத்தவள், அவரது நெஞ்சை நீவிவிட்டு, அவனிடம்,
“என்னடா மறுபடியும் முருங்கை மரம் ஏறப்போறியா? போடா வெளியே!” என சீறினாள்.
“வாடி! என் அரைப் பொண்டாட்டி! ஏறத்தான் போறேன். மரத்து மேல இல்ல.. உன் மேல..” என அவன் சொல்ல, விநாயகமூர்த்தி கோபம் ஏற அடிக்க, வரவும் சஸ்விஹா அவரை தடுத்து,
“இந்தப்பக்கமே நீ தலை வைத்து நடமாட தடையாச்சே.. அப்புறம் யார் கண்ணுல மண்ணை தூவிவிட்டு வந்து இருக்கே?” என அவள் சினத்துடன் வினாவவும்,
அவனோ அவளை அந்த நொடியே துகிலுரிப்பவன் போல, பார்வையால் அவளை மானபங்கப்படுத்த, அதுவரை அக்ஷ்ரனின் பார்வையில், அவனது தீண்டலில், திளைத்து இருந்த மனதும், உடலும், இவனது பார்வையை சகிக்க முடியாது தாமாகவே குறுக்கிக்கொண்டதுமில்லாது, இவன் கூட என்ன பேச்சு என்பது போல,
“இதப்பாரு உன்கிட்டே மனுஷன் பேசுவானா? போயிடு! பிரச்சனை பண்ணா அப்புறம் அனுபவிக்க போறது நீதான்!” என்றுவிட்டு அவள் உள்ளே நுழையவும், அவனோ மூர்க்கத்துக்கே அவதாரம் எடுத்தவன், சாத்தான் மீது சவாரி செய்து, அவள் வீடு தேடி வந்திருந்தவன்,
“அடியேய் நீ அவன் இருக்குற தைரியத்துல தான் இந்த துள்ளு துள்ளுறே? அவனோட சோலி முடிஞ்சுது” என அவன் ஊளையிடவும், பெரியவர்கள் அதிர, சஸ்விஹா பலத்த அதிர்வுடன், சட்டென்று எட்டி அவனது சட்டையை கொத்தாக பற்றியவள்,
“என்னடா உளறுறே?” என அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“அவனுக்கு சங்கு! உனக்கு சடங்கு’ அதுவும் என் கூட.. இப்போ.. இங்கேயே..” என அவன் கொக்கரிக்கவும், அவள்,
“நோ!” என அலறியவாறு, பதட்டமாக தனது மொபைலை எடுத்து அக்ஷ்ரனை பார்த்தாள்.
அவன் அதே மெத்தையில் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தான். இவளுக்கு மயக்கம் வரும் போல இருக்கவே தள்ளாடியவாறு, பதை, பதைக்கும் நெஞ்சோடு, அவசரமாக ஜூம் செய்து, அவனது முகத்துக்கு, நெஞ்சுக்கூட்டுக்கு, இடது வலதாக விரல்கள் அசைத்து, உற்று உற்றுப் பார்த்தாள். படபடக்கும் தனது இதயத்தை அடக்கி, கலங்கி தன்னவனின் இதயம் துடிக்குதா? என பார்க்க விடாது தடுக்கும் விழிகளை உதடு துடிக்க, அழுந்தி, அவசரமாக துடைத்தெறிந்து, இமை வெட்டி, வெட்டி, அவனை உற்றுக்கவனித்தாள்.
அவனது இதயத்தின் அசைவு வரவும், தனக்கானவளின் துடிப்பினை அவன் கனவில் உணர்ந்தானோ? என்னவோ? புரண்டு படுக்கவும், அவளுக்கு நெஞ்சுக்கூடு நிம்மதியான சுவாசத்தை இதயத்துக்குள் அனுப்பியது. கலக்கத்துடன் இருந்த பெற்றவர்களுக்கும் பார்க்க கொடுத்துவிட்டு, தம்மை சித்திரவதை செய்வதில் சுகம் காணும் அந்த மூர்க்கனிடம்,
“டேய்! இனியும் ஒரு நிமிஷம் இங்கே நின்னே.. உன்னை அள்ளிட்டு போக டிஎஸ்பி சரவணன் வரவேண்டி இருக்கும்” என அவள் மிரட்ட,
“அடங்குடி!” என அவன் அவளை அடக்கிவிட்டு, அப்படியே அவளை தூக்கி கொண்டு விட, அவளோ மேலும் அதிர்ந்து, அவனிடம் இருந்து திமிறினாள்.
பெரியவர்கள் அவனை அடிக்கவும், ஆளுக்கு ஒரு அறை கொடுத்து, வீழ்த்தியவன், மிருகமே பார்த்து மிரண்டுவிடும் மிருகமாக மாறி நின்றான். சஸ்விஹா அவனிடம் இருந்து திமிறி இறங்கி, கையில் கிடைத்ததை எடுத்து அடிக்க முனைந்தாள். அவனோ அவளது புடவையின் முந்தானையில் ஒரு பிடி, பிடித்து இழுக்க, அவள் ஒரு கையால் அதை பற்றியவாறு, மறு கையால் பதட்டம், அதிகரித்தாலும், அதை அடக்கிக் கொண்டு அக்ஷ்ரனுக்கு ஆப்ஸில் அலாரம் அடிக்க வைத்தாள்.
பார்த்த சத்யன் எட்டி காலால் ஓர் உதை கொடுக்கவும், அவளின் கையினை பதம் பார்த்துக்கொண்டு விழுந்தது மொபைல். ஓங்கி நாலு அறை அவளின் கன்னத்தில் கொடுத்தவன்,
“காலம் முழுக்க நான் காத்திட்டு இருக்க. நேத்து வந்தவனுக்கு முந்தானையை விரிப்பியோ? வாடி! முதல்லே எனக்கு விரி! இல்லையா விரிக்க வைக்கிறேன். அப்புறம் அவன் கூட போ!” என வெறியுடன் சொன்னான்.
அவனை அடிக்க எழுந்த விநாயகமூர்த்தியின் முகத்தில் ஒரு அறை அறைந்து, அவரை மேலும் பலவீனமாக்க, ஏற்கனவே இதய ஆபரேஷன் செய்தவர், உடல் ஆடுவேன் என அச்சுறுத்தியது. விழுந்து விடாமல் ஓடி வந்த மனைவியை பிடித்துக்கொண்டு,
“அலோ போலீசு ஸ்டேஷனா?” என தனது மொபைலில் கேட்க, அதை அவன் பறித்த வேகத்தில், சிதறு தேங்காய் போல உடைத்தெறிந்தான். வீட்டு போனையும் தூக்கி சுவற்றில் வீசினான். வைதேகி அவனது காலைக்கட்டிக்கொண்டு,
“என் பொண்ணை ஒண்ணும் பண்ணிடாதேப்பா! உனக்கு புண்ணியமாக போகும்” என அவர் கதறவும், பெற்ற தாயையே அடிக்க முனைந்தவனுக்கு, மற்றைய பெண்கள் எல்லாம் எம்மாத்திரம்? அவரை காலால் உதறினான்.
இதற்கிடையில் கீழே கிடந்த தனது மொபைலை, புடவையின் மடிப்புக்குள் மறைத்து, தொடர்ந்து அக்ஷ்ரனுக்கு அலாரம் அடிக்க வைத்துக்கொண்டிருந்தாள் சஸ்விஹா. அவளை இழுத்து வந்து அறைக்குள்ளே தள்ளி தாழிட்டான். வைதேகி ஓடி வந்து ஜன்னலில் நின்று கத்தினார்.
“வேண்டாம்பா! அவளை வாழ விடு! என் பொண்ணை எதுவும் பண்ணிடாதே! உன்கிட்டே கடமைப்பட்டதுக்கு மேலாக அவ செய்துட்டாளேப்பா. இனியாவது அவளை சுதந்திரமாக மூச்சு விட விடுப்பா! உன் காலில விழுறேன்.. விட்டுடுப்பா.. என் பொண்ணை சிதைச்சு.. எங்களை புதைச்சுடாதே” என அவர் மன்றாடி அலறவும், அவன் காதில் வாங்காது ஜன்னலை மூடிவிட, சஸ்விஹா தனது கற்பை காப்பற்ற முடியாது போகும்பட்சத்தில் அவனை கொலை செய்துவிடும் முடிவுக்கே வந்து இருந்தவள், கையில் இருந்த மொபைலை பார்த்தாள்.
அலாரத்தின் சத்தத்தால் அக்ஷ்ரன் அசைவது தெரிந்தது.
123
“ஷரா!!!” என அடிவயிற்றிலிருந்து கத்தினாள். அவன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தவன், தனது மொபைலை எடுத்து, கண்களை கசக்கி பார்த்தான். சஸ்விஹாவின் முகம் வரும் என பார்க்க வந்து நின்றதோ சத்யனின் முகம்.
“ஏய்!” என இவன் துள்ளி எழுந்தான்.
“வாடா பாரிஸ் ***!” என அவன் கெட்ட வார்த்தையை துப்பவும், அக்ஷ்ரன் விபரீதத்தை சட்டென்று உணர்ந்து, அவன் கூட முட்டிக்கொள்ளாது அமைதியாக வெளியேறினான்.
“இவ என்னோட பொண்டாட்டிடா! முதலே நான் அனுபவிச்சுட்டு விடுறேன். அப்புறம் வந்து நீ **** கோ!” என அவன் சொல்ல, அக்ஷ்ரன் முகம் சூடாகவும், பற்களை கடித்தவாறு, வண்டிக்கு அருகே எட்டு வைத்து வந்தான். சஸ்விஹா எங்கே என தேடிய அவனது விழிகளில் தெரிந்த பதட்டமும், பயமும், மற்றவனுக்கு அப்பட்டமாக தெரியவும்,
“நீ யாரைத் தேடுறியோ நான் அவளுக்கு மேல தான் படுத்து இருக்கேன். லைவ் வா உனக்கு ஷோ காட்டணும் தான் ஆசை… ஆனா பாரு நான் பிஸியாகணும்..” என அவன் சொல்ல அக்ஷ்ரன் பொறுமை ஓடியே போனது.
“டேய்! எனக்குள்ளே இருக்குறவனை வெளியே கொண்டு வராதே! தாங்கமாட்டே! விஹா.. விஹா.. எங்கே இருக்கே?” என அவன் குரல் கேட்கவும், சத்தியனின் ஒரு கரத்தால் குரல் வளை நெரிக்கப்பட்டு மூச்சு திணறிக்கொண்டு இருந்தவள், காலால் அவனது முக்கிய பகுதிக்கு அடிக்க, அவன் கரம் விடவும், அவள் மொபைலை பறித்து,
“ஷரா இவன் காலை சுத்துற பாம்பு! என்னை தீண்டாமல் விடாது! நானும் கொலைகாரியாகாமல் உங்க கூட வாழணும்ன்னு ஆசைப்படுறேன். ஆனா… ஆனா..” என அவள் குமுறலுடன் சொல்லிக்கொண்டிருக்கவே, அவன் வண்டியை கிளப்பி விட்டிருந்தவன்,
“சாரிம்மா.. நான்… நான் உன்னை என் கூட வைச்சு இருந்திருக்கணும்..” கலங்காதவனுக்கு கண்கள் கலங்குவேன் என முண்டியடித்தது.
“இதப்பாரு ஒண்ணும் அவசரப்பட்டு செஞ்சுடாதே! எனக்கு நீ வேணும்!! நாம வாழணும்! listen to me அவன் மிருகம்! நீ அவனை கொன்று என்னை பைத்தியக்காரனாக்கிடாதே!”அக்ஷ்ரன் வண்டியை வேகமாக செலுத்தியவாறு பதட்டத்தை மறைத்து பக்குவமாக பேசினான்.
“அய்யோ! அப்போ அவனுக்கு என்னை பலியாக சொல்றீங்களா? நான் செத்துடுவேன்” அவள் தலையில் அடித்து கதறவும், சத்தியன்,
“ஹா ஹா” என கெக்கலித்தவாறு நெருங்கினான். அக்ஷ்ரன் கண்கள் கலங்க, மறுப்பாக தலையாட்டி,
“நோ! நோ! சஸ்விஹா..ஆ..ஆ..” என அலறியவன்,
“இன்னொரு தடவை உயிரில்லாத உடலை என் கையால் வாங்க முடியாது.. என்னை பைத்தியம் ஆக்கிடாதே! நான் வந்துடுறேன்.. பாரு! நீ போராடு! நான் வந்துடுறேன்! போலீசுக்கு தகவல் கொடுத்துட்டேன். சரவணனும் வந்துடுவான்..” என பட படவென சொல்லி, அவளுக்கு தைரியம் கொடுத்தவாறு, காரின் நேவிகேட்டரில் Avoid traffic road என்பதை அழுத்திவிட்டு ஆக்சிலேட்டரை மிதித்தான்.
சஸ்விஹாவை குஷியாக பார்த்து நடனம் ஆடியவாறே மொபைலை பறித்த சத்தியன்,
“அடேய் நீ அவசரமாக வந்தாலும் சரி, ஆடி அசைஞ்சு வந்தாலும் சரி, அவளை நான் அனுபவிச்சதுக்கு அப்புறம் தான் உன்கிட்டே அனுப்புவேன். அப்புறம் நீ என்ன வேணா பண்ணிக்கோ! எனக்கு கவலையில்ல” என்றுவிட்டு அவளின் மொபைலை ஓங்கி அடித்து சுக்கு நூறாக்கினான்.
“அக்ஷ்ராஆஆ!! வாடா வெளியே!!” என அக்ஷ்ரன் தனக்குள் சமாதி கட்டி வைத்த இன்னொருவனை கத்தியே வெளியே இழுத்துப்போட்டான். முற்றிலும் வேறு பரிமாணம் எடுத்த அக்ஷ்ரனால் சத்தியன் அலறப்போவதோ? சஸ்விஹா முதல் முறையாக கண்டு துடிக்கப்போவதோ? இருவரும் அறிந்திருக்கவில்லை.
சஸ்விஹா ´கடவுளே நீ என்னை சோதிச்சு முடிக்கலையா? இன்னும் என்னதான் வைச்சு இருக்கே?´ என மனதுக்குள் கேட்டாள். அவளுக்கு அக்ஷ்ரனின் வார்த்தைகள் தலைக்குள் எதிரொலிக்க,
‘நீ சொன்னது போல உன்னை பைத்தியமாக்க நான் துணியவேமாட்டேன். அதே நேரம் இதோ இந்த அரக்கனிடமும் என்னை இழக்கவும் மாட்டேன். என்ன செய்யலாம்?’ என அந்த சூழ் நிலையில் அவசரமாக அவள் மூளைக்கு வேலை கொடுத்தாள். சத்யன் எல்லா ஜன்னலையும் சாத்திவிட்டு ,
“என்னடி நீயா படுக்குறியா? இல்லை நான் படுக்க வைக்கட்டுமா?” என கேட்டு அவளருகே வரவும் அவளோ அசையாது, அவனைப் பார்த்து,
“சத்தியா ! சின்ன வயசுலேருந்து உங்க கூடவே வளர்ந்தவ, உங்க மாமன் பொண்ணு, உங்களுக்கே மனைவியாகுற அளவுக்கு கடவுள் கொண்டு வந்து விட்டானே. அதை நீங்க சரியாக தக்க வைச்சுக் கொண்டிருந்தால்.. இப்படி எதிரும், புதிருமாக, நீங்களும் நின்று இருக்கத்தேவையில்லை. நானும் உங்க ஆசைக்கு இசையை மறுத்திருக்க போறதுமில்லை” என அவள் அமைதியாக அக்ஷ்ரனோ, போலீசோ, வரும் வரை அக்ஷ்ரன் போலவே, அவனது பாணியிலியே, பேச்சுக்கொடுத்து, நேரத்தை கடத்த முயற்சித்தாள்.
அவள் கேட்டதும் அவனும், சீற்றத்துடன், “ஆமாண்டி இந்த நிலை வந்திருக்காது தான். ஆனா என்ன பண்ண? உன்னோட விதியோ? என்னோட போதாத காலமோ, இப்படி கொண்டு வந்து நிக்குது” என அவன் சொல்லிவிட்டு, மேல் சட்டையை கழட்டவும், அவளுக்குள் உதறல் எடுக்காமல் இல்லை.
சீண்டும் நோக்கில் அக்ஷ்ரன் கிறக்கமாக கேட்டபோதே அவனிடம் மிரட்ட தெரிந்தவளுக்கு, எதிரே இருக்கும் மிருகத்தை எப்படி அடக்குவது? எனத் தெரியவில்லை. வெறி கொண்ட மிருகத்தின் கண்களில் தெரிந்த போதையும், அதன் ஆக்ரோஷமும் பார்த்தாள்.
அவனோ, “நீ எது சொன்னாலும் என் காதுல ஏறாது. என் ஆசைக்கு அடங்குவதே உனக்கு நான் தரும் தண்டனை” என சொன்னான்..
“சத்தியா நீங்க தண்டபாணி மாமாவுக்கு பிறந்த மகன் இல்லையா? ஏன் இப்படி? என் மேல இந்த வெறி? என்னோட அழகு தானே? இந்த உடம்பு தானே? இதை நான் இப்பவே நெருப்பில் சுட்டு, எந்த பாகங்கள் உங்களுக்கு போதையை தூண்டுதோ.. அத்தனையையும் நான் உங்க கண் முன்னாடி சுட்டு, பொசுக்கி, கருகி காய வைக்கிறேன். அதுக்கு அப்புறம் என்னை தொட நினைப்பீங்களா?” என அவள் அதே அமைதியாக கேட்கவும், சுவற்றில் சாய்ந்து கொண்டு அவள் நின்று கேட்ட தோரணை, செய்தாலும் செய்துவிடுவாள் போலிருந்தது. அவனுக்கு பயம் எட்டிப்பார்க்காமல் இல்லை. அவன் கொஞ்சம் தடுமாறியது தெரிந்தது.
வெளியே இருந்த பெரியவர்களுக்கு மகளின் பேச்சும், அவனது பேச்சும், கேட்க அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அழைத்து கதவை உடைக்க எழவே தெம்பில்லாமல் இருந்தார்கள். பின் அவள் கொஞ்சம் தைரியத்துடன் அடுத்த அம்பை எய்தாள். அது நன்றாகவே வேலையைக் காட்டியது.
“ஆமா நான் ஏற்கனவே அக்ஷ்ரனிடம் என்னை இழந்தவள். அப்படிப்பட்டவள் ஒண்ணும் கன்னி கழியாதவள் இல்லையே. அப்புறம் எப்படி நான்தான் முதல் அனுபவிக்கணும்! அப்புறம் நீ வைச்சுக்கோன்னு! அக்ஷ்ரன்கிட்டே சொன்னீங்க?” என அவள் வரவழைத்த கிண்டலுடன் கேட்கவும், அவன் முகம் மாற,
“ஏய் என்னடி கதை விடுறே? அவன்கிட்டே நீ.. நீ எப்போடி?” என அவளை உலுக்கவும், அவளுக்கு,
´ஆஹா.. ஷரா! நான் விட்ட அம்பு வேலை செய்ய ஆரம்பிக்குது.. சீக்கிரமாக வந்து சேரு’ என அவள் மானசீகமாக அவனிடம் பேசிவிட்டு,
“இன்னிக்கு காலையில் தான்.. அதுவும் இதே அறையில்” என்றாள் வேண்டுமென்றே அந்த மெத்தையை வருடி, அவ்வளவு தான் சத்தியன் மூர்க்கத்தின் உச்சிக்கு சென்று,
“நாயே! என்கிட்டே இருந்து தப்பிக்க பொய் சொல்லாதே!” என சீறவும், அவளோ அக்ஷ்ரனை ஆள்பவளாச்சே, அவனது அசராத ஆளுமை அவளிடம் இடம் மாற, சிறிதும் அசராது, இல்லாத நகத்தின் அழுக்கை ஊதியவாறு,
“சந்தேகம்ன்னா உங்க கிளினிக்.. அதே டாக்டர் தான்.. அவங்களை இங்கே வரவழைச்சு.. செக்கப் செஞ்சுக்கோங்க!” என்றாள் கூந்தலின் நுனியால் தன் முகம் வருடி, அக்ஷ்ரனே வருடுவது போல சிலிர்த்து.
இதுக்கு பின்பும் அவன் நம்பாது போவானா? தான் தான் அவளை முதலில் அடைய வேண்டும். அவளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என கர்ஜிப்பவன்.
“அவன் முந்திட்டானா? அவனுக்கு முந்தானையை எப்படிடி விரிக்கலாம் நீ! உன்னை” என அவளது கன்னத்தில் அறைந்து, அறைந்து, கேட்டு, உலுக்கவும், அவளுக்கு அந்த அறைகளே போதும். அவன் தன்னை தீண்டப்போவதில்லை. என புரிய நிம்மதியானது.
“எச்சில் பண்ண குப்பையாடி நீ? அப்போ நீ ஏற்கனவே *** பார்த்துட்டியா? என்னது உனக்கு இளக்காரமா?” என தகாத வார்த்தைகளால் கேட்டு அவளை துவைக்கவும், அவள் தடுக்கத் தோன்றாது,
´நீ அடி ராசா! நான் என் பெண்மையை காப்பாற்றும் போராட்டத்தில், என் அக்ஷ்ரனை பைத்தியமாக்கி விடாதநிலைக்கு தள்ளப்பட்டு இருக்கேன். அதனால நீ நல்லா அடி! உனக்கு மாமன் மகளாக பிறந்ததுக்கு எனக்கு வேணும்! உன்கிட்டே கடமைப்பட்டு நான் கண்டறியாத படிப்பு படிச்சதுக்கு வேணும்! வாய் இருந்தும், அறிவு இருந்தும், முட்டாள்தனமாக உன் கூட நிச்சயதார்த்தம் வரை போனதுக்கு வேணும்! அடி!’ என தனக்குள் சொல்லிக்கொண்டு மரம் போல நிற்க, அவன் அடித்து களைத்து பின் அவளது கழுத்தில் கை வைக்க, கதவை ஓங்கி உதைத்து வந்து நின்றார்கள் சரவணனும், அக்ஷ்ரனும்.
124
சத்தியன் வெறியுடன் திரும்பவும், சஸ்விஹா கழுத்தை பிடித்துக்கொண்டு குனிந்து இரும, அக்ஷ்ரன் எட்டு வைத்து வந்து, அவளை இழுத்து தனது நெஞ்சுக்கூட்டுக்குள் பதுக்கியவன், பின் அவளது முகத்தையும், கழுத்தையும் தடவி,
“பேபி ஒண்ணுமில்லை.. ஒண்ணுமில்லை.. நான் வந்துட்டேன்லே.. ரிலாக்ஸ்மா.. ரிலாக்ஸ்!” என சொல்லி அவள் மூச்சு விட்டதும், அவளின் இதழில் ஓர் அழுந்த முத்தமிட்டு, அவனால் அவளுக்கு உயிர் கொடுத்தான். அவளால் தன் உயிரை மீட்டவனாக, வேகமாக சரவணன் கூட அடிதடியில் இருந்த சத்தியனை ஒரே இழுவையில் இழுத்தான். சரவணன் மூச்சு வாங்கிக்கொண்டு வர அவனிடம்,
“சரவணா! எனக்கு அஞ்சு நிமிஷம் தாடா” என பற்களை கடித்து சொல்லிவிட்டு, நண்பன் தலையாட்ட, அவனின் போலீஸ் பெல்ட்டை உருவியவன், சத்தியனை விளாசித் தள்ளவே ஆரம்பித்தான். அதுவும் கண் மண் தெரியாது.
“அடங்க மாட்டியா நீ! அலறி அடிச்சுகிட்டு இந்த அக்ஷ்ரனை வரவழைச்சேல்லே.. அனுபவிடா ! அது என்ன பொண்ணுங்களை பழி வாங்கணும் என்றால் உங்க ஆயுதம் இதுதானா?” என அவன் அவனது அங்கத்தின் மீது பார்வையை வீழ்த்தி, அதில் நாலு அடி அடிக்க, சத்தியன் அலறவும், சரவணன் ஹாலில் பெரியவர்களுடன் நின்று இருக்க, அவர்கள்,
“அவனுக்கு இது போதாது” என சொல்லிக் கொண்டார்கள்.
“காட்டு மிராண்டி மிருகமே! உனக்குள்ளே கொஞ்சமும் மனுஷத் தன்மை இல்லை? யாருகிட்ட உன் வேலையைக்காட்ட பார்த்தே? உன் பொண்டாட்டியா அவ? விருப்பமிலலாதவளுக்கு விலங்கு மாட்டி, விரட்டி விட்டு, அவளுக்கு பின்னாடி உடம்பை வளர்த்த ஆம்பிளை நீ! அவளை டார்ச்சர் செய்யுறதுக்கே அவதாரம் எடுத்திருக்கியா? நான் யாரு தெரியுமா? உன்னைப்போல மிருகத்தை துவைக்குறதுக்கே பிறந்தவன்” என உறுமியவாறு, அவனை போட்டு தாக்கவும், சஸ்விஹா கொஞ்சம் ஆசுவாசமாகி அவசரமாக ஓடி வந்து அக்ஷ்ரனின் தோளைப்பற்றி,
“ஷரா! கூல்! கூலாகுங்க!” என்றாள் அவனின் முகத்தில் தாண்டவமாடிய கோபக்கனலை முதல் முறையாக பார்த்து. அவனோ அவளிடம் திரும்பி,
“விஹா! நீ ஹாலுக்கு போ!” என அவளிடம் உறுமிவிட்டு சத்தியனை கிழிச்சு தொங்கவிடுவதில் தீவிரம் காட்டவும், சஸ்விஹா அவனைப் பார்த்து விழிகள் கலங்க,
“ஷரா வேண்டாம்! நீங்க எந்தக் காலத்திலும் இப்படி மாறிடக்கூடாதுன்னு தான் உங்கம்மா பயந்துகிட்டு இருந்தாங்க. என்னையும் அந்த பயம் பற்றாமல் இல்லை. விட்டுடுங்க.. ப்ளீஸ்..” என அவள் அழுதவாறே அவனை தடுக்கவும், அவன் அமைதியே உருவான அக்ஷ்ரனை தொலைத்தவனாக அவளிடம்,
“விடு என்னை! என் அக்ஷ்யாவை இதே போல பாவி தான்.. ஒருத்தன் இல்லை.. ஒன்பது பேரு.. ஒரு நாள் முழுக்க நரகத்தை காட்டினாங்களே.. அவங்களையே துவைச்சு காய வைச்சவன்.. இவன் எனக்கு எம்மாத்திரம்? அவளை என்னால் காப்பாத்த முடியாம போச்சேன்னு இன்னி வரைக்கும் நான் செத்துக்கிட்டு இருக்கேன்.. இப்போ.. இப்போ.. உன்னை.. உன்னை.. அதுவும் என் தேவதையை.. இவன்.. இவன்..” என அவன் சீறிவிட்டு, கட்டிலின் காலை ஒரே உதையில் உதைத்து, உடைத்து, கையில் எடுக்கவும், சத்தியன் பாதிக்கு மேல் மயக்கமாகிப் போனவன் அலறி, கரம் கூப்பினான்.
சஸ்விஹா அக்ஷ்ரனை நிதானத்துக்கு கொண்டு வரவே முடியாது திணறி, கதி கலங்கிப்போனவள், “சரவணா அண்ணா!” என கத்தினாள். அவனும் திடுக்கிட்டு ஓடி வந்து, அக்ஷ்ரனைப் பிடித்து,
“அக்ஷ்ஸ் வேணாம்டா! கண்ட்ரோல் பண்ணுடா! போதும்டா! ஏற்கனவே அவன் செத்துட்டான்” என அவன் நண்பனை கட்டிப் பிடித்து தடுக்கவும், அக்ஷ்ரன், அக்ஷ்யாவின் நினைவுகளால் கிளறப்பட்டு, அவன் நினைத்தாலும் தன்னை கட்டுப்படுத்த முடியாது போனது. கையில் இருந்த கட்டிலின் காலை போட்டுவிட்டு, தனது கரங்களால் தலையைப் பிடித்தவாறு,
“அக்ஷ்யாஆஆஆஆ..” என வாய்விட்டு கத்தினான். சரவணன் கண்கள் கலங்க, அவனது முகத்தை துடைத்து,
“ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்..” என சொல்ல, அக்ஷ்ரன் குனிந்து தரையில் கரங்களால் குத்தி, குத்தி,
“அக்ஷ்யாஆஆஆஆ” என கதறிக் கொள்ள, அவன் கதறுவதை முதல் முறையாக கண்கூடாக பார்த்த சஸ்விஹா, வாயைப்பொத்தியவாறு, வெடித்த அழுகையை அடக்கினாள். பெரியவர்களோ அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். சத்தியனைப் பார்க்க, பார்க்க அக்ஷ்ரனால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்ந்து கொண்ட சரவணன் சஸ்விஹாவிடம்,
“சிஸ்டர் ப்ளீஸ் அக்ஷ்ராவை பார்த்துக்கோங்க. நான் இவனை லாக்கப்பில் வைச்சு மிச்ச லாடம் கட்டிட்டு வர்றேன்” என நண்பனை அவளிடம் ஒப்படைத்துவிட்டு, சத்தியனை இழுத்துக்கொண்டு ஜீப்பில் ஏற்றினான்.
அக்ஷ்ரன் தலையை பிடித்தவாறே தரையில் சிலையாக அமர்ந்திருந்தான். தலையை தொங்கப்போட்டுக்கொண்டிருந்தவன் நிமிரவே இல்லை. சஸ்விஹா உடைந்து போனாள். அவனை என்றுமே இப்படி பார்த்திராதவள் அல்லவா? அவளும் சட்டென்று மடங்கி, அவன் முன் உட்கார்ந்து அவனது தோளினை தொட்டு,
“ஷரா!” என விம்மலுடன் அழைத்தாள். பெரியவர்கள் அவர்களை தனியாக விட்டு, வெளியே ஹாலில் வந்து அமர்ந்தார்கள். இருவருக்கும் நடந்து முடிந்த போராட்டம் என்றும் மறக்காது போல தோன்றியது.
அக்ஷ்ரனிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை. அவன் அப்படியே தலை குனிந்தவாறு இருக்கவும், அவனது தலையை மெல்ல நிமிர்த்தி பார்த்தாள். அவனும் கண்கள் கலங்கி, சிவந்து போய் பார்த்தான். அவளது முகத்தில் சத்தியனால் ஏற்படுத்தப்பட்ட விரலின் தடயங்கள் அவனுக்கு நெஞ்சு பதற, பற்களை கடித்தவன் முகம் இன்னும் சீற்றத்தினை சுமந்தவாறு இருந்தது.
சஸ்விஹா அப்படியே அவன் மீது சரிந்து, அவன் இதழை தன் இதழ் கொண்டு மூடினாள். தலையில் கைவைத்து இருந்த அவனது கரங்கள் தன்னிச்சையாகவே தன்னவளை அணைக்க, அனலாக எரிந்து கொண்டிருந்த அவனது மனக்கிடங்கு, அவளது தீண்டலால் மெல்ல, மெல்ல அணைய ஆரம்பித்தது.
அவனது இறுக்கம் இளகும் வரை சஸ்விஹா இதழ் பிரிக்காது இருந்தாள். அவனது உடல் இளகி முகம் சாந்த நிலைக்கு திரும்புவதை உணர்ந்து விலக, அதை உறுதிப்படுத்தும் விதமாக அவனே அவளது முகத்தினை கரங்களில் ஏந்தி அவன் அவளை திக்கு முக்காட வைத்தான். அவளுக்குள் பலத்த நிம்மதி உண்டானது.
‘எந்த எரிமலையையும் அணைக்க, ஒரு காதல் மலை போதும்!’ என தனக்குள் சொல்லியவள் அவனிடம் இருந்து பிரிந்து எழுந்து கொண்டு, கரம் நீட்டினாள். அவனையும் எழுந்து கொள்ளுமாறு கேட்டு. அவனும் கேசத்தை கோதியவாறு,
“சாரிம்மா பயந்து இருப்பே. இது உன் அக்ஷ்ரன் தானான்னு” அவன் குற்ற உணர்வுடன் கேட்கவும், அவளோ,
“ஷரா! எதுவும் பேசவேண்டாம். எனக்கு இன்றைய நாள். வாழ்நாளில் மறக்கவே முடியாது. வாங்க” என அவனை பாத்ரூம் அழைத்து வந்து, தனது முகத்தில் நீரையே அடித்து கழுவி, அவனையும் கழுவ வைத்தாள். அக்ஷ்ரன் கழுவியதுமில்லாது, நீரினை எடுத்து தனது கேசத்தில் நனைத்தும் கொண்டான். அவள்,
“ஹேய் சளி கட்டிக்கப்போகுது” என பதறவும், அவனோ,
“என்னோட மனக் கொந்தளிப்புக்கு நீ மருந்து போட்டுட்டே. இது மூளை ஹீட்டானத்துக்கு” என சொல்லிவிட்டு அவன் தொடர்ந்து கேசத்தை நனைக்கவும், அவள் துடைக்க துண்டை நீட்டினாள். அவன் மறுத்து,
“இருக்கட்டுமே.. எனக்கு இப்போதான் உயிர் வந்திருக்கு” என்றவன், அவளது சிவந்து கன்றிய கன்னங்களின் மீது, தன் உதடு வைத்து ஓத்தடம் கொடுக்க, அவளோ நெளிந்தவாறு,
“போதும்! ஹாலில் அம்மா, அப்பா ரொம்ப நேரமா வெயிட்டிங். வாங்க! பாவம் அவங்களுக்கு அதிர்ச்சி இன்னும் போகலை” என சொல்லவும் அவனும்,
“சே! நான் watch பண்ற சரவணன் ஆளை வேண்டாம்ன்னு சொல்லி இருக்க கூடாதும்மா. அவன் இருந்திருந்தா.. இந்த மிருகம் கால் வைச்சு இருக்குமா?” என அவன் மீண்டும் சினம் கொள்ளப் பார்க்க, அவளோ,
“டேய்! எனக்கு சினம் கொள்றவனை சுத்தமா பிடிக்காது. உன் மூஞ்சில இன்னொரு தடவை இந்த சின சிவப்பு பார்த்தேன்” என அவள் மிரட்டவும், அவனோ திகைத்து, பின்,
“என்ன? பார்த்தா நீ சுவீட் டானிக் தருவே! அதுக்காகத்தன்னும் நான் அப்பப்போ சினத்தின் அவதாரம் எடுத்துக்குறேனே” என அவன் குறும்புடன் சொன்னதும், அவளோ அவனது முதுகில் வைத்து,
“எனக்கு உன்னை எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னு தெரியாத போது, சட்டென்று பண்ண வேலை அது. அதை அடிக்கடி எதிர்பார்த்து, சினம் கொண்டு ஏமாந்து விடவேண்டாம்” என்றாள்.
அவனும் தனது ஸ்டைலில் நாடியில் கை வைத்து, யோசிக்க, அதைப்பர்த்தவளுக்கு அதுவரை இருந்த மனநிலை, தான் பட்ட பாடு எல்லாம் மாயமானது போலிருந்தது.
“ஷரா” என எட்டி அவனை கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் முத்தமிட்டவள், பின் விலகி வெளியே ஓடினாள். அவனும் சிரித்து பின் தொடர்ந்தான்.
125
பெரியவர்கள் கவலையுடன் உட்காந்திருக்க, அவனும் அருகே வந்தமர்ந்தவன், விநாயகமூர்த்தியின் கரம் பற்றி,
“மாமா மேரேஜ் நடக்கும் வரை விஹா என்கூட என் வீட்டில் இருக்கட்டுமே. உங்களுக்கு ஆட்ஷேபனை இருக்கா?” என அவன் தயக்கத்துடன் கேட்கவும், சஸ்விஹாவுக்கு அவன் கூட இருக்க ஆசையாக இருந்தாலும், அதையும் அடக்கிக்கொண்டு, பெற்றவர்களை தனித்து விட்டுவிட்டு போக மனமில்லாது,
“ஷரா! சத்தியன் தான் லாக்கப்பிலே.. அப்புறம் என்ன பயம்?” என எதிர் கேள்வி கேட்டாள். அவன் முகம் மாற அமைதியானான். அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. அவனது குணமில்லையே இது.
‘அய்யோ! அவர் என்ன மனநிலையில் இருக்காருன்னு தெரிஞ்சும், அதைப் புரிந்துகொள்ளாமல் எதுக்குடி அவசரப்பட்டு வாயை விட்டே?’ என தனது நெற்றியில் அடித்தவள். சட்டென்று அவனருகே அமர்ந்து,
“சாரிங்க!” என அவனது கரம் எடுத்து, மன்னிப்பு கேட்கவும், வைதேகி மகளை முறைத்துவிட்டு,
“மாப்பிளை! அவ உங்க சொத்து. உங்க விருப்பம். அழைச்சுட்டு போயிடுங்க. எங்களுக்கு நிம்மதியே இல்லாம இருக்கு. எந்த பிரச்சனை? எந்த ரூபத்தில்? எங்கே இருந்து வரப்போகுதோன்னு?” சொல்லவும், அவன் பேசாது இருந்தான். சஸ்விஹாவுக்கு கண்கள் கலங்க அவனைப்பார்த்து பார்வையால் ´மன்னிச்சுடேன்’ என கேட்டாள் அவன் எழுந்து கொண்டவனாக,
“நான் வரேன் அத்தை, மாமா” என அவன் கிளம்பவும், சஸ்விஹா பதறிப்போய் எட்டி அவன் கரம் பற்றி,
“ஷரா! நா..நா..என்னால்.. எனக்..” என அவள் திக்கினாள். வைதேகி கணவரைப் பார்த்து,
“நீங்க என்னங்க பேசாம இருக்கீங்க? மாப்பிளை சொல்றதுல உடன்பாடு இல்லையா?” என கேட்டார்.
“உன் பொண்ணுக்கு உடன் பாடு இல்லாத போது, நான் எப்படி வைதேகி வாய் திறக்கிறது?” என தந்தை சிறு வருத்தம், கோபம் கலந்து சொல்லவும், அவளுக்கு,
“அப்பா! என்னை போக சொல்றீங்களா? இல்லை கூடாதுன்னு சொல்றீங்களா?” என முறைத்தவாறே கேட்டாள்.
“நாங்க கூடாதுன்னு எப்போ சொன்னோம்? அவன் லாக்கப்பில இருந்தா, அவன் அண்ணன் வரமாட்டானா? இல்லை அவன் பிரண்ட்ஸ் வரமாட்டாங்களா? எல்லா பொறுக்கிகளும் நம்ம வீட்டைத்தானே சுத்திகிட்டு இருக்கானுங்க. நீ மாப்பிளை கூட இருந்தால், நாங்க ஒண்ணும் நினைக்கமாட்டோம். உன்னால அவருக்கும் பிரஷர் தான் இல்லையா? ரெண்டு பேரும் நைட்டு பிளைட் இருந்தா, கிளம்பி பாரிஸ் போயிடுங்க! அங்கேயே கல்யாணம் பண்ணிக்கோங்க. நாங்க வீடியோ காலில் வாழ்த்துறோம். அது எங்களுக்கு பெருத்த நிம்மதியாக இருக்கும்.” என விநாயகமூர்த்தி ஆதங்கத்துடன் குமுறவும், அக்ஷ்ரன் கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு சஸ்விஹாவைப் பார்த்து,
“மாமா இது சூப்பர் டக்கர் ஐடியா?” என்றான். அவளோ திகைத்து நிற்க, அக்ஷ்ரன் மொபைல் அலறவும், பார்த்தான். சரவணன் காலிங். என காட்டியது. காதில் வைத்தவன், சரவணன் “FIR போடவா வேண்டாமா?” என கேட்டு அழைத்திருந்தான். இவனும்,
“அந்த மிருகத்துக்கு FIR இன்னுமாடா நீ போடலை?” என இவன் மறுபடியும் சினம் கொள்ள ஆரம்பிக்க, சஸ்விஹா எட்டி அவனது தோளை அழுத்தி ,
´சினம் வேண்டாமே’ என கண்களால் கெஞ்சினாள். அவனும் தன்னை அடக்கியவாறு,
“மாமா FIR போடவா?” என அவரிடம் கேட்க,
“போட்டால் நான் வாழா வெட்டியாக வந்து நிற்பேன்” என குரல் வாசலில் வர, எல்லோரும் திரும்பினார்கள்.
சசிரேகா அழுத கண்களும், கசங்கிய புடவையுமாக நின்றிருந்தாள். பெற்றவர்கள் அதிர்வுடன், அவளை நோக்கி போக, சஸ்விஹா முகம் மாறினாள். அதைக்கவனித்த அக்ஷ்ரன் உருவ ஒற்றுமை சஸ்விஹாவின் சகோதரி என சொல்லவும், சரவணன் லைனில் இருக்கவும் நண்பனிடம்,
“ஒரு அஞ்சு நிமிஷம் தாடா! நானே கால் பண்றேன்” என சொல்லி வைத்தவன், மூளை வேகமாக கணக்கு போட்டு பார்த்தும் கொண்டது.
சஸ்விஹா அந்த இடத்தில் அவளின் வருகையை விரும்பாதவளாக ஒதுங்கி நின்றாள். அக்ஷ்ரனை போகவிட்டு இருக்கலாமோ? எனக் கூட தோன்றியது.
“என்னம்மா?” என பெற்றவர்கள் பதறிக்கொண்டு அவளிடம் வந்தார்கள்.
“அப்பா லாக்கப்பில் இருக்குற சத்தியன் மேல எந்த கேசும் போடாம, அவனை வெளியே விடணும். இல்லைன்னா, வாழாவெட்டியாக இந்த கூரை வீட்டுல குப்பை கொட்ட முடியாது, குளத்துல விழுந்துடுவேன்” என அவள் சொன்னதும், வைதேகி எட்டி அவளின் கன்னத்தில் ஒன்று கொடுத்தார்.
அக்ஷ்ரன் அதிர்ந்தவன், நகர்ந்து சோபாவில் போய் அமர்ந்து கொண்டான். அடுத்த பிரச்சனைக்கு ஓர் முடிவு எடுக்கும் வரை, அங்கிருந்து நகர விரும்பாதவனாக.
சஸ்விஹாவும் “மாத்தி, மாத்தி பிரச்சனைடா சாமி!” என நொந்து, முணுமுணுத்தவாறு அக்ஷ்ரன் அருகே வந்தமர்ந்து அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
“விஹா முதல்லே உன் கன்னத்துக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கணும்” என அவளின் கன்றிய கன்னத்தை அவன் வருட, அவளும்,
“உன் வருடலில், என் வலிகள் நிவாரணி பெறுகிறது” என கிசுகிசுக்க, அவன் இதழ் கொண்டு, குனிந்து இரு கன்னங்களிலும் ஒத்தடம் வைக்க, அவளோ,
“ஷரா! அங்கே பிரச்சனையின் மொத்த உருவம் அனுப்பிய அம்பு நிக்குது. நான் சாவகாசமா இந்த வருடல் ட்ரீட் மென்ட் எடுத்துக்குறேனே” என கெஞ்ச, அவனும் தன் தோளில் சாய்த்தவாறு,
“ம்” என்றான்.
***
வெளியே வைதேகியின் குரல்.
“குணத்தில் தான் நீ மாறுன்னா.. குடும்பத்துக்கு கூட நீ மாறுதாண்டி! நீ குதிச்சா, பாலை ஊத்தி காரியம் பண்ணிட்டு, நிம்மதியா இருப்போம். போடி!” என சாந்தமான வைதேகி மிரண்டு கொதித்தார்.
ஒரு மூத்த மகளின் வார்த்தைகளால் இளைய மகளின் வாழ்க்கை ஊசலாடுவதை அவரால் பொறுத்துக்கொண்டு இருக்கவே முடியாது போனது.
“வீட்டுக்கு உதவாத பிள்ளை, நாட்டுக்கு உதவணும். அதுவும் இல்லையா? நாண்டுக்கிட்டு செத்தாலும் கவலை வராது.”
“…”
“எந்த நேரம் உனக்கு அவ தங்கச்சியா வந்து பிறந்தாளோ? அவ பாவம் பண்ணல.. நான்தான் பாவம் பண்ணி, உன்னை பெத்து தொலைச்சுட்டேன்.”
“…”
“இன்னி வரை அவளை வாழவே விடமாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு சுத்துறே” என அவர் சீறவும்,
சஸ்விஹா உதட்டைக்கடித்துக்கொண்டு அக்ஷ்ரனை தோளை இறுகப் பற்றவும், அவளின் உடல் நடுங்குவதிலிருந்து சகோதரிகளுக்கு இடையிலான உறவை அளந்து கொண்டவன், இரு கைகளாலும் தன்னோடு நெருக்கமாக அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பே அவளுக்கு “நான் இருக்க எவர் உன்னை எது செய்துட முடியும்?” என சொன்னது. தலை தூக்கி அவனைக்காதலுடன் பார்க்க அவன் மெல்லகுனிந்து,
“உன் சிஸ்டர் லைப் ஸ்பாயில் ஆகிட கூடாது. எங்கே வந்து எப்படி பிளாக் பண்ணணும்ன்னு நல்லா தெரிஞ்சு வைச்சு இருக்காங்க. நாம அவனை விட்டுடலாம். வேற வழியில் இந்த குடும்பத்தை டீல் பண்ணணனும். அதை நான் பார்த்துக்கிறேன். நீ எதையும் நினைச்சு இப்படி இறுகி நிக்காதே!”
“…”
“இதுதான் முதலும், கடைசியும், நீ தொட்டதுக்கெல்லாம் இறுகிப்போகிறது. இந்த குணத்தின் அத்தியாயத்துக்கு, இப்பவே முற்றும் போட்டுடு. என்கூட வாழும் போது, இப்படி இருந்தேன்னா, உனக்கு வேற மாதிரி ட்ரீட்மெண்ட் நான் தரவேண்டி இருக்கும்” என அவன் ஒரு மிரட்டலுடன் சொல்லவும், அவளோ,
“என்னோட நேச்சுரல் குணம் ஷரா! மேக்சிமம் மாத்தப்பார்க்குறேன்” என சோகமாக சொல்லிக்கொண்டாள்.
“பர்ஸ்ட் நைட் அன்று நான் ரொமான்ஸ் பண்ண, உன்னை பெட்டில சாய்க்கும் போதும், நீ இப்படி இறுகப்போகிறாயோ என எனக்கு லேசா டவுட்டு வருது?” என அவன் நாடியில் விரல் வைத்து, அவனது பாணியில் யோசிப்பது போல நடிக்கவும், சஸ்விஹா விலுக்கென்று விலகி ,
“உன்னை!” அவனது முதுகில் ரெண்டு அடி செல்லமாக கொடுத்தாள்.
“அப்போ! உனக்கு மூட் அவுட்டாக விடமாட்டேன்டான்னு சொல்லாம சொல்றியா?” என அவன் குறும்புடன் கேட்கவும்,
“டேய்!” என பற்களை கடித்து அவனை முறைக்க முன் முந்திக்கொண்டது அவளது முகம் சிவந்து பூரிக்க. அவனது தோளிலேயே முகம் புதைத்தாள்.
அக்ஷ்ரன் ஏதோ பேச வாயெடுத்தவன், விநாயகமூர்த்தியின் குரல் அவனை நோக்கி வர, சஸ்விஹாவிடமிருந்து விலகி, எழுந்து, எட்டு வைத்து, அவரிடம் வந்தான்.
Recent Comments